பேண்தகைமைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இலங்கையின் மிகப்பெரிய முழுமையான ஒருங்கிணைந்த அலுமினிய உற்பத்தியாளரான Haleys குழுமத்தின் துணை நிறுவனமான Alumex, பசுமையான எதிர்காலத்திற்கான தனது முன்முயற்சியின் ஒரு பகுதியாக, கழிவாக வீசப்பட்ட அலுமினிய குடிபான பேணிகளை (UBCs) சேகரித்து மீண்டும் பயன்படுத்தும் ஒரு முன்னோடித் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
பயன்படுத்திய அலுமினிய குடிபான பேணிகளை அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களில் சேகரிக்க பெரிய கொள்கலன்களை Alumex அமைத்துள்ளது மற்றும் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த முன்முயற்சியானது, அலுமினியக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் பயனுள்ள வகையில் அகற்றுவதற்கு மக்களை ஊக்குவிக்கிறது, இதனால் நாம் நமது சுற்றுப்புறங்களை சுத்தமாகவும் சூழலுக்கு ஏற்றவாறு வைத்திருக்க முடியும். நீர் நிலைகள் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தவும் இது சிறந்த தீர்வாகும்.
“பெருநிறுவன மதிப்பு அமைப்பில் கட்டமைக்கப்பட்ட Alumexஇன் முக்கிய மதிப்பு, நல்ல குடியுரிமையாகும். Hayleys Lifecode படி முன்னேறி, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கும் நிலையான வணிகத்தை உருவாக்க நாங்கள் முயற்சிப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிரமாக பங்களிக்கிறோம்.”
“உலகெங்கிலும் உள்ள தொழில்துறையில் மூலப்பொருட்களின் மறுசுழற்சி ஒரு முக்கிய விடயமாகும். எங்களின் அனுபவத்தின் மூலம், உலகளாவிய உலோக கலவை தரநிலைகளைப் பின்பற்றி, எங்களின் உற்பத்திச் செயல்பாட்டில் வீசப்படும் அலுமினிய குடிபான பேணிகளை மீண்டும் பயன்படுத்தலாம். இதன் மூலம், குறைந்த கார்பன் தடம் கொண்ட ஒரு தயாரிப்பை உலக சந்தையில் வழங்குவதும் தனித்துவமானது.” என Alumex நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெதிவெல தெரிவித்தார்.
Aluminum Stewardship Initiative இன் உற்பத்தி மற்றும் உருமாற்றப் பிரிவின் புதிய உறுப்பினரான Alumex, தரச் சான்றிதழில் ஈடுபடும் முதல் இலங்கை அலுமினிய உற்பத்தியாளர் என்பதுடன், பொறுப்பான உற்பத்தி, வள மூலங்கள் மற்றும் பொறுப்பேற்றலை ஊக்குவிப்பதற்கு உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றும்.வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத்திற்கான உறுதியான அர்ப்பணிப்புக்காக Alumex சமீபத்தில் Asia Integrated Reporting விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் பங்குதாரர்களுக்கு அதன் மதிப்பு உருவாக்கத்தை சுருக்கமாகத் தெரிவித்ததற்காக ஒருங்கிணைந்த அறிக்கை (SME) பிரிவில் வெண்கல விருதையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.