ஆசியாவிலும் இலங்கையிலும் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக Expack தொடர்ச்சியாக தரப்படுத்தல்

Share with your friend

பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை சகல ஊழியர்கள் மத்தியிலும் பேணும் கூட்டாண்மைக் கலாசாரத்தைக் கொண்டுள்ள நாட்டின் நிலைபேறான அலைவுநெளிவான (Corrugated) பொதியிடல் தீர்வுகள் வழங்குநரான Expack Corrugated Cartons Ltd நிறுவனம் தொடர்ச்சியான மூன்றாவது வருடமாகவும் ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

வருடாந்தம் Great Place to Work இனால் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படும் நிறுவனங்கள் வரிசையில், பிராந்தியத்தின் பல்வேறு நிறுவனங்கள் உள்ளடங்கியிருப்பதுடன், தொடர்ச்சியாக இரு ஆண்டுகளாக தேசிய நிரலில் உயர்ந்த ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. இம்முறை இந்த கருத்தாய்வு 3.3 மில்லியனுக்கு அதிகமான ஊழியர்கள் மத்தியில் பதினாறுக்கு மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக நான்காவது தடவையாகவும் Expack பெயரிடப்பட்டிருந்தது. இலங்கை மற்றும் ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த நாடுகளில் ஒன்றாக தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டிருந்த நிறுவனங்களில் முதலாவதும் ஒரே பொதியிடல் தீர்வுகள் வழங்கும் நிறுவனமாக Expack அமைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு பல்வேறு சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்திருந்த போதிலும், Expack இன் ஊழியர்கள் உயர் மீட்சித்திறனை வெளிப்படுத்தி, உறுதியாக ஒன்றிணைந்து செயலாற்றியிருந்ததுடன், உரிமையாண்மையை தம்வசம் கைக்கொண்டு, நிறுவனத்தை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கு முக்கிய பங்காற்றியிருந்தனர்.

இனம், மதம், வயது, பாலினம், பண்புகள் மற்றும் நம்பிக்கைகள் என எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் உகந்த பணியிடத்தை உருவாக்கும் கம்பனியின் நோக்கத்துக்கான சிறந்த எடுத்துக் காட்டாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. அத்துடன், தம்மில் சிறந்த நிலைக்கு வலுச் சேர்த்து உயர்த்துவதற்கு ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.

கம்பனியின் தந்திரோபாய தலைமைத்துவ நிலையைக் கொண்டுள்ள தவிசாளர் சத்தார் காசிம், இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான அபர்தீன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும், குழுமப் பணிப்பாளராகவும் திகழ்கின்றார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களை பல தசாப்த காலமாக வெற்றிகரமாக வழிநடத்திய அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், தமது பெருமளவு அறிவு மற்றும் அனுபவத்தை தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்வதுடன், Expack இன் இலக்குகளை எய்துவதற்கு வழிநடத்துபவராகவும் அமைந்துள்ளார். அத்துடன், இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் அலைவுநெளிவான (Corrugated) பொதிகள் விநியோகத்தராக Expack நிறுவனம் திகழ வேண்டும் என்ற நோக்கத்துக்கமைய வழிநடத்துகின்றார். 

மருந்துப் பொருட்கள், பொதியிடல், நுகர்வுப் பொருட்கள், ஆகாய போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளல், தேயிலை மற்றும் கோப்பி, வலு, மீள்சுழற்சி, பண்ணை, விநியோகச் சங்கிலி மற்றும் டிஜிட்டல் என பல துறைகளில் அபர்தீன் ஹோல்டிங்ஸ் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. 29 க்கு மேற்பட்ட நாடுகளில் 11 துறைகளில் குழுமம் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. இவற்றினூடாக சுமார் 1300க்கும் அதிகமான ஊழியர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

திறந்த கதவுக் கொள்கையை Expack பின்பற்றுவதுடன், எந்தவொரு நபரும் எந்த வேளையிலும் நிர்வாகத்திடம் எதனைப் பற்றியும் கலந்தாலோசிக்க முடியும். இதனூடாக 300க்கும் அதிகமான ஊழியர்களில் அனைவரின் கருத்துகளும் செவிமடுக்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. நிறுவனத்தின் தலைமைத்துவத்திலிருந்து இந்த நம்பிக்கை பின்பற்றப்படுகின்றது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை Expack தன்னகத்தே கொண்டுள்ளது. தன்னாட்சி, வலுவூட்டல், ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்த செயற்பாடு போன்றன சிறந்த தொழில் தன்னிறைவை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையில் WRAP சான்றிதழைப் பெற்றுக் கொண்ட முதலாவது அலைநெளிவுள்ள (corrugated) carton உற்பத்தியாளராக Expack திகழ்கின்றது. நிறுவனம் ISO 9001-2015, ISO 14001-2015 மற்றும் FSC COC சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.நிலைபேறாண்மை தொடர்பில் உறுதியாக கவனம் செலுத்துகின்றதுடன், சூழலுக்கு நட்பான பல கொள்கைகளை நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளது. NCE-ஏற்றுமதி விருதுகள், NCCSL-தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகள், இலங்கை பொதியிடல் கல்வியகத்தின் லங்கா ஸ்டார் விருதுகள் மற்றும் CCNI Top 10 விருது போன்ற பல விருதுகளை வெற்றியீட்டியுள்ளது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply