Eyeview Sri Lanka

ஆய்வுகளின் முன்னோடி மற்றும் ஒத்துழைப்புக்கான மையமாக அங்கீகாரம் பெற்றுள்ள SLIIT  இன் பொறியியல் பீடம் 

Share with your friend

நவீன பொறியியல் சவால்களுக்கு தீர்வுகளைக் காண்பதில் கவனம் செலுத்தி, அதிர்வலையை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார முறைமையை உருவாக்கித் ஆய்வு மற்றும் ஒத்துழைப்பில் தன்னை முன்னோடியான மையமாக SLIIT  இன் பொறியியல் பீடம் தன்னை நிலைநிறுத்தியுள்ளது

பாரம்பரிய எல்லைகளை மீறும் ஆற்றல்மிக்க கலாச்சாரத்துடன், நவீன பொறியியல் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிக்கப்பட்ட எட்டு ஆற்றல்மிக்க ஆய்வுக் குழுக்களின் மூலம் புத்தாக்கம் மற்றும் ஆய்வில் முன்னணி என்ற ஸ்தானத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கணினியின் விஷன்ஃதானியங்கி தொழில்துறை, ரொபோட்டிக்ஸ் மற்றும் தனியங்கி அமைப்புக்கள், புவியியல்தொழில்நுட்பம் மற்றும் புவியியல் சுற்றுச்சூழல், போக்குவரத்து பொறியியல் மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழலில் நிலைப்புத்தன்மை போன்ற பொறியியல் துறையின் முக்கியமான விசேட விடயங்கள் பற்றி ஒவ்வொரு குழுவும் ஆராய்ந்தன. சமகால நிஜ உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செயலாற்றுவதற்கான கூட்டுத் தளங்களாக அவை செயலாற்றுகின்றன.

தற்பொழுது முன்னெடுக்கப்படும் கூட்டாண்மையின் ஊடாக பொறியியல் பீடம் தொழில்துறையினருடன் இணைந்து ஈடுபடுகிறது. SLIIT  பணியாளர்களின் முயற்சிகள் மற்றும் தொழில்துறையின் கூட்டாண்மைகளில் ஈடுபாடு காண்பித்து வரும் அதேநேரம், அதிகரித்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான மானியங்கள் மற்றும் தொடர்புகளை உருவாக்கும் வகையில் தொடர்சியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில் Daiki Axis, MASKreeda, Linea Aqua போன்ற தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை போன்ற அரசாங்க நிறுவனங்களுடன் ஏற்படுத்தியுள்ள ஒத்துழைப்புக்கள் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை எதிர்கொள்ளும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்த சவால்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் பங்களிப்புச் செலுத்த பொறியியல் பீடத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

கல்கிரே பல்கலைக்கழகத்துடன் அண்மையில் ஏற்படுத்திக்கொண்ட ஒத்துழைப்பின் ஊடாக, உயிர்வாயு பற்றிய ஒரு விரிவான ஆய்வில் கவனம் செலுத்தி, உலகளாவிய முக்கியத்துவும் வாய்ந்த ஆராய்ச்சியில் பீடத்தின் ஈடுபாட்டை நிரூபிக்க முடிந்துள்ளது. தற்பொழுது முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் பொறியியல் தீர்வுகளை வடிவமைப்பதில் பீடத்தின் வகிபாகத்தை நிலைநிறுத்தும். மேலும், கல்கிரே பல்கலைக்கழகம், மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டாண்மைகளின் ஊடாக தமது திறனங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு ஆய்வாள்ரகளை ஒன்றிணைக்கின்றன.

அத்துடன், உலகில் காணப்படும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும்போது பீடத்தின் உறுப்பினர்கள் ஆய்வுக்கான மானியங்களைப் பெற்றுக்கொள்வர். உதாரணமாக, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த சவால்களை வெற்றிகொள்ளும் பிரச்சினையை எதிர்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் த்ரீ லங்கா திட்டத்தில் பீடத்தின் பல்வேறு உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். 

உத்தேச தொழில்துறை ஈடுபாட்டுப் பிரிவை 2024ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவுள்ளமை பீடம் அடைந்த முக்கியமான வெற்றிகளில் ஒன்றாகும். ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பயிற்சி பெறும் பொறியியலாளர்கள் இணைந்து இதற்கான கட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பீடத்தின் வருடாந்த மாநாடான பொறியியல் தொழில்நுட்பம் தொடர்பான SLIIT  இன் சர்வதேச மாநாடு (SICET)ஆய்வுகளுக்கு வலுவான ஒத்துழைப்பை வழங்குகின்றது. 2022ஆம் ஆண்டு முதன் முதலில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு இது வருடாந்தம் நடத்தப்பட்டு வருவதுடன், இது உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு ஆய்வுப் பத்திரிகைகள் மற்றும் பங்கேற்பாளர்களை ஈர்த்துள்ளது. இதனுடன், இணைந்ததாக அறிவைப் பரப்பும் நோக்கில் அரையாண்டு ஆய்விதழொன்றும் வெளியிடப்பட்டு வருகிறது.

கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பீடத்தின் உறுப்பினர்கள், இளமானிப் பட்டதாரிகள், ஏறத்தாழ 20 MPhil மற்றும் PhD பட்டதாரி மாணவர்கள் போன்ற புதிய முன்னோக்குகள் மற்றும் ஆராய்ச்சியில் அனுபவம் வாய்ந்த தலைமைத்துவதினால் பொறியியல் பீடத்தின் குழு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது புத்தாக்கத்தில் SLIIT  இன் பொறியியல் பீடத்தை முன்னிலையில் வைப்பதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் சிறந்த பயிற்சிக்கான களத்தை அமைத்துக்கொடுக்கிறது. ஆய்வுக்குத் தேவையான பரிசோதனைகளைச் செய்வதற்கு பொறியியல் பீடத்தில் காணப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வுகூடம் சிறந்த வாய்ப்புக்களை வழங்குகிறது. 

சுறுசுறுப்புள்ள குழுக்கள் தொடர்ச்சியாக ஆய்வுக் கட்டுரைகளைப் பிரசுரிக்கும் துடிப்பான ஆய்வுக் காலசாரத்தையும் இப்பீடம் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் பீடத்தின் உறுப்பினர்கள  Q1 மற்றும் Q2  ஸ்கோபஸ் அட்டவணைப்படுத்தப்பட்ட பத்திரிகைகளில் 40 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டனர், இது அவர்களுக்கு ஆராய்ச்சி விருதுகளை வழங்கும் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பலகமான கலாச்சாரத்தைத் தொடரும் வகையில், 2023 ஜனவரி முதல் ஜூலை வரையில் 20க்கும் மேற்பட்ட கட்டுரைகள் அந்த உயர் தாக்க இதழ்களில் வெளியிடப்பட்டன.

உள்ளக மாதாந்த மன்றங்களுக்கு ஆசிரியப் பிரிவில் உள்ள ஆய்வாரள்களை ஒன்றிணைத்து, திறந்த விவாதங்களுக்கு ஒரு இடத்தை வழங்கவும், மேம்பட்ட கூட்டுச் சூழலை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்தரங்குகள் அறிவுப் பகிர்வு மற்றும் தாக்கமான பங்களிப்புகளை உறுதி செய்கின்றன. இந்த அமர்வுகள் புதுமையான, குறுக்கு-ஒழுங்கு தீர்வுகளுடன் நவீன பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான மற்றொரு கூட்டு தளமாக செயல்படுகின்றன.

கல்வித்துறைக்கு அப்பால் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் ஆசிரியக் குழு, கொள்கை மேம்பாட்டிற்கான பார்வைகளை தீவிரமாகப் பங்களிக்கிறது. கூடுதலாக, கட்டிடத் தகவல் மாடலிங் மற்றும் மின்னழுத்த ஸ்திரத்தன்மை மதிப்பீடு போன்ற முக்கிய தலைப்புகளிலான செயலமர்வுகள் தொழில் வல்லுநர்களுக்காக நடத்தப்பட்டன, இது அறிவுப் பரவலுக்கான ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகின்றது. 


Share with your friend
Exit mobile version