இந்த பண்டிகைக் காலத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ‘Season of Giving’ திட்டத்தை Caritas உடன் இணைந்து அறிமுகப்படுத்துகிறது HNB

Share with your friend

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB, பண்டிகைக் காலங்களில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மன உறுதியை மேம்படுத்துவதற்காக Caritas Sri Lanka உடன் இணைந்து அதன் முன்னணி டிஜிட்டல் கட்டணப் செயலியான (App) SOLO மூலம் ‘Season of Giving’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் சமூகப் பிரிவான ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான Caritas Sri Lanka, நாடு முழுவதும் உள்ள 12 மறைமாவட்டங்களில் முக்கிய மனித மேம்பாட்டுத் திட்டங்களுக்காகப் பணிபுரியும் மிகப்பெரிய மற்றும் மிகவும் மரியாதைக்குரிய மனிதாபிமான அமைப்புகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முகமாக Caritas தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்விற்கு கொழும்பு துணை ஆயர் அதி வணக்கத்திற்குரிய மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகை, HNB இன் பிரதான செயற்பாட்டு அதிகாரி டில்ஷான் ரொட்றிகோ மற்றும் Caritas Sri Lanka வின் தேசிய தலைவர் வண. அருட்தந்தை லூக் நெல்சன் ஆண்டகை, HNBஇன் பிரதி பொது முகாமையாளர் டிஜிட்டல் வணிகம், சம்பிக்க வீரசிங்க உள்ளிட்ட HNB இன் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் பங்குபற்றினர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த HNB இன் பிரதான செயற்பாட்டு அதிகாரி டில்ஷான் ரொட்றிகோ, “தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் உணவு பற்றாக்குறை மற்றும் சுகாதாரம் மற்றும் தங்குமிட வசதிகள் இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 4.8 மில்லியன் குழந்தைகளுக்கு இந்த அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று தரவுகள் காட்டுகின்றன. இந்த குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய எங்களிடம் பணமோ வசதியோ இல்லாததால், நாங்கள் உதவக்கூடிய குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக Caritas Sri Lankaவுடன் கைகோர்த்துள்ளோம். இந்த பண்டிகைக் காலத்தில் தேவைப்படுபவர்களுக்கு வசதிகளை வழங்க பலர் இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கொள்வார்கள் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.

HNB SOLO மூலம் வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களால் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், வங்கி கூடுதல் நன்கொடையை நேரடியாக Caritas Sri Lanka கணக்கிற்கு வரவு வைக்கும். மேலும், HNB SOLO App உள்ள Direct Pay தேர்வின் மூலம் நிறுவனத்திற்கு நேரடியாக நன்கொடைகளை வழங்க வங்கி வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

“கிறிஸ்மஸ் என்பது கொடுப்பதற்கும் பகிர்வதற்குமான ஒரு தருணம். உங்கள் நன்கொடைகளின் உதவியுடன், குழந்தைகள் வறுமையில்லா எதிர்காலத்தை உருவாக்க தேவையான கல்வியைப் பெறலாம். பல குழந்தைகள் மீண்டும் பாடசாலைக்குச் செல்வதில் ஆர்வத்தை இழந்துள்ளனர். ஆனால் உங்கள் உதவியுடன், அவர்களின் வாழ்க்கையிலும் அவர்களின் சமூகங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த அவர்களுக்குத் தேவையான கல்வியைப் பெற நாங்கள் உதவ முடியும். நீங்கள் நன்கொடை வழங்கும்போது, ​​அவர்களின் எதிர்காலத்தை மாற்றுவது மட்டுமல்லாமல், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தாண்டியும் பார்க்க உதவுகிறீர்கள். ஏழையாக யாரும் பிறப்பதில்லை. அந்தவகையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வறுமையை ஒழிக்க முடியும்” என, இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், Caritas Sri Lanka வின் தேசிய பணிப்பாளர் வண. ஆண்டகை லூக் நெல்சன் பெரேரா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, HNB இதேபோன்ற திட்டத்தை ஹெல்ப்ஏஜ் ஸ்ரீலங்காவுடன் இணைந்து அறிமுகப்படுத்தியது, அங்கு SOLO App மூலம் அதிகமான நிதி திறட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply