Eyeview Sri Lanka

இலங்கையில் முன்னணி மின்சக்தி கண்காணிப்பு தீர்வுகளை வழங்க Venora Group உடன் கூட்டாண்மையை அமைக்கும் SOCOMEC

Share with your friend

பிரான்ஸை தளமாகக் கொண்ட குறைந்த மின்னழுத்தம் தொடர்பான மின்சக்தி நிர்வாகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நிபுணத்துவம் கொண்ட Socomec நிறுவனம், இலங்கையின் மின்சார பொறியியல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Venora குழுமத்தின் துணை நிறுவனமான Boxy Private Limited உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பானது இலங்கைச் சந்தையில் மின்சார அளவீடு மற்றும் கண்காணிப்புத் தீர்வுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் நிலைபேறான தன்மை மற்றும் திறனான மின்சக்தி முகாமைத்துவத்தில் கவனம் செலுத்துகிறது.

இந்த கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த, Socomec குழுமத்தின் APAC பிரதம நிறைவேற்று அதிகாரி O’Niel Dissanayake, “இந்த சந்தையானது அதிகளவில் நிலைபேறான தன்மை மற்றும் திறமையான மின்சக்தி முகாமைத்துவத்தை நோக்கி நகர்கிறது. அந்த வகையில் ஐரோப்பாவில் மின்சக்தி கண்காணிப்பு வணிகத்தில் முன்னணியில் திகழ்கின்ற Socomec ஆனது, இந்த தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இது போன்ற கூட்டாண்மைகள் ஆசிய பசுபிக் பிராந்தியம் முழுவதும் எமது எல்லையை விரிவுபடுத்த உதவுவதோடு, எமது கூட்டாளர்களின் உள்ளூர் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி வலுவான, பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்கும் வகையில் உரிய தீர்வுகளை மிகவும் திறம்பட வழங்க உதவுகின்றன.” என்றார்.

இக்கூட்டாண்மை குறித்து Socomec Greater India பிராந்திய முகாமைத்துவப் பணிப்பாளர் மீனு சிங்கால் தெரிவிக்கையில், “இலங்கை சந்தைக்கு சிறந்த தரமான சேவைகளை வழங்க Boxy Private Limited உடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இரு நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர் விசுவாசத்தை பேணுவதற்கும் வலுவான, அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளன. இலங்கையில் எமது கால்தடத்தை பதித்ததைத் தொடர்ந்து நாம் தொடர்ச்சியாக விரிவுபடுத்துவதால், இந்த கூட்டணியானது Socomec நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். Venora வின் உள்ளூர் சந்தை நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், பிராந்தியத்தின் தேவைகளுக்கு ஏற்ப அதிநவீன மின்சக்தி முகாமைத்துவத் தீர்வுகளை Socomec வழங்கும்.” என்றார்.

இது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட Boxy Private Limited இன் பணிப்பாளர் சயுரு குணவர்தன, “மின்சக்தி முகாமைத்துவத் தீர்வுகளில் தரம் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் தொடர்பில் Socomec கொண்டுள்ள நற்பெயரானது எப்போதும் எம்மை ஈர்த்துள்ளது. இந்த கூட்டாண்மையானது உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பை காட்டுகிறது. நாம் ஒன்றாக எமது செயற்பாடுகளை நெறிப்படுத்தி, உடனடியான மற்றும் நம்பகமான சேவை வழங்கலை உறுதி செய்ய, குறிப்பாக முக்கியமான பயன்பாட்டு பொருட்களுக்கு வலுவான வழங்கல் வலையமைப்பை நிறுவவுள்ளோம்.” என்றார்.

முன்னோக்கிச் செல்லும் பாதை தொடர்பில் கருத்து வெளியிட்ட, Socomec Greater India நிறுவனத்தின் வளர்ந்து வரும் சந்தைகளின் பொது முகாமையாளர் சுஹார்ட் அமித், “கடந்த நான்கு தசாப்தங்களாக இலங்கைச் சந்தையில் தரவு மையங்கள், கைத்தொழில்துறைகள், உற்பத்தித்துறை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற துறைகளில் Socomec புத்தாக்க கண்டுபிடிப்புகளை உருவாக்கி சேவையாற்றி வருகிறது. Boxy நிறுவனத்துடனான இந்த கூட்டாண்மை மூலம், மேம்படுத்தப்பட்ட மின்சக்தித் திறன், நம்பகத்தன்மை மற்றும் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆதரவை வழங்குவதே எமது நோக்கமாகும். Team Boxy உடனான எமது ஒத்துழைப்பானது, இணையற்ற சேவை மற்றும் அவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்றவாறு மேம்பட்ட தீர்வுகளை எமது வாடிக்கையாளர்கள் பெறுவதை உறுதி செய்யும்.

இந்த கூட்டாண்மை மூலம், இலங்கையிலும் அதற்கு அப்பாலும் புத்தாக்கமான, நம்பகமான மற்றும் திறமையான மின்சக்தி தீர்வுகளுடன் வணிகங்களை மேம்படுத்துவதற்கான அதன் நிலைபேறான தன்மை மற்றும் அதன் நோக்கத்திற்கான உறுதிப்பாட்டை Socomec வலுப்படுத்துகிறது.

About Socomec:

Established in 1922, Socomec is a globally renowned specialist in Low Voltage (LV) Power Switching, Monitoring, and Power Conversion products, dedicated to managing power and safeguarding people, equipment, and installations. Offering 24/7 Expert Services, Socomec ensures the reliability and optimization of end-users’ equipment.

With a workforce of 3900 employees, 12 production sites, and over 30 subsidiaries spanning five continents, Socomec Group is a key player in the industry. Headquartered in Chennai, Socomec India boasts branch offices across 12 locations nationwide, with a cutting-edge manufacturing facility situated in Gurugram, Haryana.

Leveraging over a century of expertise, the Group is committed to constant innovation, enhancing energy performance in Data Centres, Healthcare, Infrastructure, as well as industrial and commercial sites. As a recognized expert, Socomec delivers state-of-the-art solutions, ensuring the highest availability of electrical power supply to critical and non-critical facilities. Tailored to customer needs and fully compliant with international standards, the company consistently upholds excellence in power management.

When energy matters…
Founded in 1922, SOCOMEC is an independent industrial group of more than 4,200 experts spread across the world in 30 subsidiaries. Our vocation: design, manufacture and sale of electrical equipment, with a strong expertize in critical power applications. In 2023, SOCOMEC achieved a turnover of >800 million euros.    

Share with your friend
Exit mobile version