இலங்கையில் அதிகம் விரும்பப்படும் பொதுக் காப்புறுதி நிறுவனமாக ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் தெரிவு

Home » இலங்கையில் அதிகம் விரும்பப்படும் பொதுக் காப்புறுதி நிறுவனமாக ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் தெரிவு
Share with your friend

புத்தாக்கங்களினூடாக காப்புறுதித் துறையில் ஆரம்பம் முதல் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ், உள்நாட்டுக் காப்புறுதித் துறையில் சேவைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளினூடாக, பொது காப்புறுதிப் பிரிவில் அதிகளவு விரும்பப்படும் வர்த்தக நாமங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2022 வருடாந்த வர்த்தக நாமச் சிறப்புகள் நிகழ்வில் (பிரான்ட் ஃபினான்ஸ் திரட்டப்பட்டு, LMD இனால் வெளியிடப்பட்டது) இந்த கௌரவிப்பை ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் பெற்றுக் கொண்டது. அண்மையில் இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தினால் இலங்கையின் சகல பிரிவுகளிலும் மிகவும் புத்தாக்கமான வர்த்தக நாம விருது வழங்கப்பட்டிருந்தமை மற்றும் அதியுயர் Facebook review புள்ளிகளான 4.1 ஐ பெற்றுக் கொண்ட (மே 2022) ஒரே பொதுக் காப்புறுதி சேவை வழங்குநராக தெரிவு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து இந்த கௌரவிப்பை ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் பெற்றுக் கொண்டது. ஈடுபாடு, கரிசனை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூரல் போன்றவற்றினூடாக உலகத் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் நிறுவனம் காண்பிக்கும் ஆற்றல்களுக்கு கிடைத்த சான்றாக இது அமைந்துள்ளது.

வர்த்தக நாம உறுதி மொழிக்கமைய தொடர்ச்சியாக ஃபெயார்ஃபஸ்ட் இயங்குவதுடன், அதனூடாக அதிகளவு விரும்பப்படும் வர்த்தக நாமமாக தெரிவாக முடிந்திருந்தது.  நான்கு அத்தியாவசிய அரண்களான, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் நிபுணர்கள், வழமைக்கு அப்பாலான சேவைத் தரம், அர்த்தமுள்ள புத்தாக்கம் மற்றும் சரியான விலையில் மனதுக்கு நிம்மதி போன்றன அவையாகும். வாடிக்கையாளர்களை மையப்படுத்திய காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் முயற்சிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சேவை வழங்கல்களில் ஒவ்வொரு அரணும் ஒன்றுக்கொன்று ஆதரவளிப்பதாக அமைந்துள்ளன.

ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்தீப் கோபால் இந்த சாதனை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “அதிகளவு விரும்பப்படும் வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்படுவது எந்தவொரு நிறுவனத்துக்கும் கிடைக்கும் சிறந்த கௌரவிப்பாக அமைந்துள்ளது. தனிநபர்கள், வியாபாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ச்சித் தன்மையாக அமைந்திருக்கும் நிலையில், இந்த கௌரவிப்பானது மிகவும் சிறப்பானதாக அமைந்திருக்கும். இந்த சிறப்பான பயணத்தில் எம்முடன் இணைந்திருக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கும் எமது பயணத்துக்கு இது போன்ற சிறந்த தருணங்கள் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

அவ்வாறான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதனூடாக காப்புறுதித் துறையில் எமது நிலையை புரட்சிகரமானதாக பேணுவதற்கு உதவியுள்ளதுடன், பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகனாகத் திகழ்ந்து, சர்வதேச பெறுமதிகளுக்கமைய, நிறுவனத்தின் உள்ளக அங்கமாக அமைந்திருப்பதையும் உறுதி செய்துள்ளது. FairfirstWay வழிமுறையில் அர்த்தமுள்ள நம்பிக்கைகளை கட்டியெழுப்பிக் கொள்ள சமூகத்தின் அடிமட்டத்துக்கு சென்று, சமூக ஈடுபாடுகளை பேணும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது. இதன் காரணமாக ஃபெயார்ஃபஸ்ட் நிறுவனத்தின் சிந்தனை என்பது உடனடி பெறுபேறுகளை வழங்கும் குறுங்கால இலக்குகளுக்கு உட்பட்டதாக அமைந்திராமல், அதற்கு அப்பால் செல்வதாக அமைந்துள்ளது.

ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி சசித் பம்பரதெனிய கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சாதனை தொடர்பில் நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். வர்த்தக நாம உறுதிமொழியை எப்போதும் நிறைவேற்றுவது என்பதற்கமைய செயலாற்றுகின்றமைக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்தையில் பிரத்தியேகமான மற்றும் அர்த்தமுள்ள காப்புறுதி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் எமது வலிமைகளை வெளிப்படுத்துவது என்பது தொடர்பாக இந்த உறுதி மொழி அமைந்துள்ளது. முன்னேற்றகரமாக திகழ்வது, அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்கள் தேவைகளுக்கு பொருத்தமாக அமைந்திருப்பது மற்றும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது போன்றன இதில் அடங்கியுள்ளன” என்றார்.

இலங்கையிலுள்ள சிறந்த பொதுக் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ள ஃபெயார்ஃபஸ்ட், தனிநபர்கள், வர்த்தகங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு தனது பரந்த கிளை வலையமைப்பினூடகாவும், பங்காளர்கள் மற்றும் சந்தையிலுள்ள முன்னணி முகவர்களினூடாகவும் உறுதியான ஊழியர்களினூடாகவும் சேவைகளை வழங்கி வருகின்றது. கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் Fairfax குழுமத்தின் அங்கமாகவும் ஃபெயார்ஃபஸ்ட் திகழ்கின்றது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் காணப்படும் 2020 ஆம் ஆண்டின் சிறந்த மற்றும் இலங்கையின் ஒரே காப்புறுதி நிறுவனமாகவும் திகழ்கின்றது. ஃபெயார்ஃபஸ்ட் தனது பரந்த கிளை வலையமைப்பு, பங்காளர்கள் மற்றும் முகவர் வலையமைப்பினூடாக தனிநபர்கள், வியாபாரங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: