இலங்கையின் சேதன விவசாய மாற்றத்துக்கு பவர் நிறுவனத்திடமிருந்து குறுங்கால தீர்வுகளைப் பகிர்வு

Share with your friend

இலங்கையின் விவசாயத் துறையில் புத்தாக்கமான தீர்வுகளை வழங்கும் பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான பவர் நிறுவனம் (A. Baur & Co. (Pvt.) Ltd.), நாட்டின் விவசாயத் துறைக்கு பாரம்பரிய உரப் பயன்பாட்டிலிருந்து சேதன உரப் பயன்பாட்டுக்கு வெற்றிகரமாக மாறுவதற்கு அவசியமான ஆரம்பகட்ட பிரதான உள்ளம்சங்கள் மற்றும் தீர்வுகளை, விஞ்ஞானபூர்வ ஆதாரம் மற்றும் அறிவினூடாக தனது நிபுணத்துவ மற்றும் பிரயோக அனுபவங்களைக் கொண்டு பகிர்ந்திருந்தது.

பவர் நிறுவனம் அதன் ஒப்பந்த நிறுவனங்களான Research Institute of Organic Agriculture (FiBL) மற்றும் School of Agricultural, Forest and Food Sciences (HAFL) ஆகியவற்றுடன் இணைந்து இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த நிபுணர் குழுவின் விஜயத்தின் போது கண்டறியப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, பாரம்பரிய உரப் பயன்பாட்டு உற்பத்தியிலிருந்து சேதன உரப் பயன்பாட்டு உற்பத்திக் கட்டமைப்புக்கு குறுகிய காலப்பகுதியில் மாறிக் கொள்வதற்கு அவசியமான படிமுறைகளை விளக்கியிருந்தது.

இந்த அறிக்கையில் அசேதன உரத்தைப் பயன்படுத்தாமல் தாதுப்பொருட்கள் அடங்கிய சேதன உரத்தைப் பயன்படுத்தி விவசாயக் கட்டமைப்பை மாற்றுவது என்பது போதியளவு சேதன உரமின்மையால் பயனளிக்காது என்பதுடன், நிலத்தின் உயிரியல் அம்சங்களை மீளச் செயற்படுத்துவதன் முக்கியத்துவம் அடங்கலாக தற்போதைய மண்வளம் – தாவரக் கட்டமைப்பு என்பது தாதுப்பொருட்கள் அடங்கிய உரத்துக்கு பழக்கப்பட்டுள்ளதுடன், அவற்றினால் சேதன உரத்தை உடனடியாக அகத்துறிஞ்சலுக்கு பழக்கப்படுத்திக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்காக பெருமளவு மூலப் பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை காணப்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேதன உரப் பயன்பாட்டுக்கு புவிச்சூழல் கட்டமைப்பை மாற்றுவதற்கு பரிபூரண முறைமை மாற்றம் அவசியமாவதாக குறிப்பிட்டுள்ளதுடன், அதற்கு சில வருட காலம் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, திறன் கட்டியெழுப்பும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாட்டில் இரசாயன உர பயன்பாட்டுக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்போகச் செய்கைக்காக அசேதன உரங்களின்றி விவசாயிகளுக்கு மண் வள முகாமைத்துவத்துக்கு அவசியமான தெரிவுகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

முதற்படியாக, பெருமளவு சேதன உரத்தை இறக்குமதி செய்து, இயற்கையாக கிடைக்கும் நைட்ரஜனைப் பயன்படுத்தி அவற்றை தயாரிப்பதை பரிந்துரைத்துள்ளது. அத்துடன், உணவுத் துறை மற்றும் சந்தைகள் மற்றும் விலங்கு வேளாண்மைத் துறையிலிருந்து கிடைக்கும் கழிவுகளைப் பெறக்கூடிய மூலங்களை இனங்கண்டு, அவற்றை சேதனப் பசளையாக மாற்றும் வழிமுறைகளை இனங்காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அவ்வாறான மீள்சுழற்சியினூடாக, போஷாக்கு வட்டங்களை மூடி, நேர்த்தியான சூழல் தாக்கத்துக்கு வழிகோலும்.

கொம்போஸ்ட் உரம் என்பது முக்கிய பங்காற்ற வேண்டியிருப்பதுடன், அதன் செயற்பாடானது, மண் உயிரியல் தன்மையை செயற்படுத்துவதுடன், மண்ணின் கட்டமைப்பை நிலைபெறச் செய்வதனூடாக பல்வேறு அனுகூலங்களை வழங்குகின்றது. இவ்வாறான தரமான கொம்போஸ்ட்களினூடாக தாவரங்களில் ஏற்படக்கூடிய நோய்களை குறைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

மேலும், விவசாய உற்பத்தி தொடர்பான புதிய பரிபூரண நிர்வாக முறைமையையும் பரிந்துரைத்திருந்தது. இதற்கு அதிகளவு காலம் தேவைப்படுவதுடன், அதற்கு அவசியமான ஆளுமைகள் மற்றும் அறிவும் காணப்பட வேண்டும். பயிர்ச் சுழற்சி அல்லது கலப்பு பயிர்ச் செய்கை நுட்பங்களினூடாக, மண் வள நிர்வாகம் மற்றும் சேதன உற்பத்திக்கு பொருத்தமான பயிர் வகைகளை தெரிவு செய்தல் பின்பற்றுவதற்கு முக்கியமான விடயங்களாக அமைந்துள்ளன. இவை அனைத்தும் நீண்ட கால பயன்பாட்டின் போது வினைத்திறன் வாய்ந்ததாகவும், நிலைபேறான கட்டமைப்பாகவும் அமைந்திருக்கும்.

FiBL மற்றும் HAFL ஐச் சேர்ந்த சிரேஷ்ட  நிபுணர் குழுவினருடன் பவர் தொடர்ச்சியாக ஈடுபாட்டை பேணுவதுடன், நாட்டின் சூழல் கட்டமைப்பு தொடர்பில் தொடர்ச்சியாக ஆராயவும் வகையில், இதர சம்பந்தப்பட்ட அமைப்புகள் இவர்கள் தமது செயற்பாடுகளை ஒழுங்கமைப்பு செய்து, மாற்றத்துக்கான சவாலை எதிர்கொள்வதற்கு அவசியமான சிறந்த விஞ்ஞான ரீதியான மற்றும் பிரயோக தீர்வுகளையும் அறிவையும் வழங்குகின்றது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply