இலங்கையின் அதிகளவு விரும்பப்படும் ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு

Home » இலங்கையின் அதிகளவு விரும்பப்படும் ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு
Share with your friend

உங்களின் நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதி வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமங்கள் மூன்றில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தக சஞ்சிகையான LMD மற்றும் உலகின் முன்னணி வர்த்தக நாம பெறுமதியிடல் ஆலோசனை அமைப்பான பிரான்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றிடமிருந்து இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தத் தரப்படுத்தல் அதன் ஏற்புடைமை மற்றும் பக்கச் சார்பின்மை ஆகியவற்றுக்காக புகழ்பெற்றுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுடன் நாம் கட்டியெழுப்பியுள்ள இணைப்புடன் எமது வர்த்தக நாமப் பெறுமதிகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் நாம் வியாபித்துள்ளோம். நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகளை புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியன வழிநடத்திச் செல்ல ஏதுவாக அமைந்துள்ளன. ஒப்பற்ற டிஜிட்டல் அனுபவத்தினூடாக, அதிகளவு சௌகரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவு விரும்பப்படும் வர்த்தக நாமமாக திகழ்வதற்கு முக்கிய பங்களிப்பு வழங்குவதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

குணரட்ன தொடர்ந்தும் தெரிவிக்கையில், “வழங்கப்படும் அனுபவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், அவர்களின் வாழ்க்கையுடன் ஈடுபாட்டை பேணுவதிலும் தாக்கம் செலுத்துகின்றது. காப்புறுதிதாரர்களுக்கு திருப்திகரமான சேவைகளை உணர்வுபூர்வமான முறையில் பெற்றுக் கொடுப்பதனூடாக வர்த்தக நாமத்துடனான அவர்களின் பற்றுறுதி கட்டியெழுப்பப்படுவதுடன், எமது வெற்றிகரமான செயற்பாட்டில் இது முக்கிய அங்கமாக காணப்படுகின்றது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச் சேர்ப்பதுடன், காப்புறுதிதாரர்களுக்கு சிறந்த பெறுமதிகளைப் பெற்றுக் கொடுப்பது என்பது எமது உறுதி மொழியாக அமைந்துள்ளது.” என்றார்.

நிறுவனத்தின் புத்தாக்கமான டிஜிட்டல் தந்திரோபாயத்தினூடாக நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வழிமுறை மற்றும் சேவைச் சிறப்பு ஆகிய உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நுகர்வோருக்கு அருகாமையில் ஆயுள் காப்புறுதியை கொண்டு செல்வதில் நிறுவனத்தின் டிஜிட்டல் திட்டங்களில் ஒரு அங்கமாக Clicklife App அமைந்துள்ளது. சந்தையில் பிரவேசித்துள்ள முதலாவது பரிபூரண App ஆக இது அமைந்துள்ளதுடன், இலங்கையில் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்தப் பகுதியிலிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு தமது காப்புறுதியை சௌகரியமான முறையில் நிர்வகித்துக் கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்தி வாடிக்கையாளரின் ஈடுபாட்டை மேம்படுத்தியுள்ளது. Clicklife App இனால் காப்புறுதித் தீர்வுகள் கையகப்படுத்தல் காப்புறுதித் திட்டங்களை டிஜிட்டல் மயப்படுத்தி சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் நஷ்டஈடுகள் தொடர்பான தொடர்பாடல்களை பேணல் போன்றவற்றை முன்னெடுக்க முடிவதுடன், பரிபூரண சுகாதார மற்றும் வாழ்க்கை முறைக் கட்டமைப்பையும் பெற்றுக் கொடுக்கின்றது. App இனூடாக, நிறுவனத்தினால் உடற்தகைமை தொடர்பான சவால்கள் முன்வைக்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் Lifestyle போனஸ் ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக புதிய காப்புறுதிதாரர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான வெகுமதிகளை வருடாந்தம் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. எனவே தயாரிப்பு, சேவை மற்றும் வெகுமதிக் கொடுப்பனவுகள் போன்றன பரிபூரண பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவு விரும்பப்படும் வர்த்தக நாமமாகத் திகழ்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

இலங்கையர்களின் வாழ்க்கைக்கு வளமூட்டும் மற்றும் பாதுகாக்கும் சிறந்த தீர்வுகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது. சுகாதாரம் மற்றும் நலன் தொடர்பில் மக்கள் அதிகளவு கவனம் செலுத்தியிருந்த காலப்பகுதியில், நிறுவனத்தினால் ஹெல்த் 360 – புரட்சிகரமான காப்புறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது இது மேலும் தெளிவாகியிருந்தது. 

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.3 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 49.8 பில்லியனையும், 2021 டிசம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 228% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: