Site icon Eyeview Sri Lanka

அவுஸ்திரேலியாவின் முதல் தர பல்கலைக்கழகமான குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்தில் பரிமாற்றத்துக்கான வழித்தடத்துடன் பொறியியல் மற்றும் முகாமைத்துவ பாடநெறியை வழங்கும்  SLIIT

Share with your friend

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்துடன் SLIIT அண்மையில் ஏற்படுத்திக் கொண்ட தனித்துவமான கூட்டிணைப்பு மற்றும் பரிமாற்றத்துக்கான வழித்தடம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை மாணவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது.

வணிக மற்றும் பொறியியல் கல்விப் புலத்தைக் கொண்ட மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையில் ஒரு பகுதியை இலங்கையில் பூர்த்திசெய்து பின்னர் அதனை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பென் நகரில் உள்ள குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழத்திற்கு மாற்றம் செய்து அங்கு பட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் தனித்துவமான கூட்டிணைப்பு வழி ஏற்படுத்துகிறது.

பொறியியல் பட்டத்தைப் பயிலும் மாணவர்கள் இளங்கலை பொறியியல் (ஹார்னஸ்) – சிவில், இளங்கலை பொறியியல் (ஹார்னஸ்) – இலத்திரனியல், இளங்களை பொறியியல் (ஹார்னஸ்) – இயந்திரவில் ஆகிய பட்டங்களின் முதல் இரண்டு வருடங்களையும் இல் பூர்த்திசெய்து, இறுதி இரண்டு ஆண்டுகளுக்கான கல்விகளையும் குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதேநேரம் வணிகப் பட்டத்தைத் தெரிவுசெய்யும் மாணவர்கள் வணிக நிர்வாக இளமாணி, வணிக இளமாணி, பொருளாதார இளமாணி ஆகிய பட்டப் பாடநெறிகளை ஒரு வருடம் இங்கு தொடர்ந்த பின்னர் பெருமைபெற்ற குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று எஞ்சிய இரண்டு வருடங்களையும் பூர்த்திசெய்து பட்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 

கற்பித்தலின் சிறப்பில் வலுவான கவனம் செலுத்துவதன் ஊடாக குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகம் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தொடர்ச்சியாக தரப்படுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக கற்பித்தலுக்கான அவுஸ்திரேலிய விருதை ஏனைய பல்கலைக்கழகங்களைவிட குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகமே அதிக தடவை பெற்றிருப்பதால் இப்பல்கலைக்கழகம் கல்வியின் சாதனையாளர்கள் மற்றும் சிறந்த ஆர்வமுடைய, வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்து வருகிறது. 

2021 QS உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தலில் குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகம் 46வது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருப்பதுடன், 2021 உலக பல்கலைக்கழகங்களின் கல்விசார் தரப்படுத்தலில் 54வது இடத்திலும், 2021ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழகத்தின் டைம்ஸ் உயர் கல்வி தரப்படுத்தலில் 62வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அவுஸ்திரேலியாவில் Research – Research Nature Index Table 2020 இல் குயின்ஸ்ட்லான்ட் பல்கலைக்கழகம் 03வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2019ஆம் ஆண்டின் சிறந்த QS மாணவர்கள் உள்ள நகரமாக இப்பல்கலைக்கழகம் 22வது இடத்தில் தரப்படுத்தப்பட்டது.

விதிவிலக்கான கல்விச் செயற்பாடு, ஆய்வு மற்றும் துறைசார் பணியாளர்கள் போன்றவற்றுக்கான அர்ப்பணிப்புடன் இந்தப் பல்கலைக்கழகம் 2020 சிறந்த பல்கலைக்கழக வழிகாட்டல்களில் -மாணவர்கள் மத்தியில் கேள்வி, பணியாளர்களின் தகுதி, கற்றல் வளங்கள் மற்றும் ஒட்டுமொத்த- நான்கு நட்சத்திரங்களைப் பெற்றுள்ளதுடன், 2018ஆம் ஆண்டு சர்வதேச மாணவர்களின் திருப்தி குறித்த மதிப்பீட்டில் 91 விகிதத்தைப் பதிவு செய்திருப்பதுடன், 2018 அவுஸ்திரேலியாவுக்கான ஆய்வுத் திறமையில் உலகத் தரத்தில் ஆய்வுகளை மேற்கொண்டதில் 100 விகிதத்தையும் இப்பல்கலைக்கழகம் பதிவுசெய்துள்ளது.

அறிவை உருவாக்குதல், பாதுகாத்தல், பரிமாற்றம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் சிறந்து விளங்க முயற்சிக்கும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் நிறுவனங்களில் ஒன்றாக பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறந்த உலகத்துக்கான தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்களை உருவாக்க பல்கலைக்கழகம் கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக கற்பித்தல்களை மேற்கொள்வதுடன், அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

உலக வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் பங்களிப்புச் செலுத்தவல்ல தலைமைத்துவம் மிக்க பட்டதாரிகளை உருவாக்குவதில் குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகம் நன்மைதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது. குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்களின் கடுமையான மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய வேலை அணுகுமுறை காரணமாக பணியிடங்களில் அவர்கள் பெறுமதிமிக்க சொத்துக்களாக விளங்குகின்றனர். 

குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்துடன் SLIIT ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டாண்மையானது இலங்கை மாணவர்களுக்கு நன்மையையும், வாய்ப்பாகவும், தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தெரிவுகளை மேற்கொள்வதற்கும் அதன் ஊடாக தமது எண்ணங்களை அடைவதற்கும் வழியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதுடன், தெரிவுசெய்யப்பட்ட துறையில், சமூகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தலைவர்களாகத் தம்மை உருவாக்கிக் கொள்ளவும் மாணவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.


Share with your friend
Exit mobile version