Eyeview Sri Lanka

இலங்கையின் சிறந்த சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் வழங்குநராக People’s Excellency விருதை வென்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம்

Share with your friend

சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் துறையில் புகழ்மிக்க நிறுவனமாக திகழும் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் People’s Excellency விழாவில் 2024 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர் என்ற விருதை வென்றுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்ற மேற்படி விருது விழாவில் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் சார்பாக அதன் நடவடிக்கை முகாமையாளர்களான திருமதி குஷிணி குமாரசிங்க மற்றும் செல்வி ருவந்தி பர்னேந்து மேற்படி விருதை பெற்று கொண்டனர்.

2007 ஆம் ஆண்டில் 25 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் தற்பொழுது இலங்கையின் மிகப் பெரிய சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்குநராக திகழ்கிறது. மஹரகம,கல்சிஸ்சை, கடுவளை, ஹங்வெல்ல ஆகிய பகுதிகளிலும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் மாநகரிலும் சொகுசு சுகாதாரப் பராமரிப்புச் சேவை நிலையங்களை நடாத்தி வரும் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்தில் மருத்துவர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள், தாதியர் மற்றும் இதர சுகாதார வல்லுநர்கள் என 1200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேவையாற்றுவதோடு நவீன வசதிகளை கொண்ட இந் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டு முடிவில் 50,000 இற்கு மேற்பட்டோருக்கு சுகாதாரப் பராமரிப்பு சேவையினை வழங்குவதே இந் நிறுவனத்தின் நோக்கமாகும். இலங்கை தனியார் சுகாதாரச் சேவைகள் ஒழுங்குபடுத்தல் பேரவையின் அங்கீகாரத்தை பெற்ற ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்தின் தாதியர் சேவை வசதிகள் மற்றும் அம்புலன்ஸ் சேவைகளும் சுகாதார அமைச்சின் தர நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகளையும் தரச் சான்றிதழ்களையும் வென்றுள்ள மேற்படி நிறுவனம்  ISO 9001-2015 எனும் சர்வதேச தரச் சான்றிதழை வென்ற இலங்கையின் ஒரே சுகாதார பராமரிப்புச் சேவை நிறுவனமாகும்.


Share with your friend
Exit mobile version