உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவை குறைந்து வரும் நிலையில் இலங்கையின் கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநாட்டவும் உள்நாட்டிலும் உலக அளவிலும் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் தனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இத்துறை எதிர்கொள்ளும் ஸ்திரமற்ற தன்மை குறித்து கவனம் செலுத்தும் JAAF, இலங்கையில் ஆடைத் துறையானது, முன்னெப்போதுமில்லாத வயைில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து அனைத்து ஆர்டர்களையும் உற்பத்தி அட்டவணைகளையும் தொடர்ச்சியாக பூர்த்தி செய்து அதன் நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய தன்மையை நிரூபித்துள்ளது.
இருப்பினும், உலகளாவிய வாடிக்கையாளர் நம்பிக்கை பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில், அடுத்த காலாண்டில் (ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) ஆர்டர்களில் 20% குறைப்புக்கு தொழில்துறையில் பலர் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேவையான விரிவான சீர்திருத்தங்களை கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் தாமதப்படுத்துவார்கள் என தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுதத்துள்ளன.
அதன்படி, இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடைமுறை மற்றும் அரசியல் சாராத திட்டத்தை விரைவாக அமுல்படுத்துவதற்கு நம்பகமான கொள்கைகள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை உடனடியாக ஆரம்பிக்குமாறு JAAF அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்காலத்தில் வரவிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கை அதன் கொள்வனவாளர்களின் நம்பிக்கையைப் பேணுவதை உறுதிப்படுத்துவது காலத்தின் தேவையை JAAFஇன் செயலாளர் நாயகம் யொஹான் லோரன்ஸ் வலியுறுத்தினார்.
“30 வருடங்களுக்கும் மேலாக – உலகளாவிய மற்றும் பிராந்திய பொருளாதார வீழ்ச்சி உட்பட – இலங்கையின் ஆடைத் தொழிற்துறையானது உயர்ந்த நம்பகத்தன்மை, தரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை பிரதிபலிப்பதில் நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது. குறிப்பாக சமீப காலங்களில் இந்த முயற்சிகள் புத்தாக்கமான, நிலைத்தன்மை மற்றும் புதிய ஃபேஷன்களுடன் ஒத்துப்போனது.”
“நீண்ட காலமாக இலங்கைப் பொருளாதாரத்தின் தூணாக இருந்த இந்தத் துறையானது, முன்னெப்போதும் இல்லாத தேசிய மந்த நிலையால் தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான எந்தவொரு திட்டத்தின் ஊடாகவும் பெரிய மற்றும் சிறிய ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிக்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் மற்றும் இந்த ஆற்றலை இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கு நமக்கு இப்போது நிலையான, தீர்க்கமான தீர்வுகள் தேவை.” என லோரன்ஸ் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் ஆடைத் துறையானது 2021ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 22.9% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஏற்றுமதி வருவாயில் இருந்து 5.42 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுகிறது மற்றும் அனைத்து பொருட்களின் ஏற்றுமதியில் சுமார் பாதியைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தத் துறையில் சுமார் 1 மில்லியன் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மேலதிகமாக, இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் முறையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையின் முதல் படியாக 20வது திருத்தத்தை ரத்து செய்வதற்காக கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றமான JAAF மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.