Eyeview Sri Lanka

அறிமுகப்படுத்தப்படும் ZERO-DOWN : VIMAN ஜா-எலவில் புரட்சிகரமான வீட்டு உரிமைத் திட்டத்தை வழங்கும் John Keells Properties மற்றும் யூனியன் வங்கி 

Share with your friend

VIMAN ஜா-எல குடியிருப்புத் திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்ய விரும்புவர்களுக்கு ZERO-DOWN வீட்டு உரிமைத் திட்டத்தை வழங்குவதற்கான கூட்டாண்மை John Keells Properties (JKP) நிறுவனத்திற்கும் யூனியன் வங்கிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமைக்கான அணுகலை இலகுவாக்குவதில் இரண்டு தொழில்துறை முன்னணியாளர்கள் கொண்டுள்ள பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இருந்து இந்த நிதித் தீர்வு உருவாகியிருப்பதுடன், இது VIMAN ஜா-எல குடியிருப்புத் திட்டத்தில் கொள்வனவு செய்ய விரும்புவர்கள் முன்பணம் செலுத்தும் சுமையின்றிக் கொள்வனவு செய்ய வசதியை ஏற்படுத்துகின்றது. ZERO-DOWN மூலம், யூனியன் வங்கி திட்ட நிதியில் 75% ஐ முற்பணமாக வழங்கும் என்பதுடன், பின்னர் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் வங்கியால் வழங்கப்பட்ட தொகைக்கு திட்ட காலத்தில் மாதாந்தம் சமமான தவணைகளை மட்டுமே செலுத்த வேண்டும்.

John Keells Properties நிறுவனம் மற்றும் யூனியன் வங்கியினால் இணைந்து வழங்கப்படும் ZERO-DOWN ஆனது வெறுமனே நிதித் தயாரிப்பு மாத்திரமன்றி, எப்போதும் இல்லாத அளவுக்கு VIMAN ஜா-எல திட்டத்தை அடையக்கூடியளவுக்கு ரியல் எஸ்டேட் துறையை மாற்றியமைக்கும் நோக்கத்துடன், அனைவருக்கும் வாய்ப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கும் உறுதிமொழியாகும். இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் நெகிழ்வுப்போக்கு மிக்க, மலிவான நிதியளிப்புக்கான தெரிவுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், வீட்டுஉரிமையைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இந்த தனித்துவமான தீர்வு காலத்தின் தேவைக்கு ஏற்ற ஒன்றாகும். ZERO-DOWN திட்டத்திட்டமானது VIMAN ஜா-எல குடியிருப்புத்திட்டத்தில் சாத்தியமான வாய்ப்புகளை எந்தவித முன்கூட்டிய செலவுகளும் இல்லாமல் பாதுகாக்க உதவுகிறது. இது குடியிருப்பைக் கொள்வனவு செய்பவர்களைத் தடுக்கும் ஆரம்ப நிதித் தடைகளைத் தகர்ப்பதுடன், கொள்வனவு செய்பவர்கள் தங்கள் நிதித் திட்டத்தை தெளிவு மற்றும் நம்பிக்கையுடன் அணுகவும் இது உதவுகின்றது.

ZERO-DOWN திட்டமானது இலங்கையில் வீட்டின் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான தொலைநோக்கு அணுகுமுறையைப் பிரதிநிதித்துவம் செய்வதாக John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், John Keells Group இன் பிரதித் தலைவருமான நதீம் ஷம்ஸ் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “குடியிருப்புங்களை வாங்குவதில் உறுதியாக இருக்கும் பலருக்கு முன்பணத்திற்கான செலவு அதைரியப்படுத்துவதாக அமைகின்றது. எனினும், ZERO-DOWN  திட்டத்தின் ஊடாக VIMAN ஜா-எல திட்டத்தில் தொடர்மாடிக் குடியிருப்பொன்றை வாங்க விரும்புவர்களுக்கு நெகிழ்வான நிதித் தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். எமது அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக மாத்திரமன்றி வீட்டின் உரிமையை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் புதிய உலகத்தை உருவாக்குவது என்ற கோட்பாட்டில் John Keells Properties நிறுவனம் அர்ப்பணிப்புடன் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது” என்றார்.

உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ZERO-DOWN திட்டத்தை நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்துவதில் யூனியன் வங்கி பெருமை அடைகிறது” என யூனியன் வங்கியின் Chaya Jayawardana, Senior Vice President – Retail Banking தெரிவித்தார். “இந்த முயற்சியானது முன்பயணத்தைச் செலுத்துவது என்ற நிதி நெருக்கடி இன்றி  நிதி நெருக்கடியின்றி நெகிழ்வுத்தன்மை மற்றும் நம்பிக்கையுடன் VIMAN ஜா-எல திட்டத்தில் வீடொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

VIMAN ஜா-எல பற்றி

ஆறு ஏக்கர் விஸ்தீரணத்தைக் கொண்ட VIMAN ஜா-எல திட்டத்தில்  65% நிலம் திறந்தவெளி மற்றும் வசதிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், செப்டம்பர் 2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் அறிமுகத்திலிருந்து, வீட்டைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை விரைவாக ஈர்த்தது. இதன் 1வது மற்றும் இரண்டாவது கட்டங்களில் உள்ள 80%அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தனித்துவமான சமூகம் எதனை வழங்குகின்றது என்பதைப் பார்ப்பதற்கான சரியான நேரம் இதுவாகும். ஜா-எலவின் மையப்பகுதியில் அமைந்துள்ள VIMAN ஜா-எல கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெறும் 10 நிமிடங்களில் கொழும்பு நகரத்திற்கு 30 நிமிட பயணத்தை எளிதாக்குகிறது. பசுமை மிக்க மத்திய தோட்டப்பகுதி, தியான கூடம், வெளிப்புற விளையாட்டு இடம், சிறுவர்கள் விளையாட்டு இடம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம் உள்ளிட்ட 15 விசேட அம்சங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

John Keells Properties பற்றி

John Keells Properties இலங்கையிலுள்ள மிகப்பெரிய ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களில் ஒன்றாகும். தரம், புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்புக்காக இந்நிறுவனம் அறியப்படுகின்றது. புதிய உலகத்தை உருவாக்குதல்  என்ற அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் ஊடாக, இலங்கையில் நவீன வாழ்வை மறுவரையறை செய்யும் வெற்றிகரமான செயற்திட்டங்களுடன், John Keells Properties நவீன வாழ்வின் எல்லைகளைத் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

யூனியன் வங்கி பற்றி

யூனியன் வங்கியானது சில்லறை வணிகம், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் பெருநிறுவனப் பிரிவுகளுக்கு பரந்த அளவிலான நிதித் தீர்வுகளை வழங்கும் இலங்கையின் ஒரு முக்கிய தனியார் வணிக வங்கியாகும். அதன் வலுவான மூலதனத் தளம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு பெயர் பெற்ற யூனியன் வங்கி, CG Corp Global இன் இணை நிறுவனமாகும், இது ஒரு முன்னணி பல்தேசிய நிறுவனம் என்பதுடன், நேபாளத்தில் Nabil வங்கியின் மிகப்பெரிய பங்குதாரர் ஆகும். யூனியன் வங்கி இலங்கை முழுவதும் 61 கிளைகளைக் கொண்டிருப்பதுடுன், டிஜிட்டல் வங்கி, 24 மணி நேர அழைப்பு மையம் மற்றும் நாடு முழுவதும் ATM வலையமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், நிதிச் சேவைகளுக்கு வசதியான அணுகலை உறுதி செய்துவருகின்றது. யூனியன் வங்கியின் துணை நிறுவனங்களில் National Asset Management Limited மற்றும் UB Finance company Limited ஆகியவையும் அடங்குகின்றன.

VIMAN ஜா-எல குடியிருப்புத் திட்டத்திற்கான வீட்டுஉரிமைத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும் அல்லது John Keells Properties நிறுவனத்தை +94 706 062 062 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.


Share with your friend
Exit mobile version