அலியான்ஸ் லங்கா பாங்கசூரன்ஸ் சேவைகளை வழங்குவதற்காக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் கைகோர்ப்பு

Share with your friend

அலியான்ஸ் லங்கா பாங்கசூரன்ஸ் சேவைகளை வழங்குவதற்காக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. அலியான்ஸ் லங்காவுக்கு தனது சென்றடைவை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்திருப்பதுடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு தனது சேவை வழங்கல்களில் பெறுமதி சேர்ப்பதற்கும் இந்தப் பங்காண்மை ஏதுவாக அமைந்திருக்கும். இரு தரப்புக்கும் இந்தப் பங்காண்மை வெற்றியீட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கும். 3ஆண்டு கால பங்காண்மை பயணத்தில், இலங்கையின் மாபெரும் பாங்கசூரன்ஸ் பங்காண்மையாக அமைந்திருக்கும். இந்தப் பங்காண்மையினூடாக, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் மற்றும் மோட்டர் சாராத காப்புறுதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு விசேட ப்ரீமியம் கட்டணங்களை அனுபவிக்க முடியும் என்பதுடன், பெருமளவான இதர அனுகூலங்கள் மற்றும் வெகுமதிகள் போன்றன இந்தப் பங்காண்மையில் அடங்கியுள்ளன.

அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கனி சுப்ரமணியம் கருத்துத் தெரிவிக்கையில், “பாங்கசூரன்ஸ் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது பெறுமதிகள் மற்றும் இலக்குகள் போன்றன ஒன்றிணைந்து காணப்படுவதுடன், நாம் டிஜிட்டல் மயமான, ஒப்பற்ற மற்றும் சௌகரியமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்துவது பற்றி சிந்திப்பதுடன், இயலுமானவரை பெறுமதி சேர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றோம். மேலும், எமது வளங்களைப் பகிர்ந்து, ஒன்றாக செயலாற்றுவதனூடாக, எமது இரு நிறுவனங்களினாலும் எமது பங்காளர்களுக்கு சிறந்த பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். நாம் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதுடன், முன்னரை விட காப்புறுதியை சௌகரியமானதாகவும், அணுகக்கூடியதாகவும் பேணுவதற்கும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

வழங்கப்படும் காப்புறுதிகளினூடாக வாகனங்களுக்கு பரிபூரண காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதுடன், 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இலவச மருத்துவ காப்புறுதி அடங்கலாக, இலவச வெள்ள மற்றும் இயற்கை அனர்த்த காப்பீடுகள் மற்றும் இலவச லீசிங்/வாடகைக் கொள்வனவு உடன்படிக்கைகள், எயார் பேக் காப்பீடுகள் மற்றும் இலவச வாடகை வாகன கட்டண மீளளிப்புகள் போன்ற விசேட அனுகூலங்களையும் கொண்டிருக்கும். ஏனைய அனுகூலங்களில் அவசர மருத்துவ செலவுகள், வின்ட்ஸ்கிரீன், வாகனத்தில் பயணிக்கும் பிள்ளைக்கு (baby-on-board) பாதுகாப்பு, பொருட்களுக்கான காப்பீடு, லீசிங் வாடகை மற்றும் விபத்து நேரிட்டால் தங்குமிட கட்டண மீளளிப்புகள் மற்றும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன. விபத்து பழுதுபார்ப்புகளுக்கு, வாடிக்கையாளர்களுக்கு பங்காளர் கராஜ்கள் மற்றும் இதர கராஜ்களிலிருந்து விசேட சலுகைகளைப் பெற முடியும். இதில் “click and go” பழுதுபார்ப்புகள், பங்காளர் கராஜ்களில் பழுதுபார்ப்பு உத்தரவாதங்கள், உரிமையாளர் கணக்கில் அறவிடாத வசதிகள் மற்றும் இதர கராஜ்களுக்கு இலவசமாக இழுத்துச் செல்கை வசதிகள் போன்றன அடங்கியுள்ளன. மோட்டார் சாராத காப்புறுதிதாரர்களுக்கும் பரந்தளவு பிரத்தியேக அனுகூலங்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்த குணதிலக பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “அலியான்ஸ் லங்காவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வரவேற்கின்றது. டிஜிட்டல் மயமாக்கலில் முன்நிலையில் திகழும் வங்கி எனும் வகையில், எமது புத்தாக்கமான டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்புகளினூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு அனுகூலமளிப்பதற்காக அலியான்ஸ் நிறுவன சேவைகளை இணைத்து வழங்குவதற்கும், டிஜிட்டல் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்க்கின்றோம். பரஸ்பர பயனளிக்கும் உறவை நாம் எதிர்பார்ப்பதுடன், எமது பங்காளர்களுக்கு இந்த பங்காண்மை பற்றி அறிவிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

அலியான்ஸ் லங்காவின் டிஜிட்டல் சேவைகளுடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பரந்தளவு டிஜிட்டல் வங்கிச் சேவைகளின் அனுகூலங்களை வாடிக்கையாளர்களால் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். இலங்கையின் காப்புறுதித் துறையில் டிஜிட்டல் செயற்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் ஆகியவற்றில் முன்னோடியாக அமைந்திருக்கும் அலியான்ஸ் லங்கா, My Allianz App மற்றும் Allianz eMotor Partner Portal ஆகிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply