பேர்கர் சந்தையின் முன்னோடியாகவும், தற்போது முன்னணியில் உள்ள ஒரு உணவகச் சங்கிலியாகவும் திகழும் ஸ்ட்ரீட் பேர்கர் [Street Burger] ஆனது அண்மையில் SOS சிறுவர்களுடன் இணைந்து சர்வதேச பேர்கர் தினத்தை கொண்டாடியது.இதற்கிணங்க ஸ்ட்ரீட் பேர்கர் ஆனது காலியில் உள்ள SOS சிறுவர் கிராமத்தினை இதற்கிணங்க தெரிவு செய்ததுடன் 24.05.2025 அன்று அச்சிறுவர்களுடன் இணைந்து இத்தினத்தினை உணர்வு பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடியது.கொண்டாட்டங்களின் நாளாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, வரும் ஆண்டில் இலங்கையின் SOS சிறுவர் கிராமங்களை ஆதரிப்பதற்கான ஸ்ட்ரீட் பேர்கரின் உறுதிமொழியுடன் சக்திவாய்ந்த நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

மதியவேளையில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது சிறுவர்கள் , தாய்மார்கள் மற்றும் ஸ்ட்ரீட்பே ர்கர் ஊழியர்கள் ஆகியோரை ஒன்றிணைத்ததுடன் முக ஓவியம் வரைதல், விளையாட்டுகள் போன்றவை இடம்பெற்றதுடன் மற்றும் ஸ்ட்ரீட் பேர்கரின் பிரபலமான தனித்துவமான சுவையான பேர்கர்களினை சுவைக்கும் அற்புத அனுபவத்தையும் வழங்கியது. இந்த தினமானது பகிரப்பட்ட தருணங்கள், எளிய மகிழ்ச்சிகள் மற்றும் இதயப்பூர்வமான இணைப்பு ஆகியவற்றின் கொண்டாட்டமாக அமைந்தது.
“ஒரு குழந்தையின் முகம் மகிழ்ச்சியால் பிரகாசிப்பதைக் காண்பதை விட பெரிய வெகுமதி எதுவும் இல்லை,” என்று ஸ்ட்ரீட் பேர்கரின் இணை ஸ்தாபகர் அமீன் அல் தாரிக் கூறினார். “எமது உறுதிமொழி வெறும் நிதி உதவிக்கு அப்பாற்பட்டது – இது இலங்கையின் குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்ப்பதற்கான நீண்டகால அர்ப்பணிப்பாகும், மேலும் அடுத்த தலைமுறையை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் SOS சிறுவர் கராமங்களுடன் பங்குதாரர் ஆவதில் நாம் பெருமைப்படுகிறோம்.”
“சிறுவர்கள் வளரும் சூழலில் உயர்தர பராமரிப்பைப் பெறுவதை உறுதி செய்வதில் SOS சிறுவர் கிராமங்கள் ஆற்றும் பணி உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது,” என்று ஸ்ட்ரீட் பேர்கரின் இணை ஸ்தாபகர் மசூன் சமூன் கூறினார். “இந்த நன்கொடை முயற்சியானது முதன்மையாக எம்மை இன்றைய உயர் நிலைக்குக் கொண்டு வந்த எமது விசுவாசமான வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் சாத்தியமானது என்பதை நான் இவ்வேளையில் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த உறுதிமொழி அளிக்கப்பட்ட பண நன்கொடையானது, இலங்கையில் உள்ள SOS சிறுவர் கிராமங்களில் கல்வி, இளைஞர் அபிவிருத்தி மற்றும் குடும்பத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் போன்ற முக்கிய திட்டங்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கவுள்ளது. இதற்கான திட்ட முயற்சிகள்சிறுவர்கள் உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் செழிக்கக்கூடிய பாதுகாப்பான, ஆதரவான சூழல்களில் வளர உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
“இது வெறும் கொண்டாட்ட நாளாக மட்டும் அமையவில்லை. மாறாக ஒவ்வொரு குழந்தையின் மதிப்பு மற்றும் ஆற்றலை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இருந்தது,” என்று SOSசிறுவர் கிராமங்களின் தேசிய பணிப்பாளர் திரு. திவாகர் ரத்னதுரை தெரிவித்தார். “ஸ்ட்ரீட் பேர்கரின் தாராள மனப்பான்மை மற்றும் எமது பணியில் நம்பிக்கை வைத்ததற்காக நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களின் ஆதரவானது அதிகமான சிறுவர்கள் தகுதியான கவனிப்பு, அன்பு மற்றும் வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்யும்.”
இந்த பங்குடைமையானது நிலையான சமூக தாக்கத்திற்கான பகிரப்பட்ட பார்வையை பிரதிபலிப்பதுடன் அங்கு பெருநிறுவன பொறுப்பானது சமூக வலுப்படுத்தலுடன் இணங்குகிறது. வர்த்தகங்கள் தாம் சேவை செய்யும் சமூகங்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைந்து செயற்படும் போது எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்வானது ஒரு சான்றாக திகழ்கிறது.
இலங்கையின் SOS சிறுவர் கிராமங்கள் பற்றி
1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீலங்கா SOS சிறுவர் கிராமங்கள் என்பது பெற்றோரின் பராமரிப்பை இழந்த அல்லது அதை இழக்கும் அபாயத்தில் உள்ள குழந்தைகளின் நீண்டகால பராமரிப்பு மற்றும் அவர்களை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நம்பகமான சர்வதேச அரசு சாரா அமைப்பாகும். குடும்பம் சார்ந்த மற்றும் சமூக-ஒருங்கிணைந்த பராமரிப்பு மாதிரிகள் மூலம், SOSCVSL ஒவ்வொரு குழந்தையும் அன்பான மற்றும் நிலையான சூழலில் வளர வாய்ப்புள்ளது என்பதை உறுதி செய்கிறது.
ஸ்ட்ரீட் பேர்கர் பற்றி
ஸ்ட்ரீட் பேர்கர் என்பது அதன் சுவையான உணவு வகைகள் மற்றும் வலுவான சமூக மனப்பான்மைக்கு பெயர் பெற்ற பெருமைமிக்க இலங்கையின் வர்த்தகநாமமாகும். சுவை மற்றும் இலக்கு ஆகிய இரண்டையும் கொண்ட உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஸ்ட்ரீட் பேர்கர், அர்த்தமுள்ள பங்குடைமைகள் மற்றும் சமூக பொறுப்புணர்வு முயற்சிகள் மூலம் மீள வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது.