Site icon Eyeview Sri Lanka

இலங்கையை சிறந்த மென்பொருள் வடிவமைப்பு பிராந்தியமாகத் திகழச் செய்யும் வகையில் Rootcode Studio அறிமுகம்

Share with your friend

உலகத் தரம் வாய்ந்த மென்பொருள் மற்றும் பொறியியல் ஆற்றல்களுக்கான, வளர்ந்து வரும் சந்தையாக இலங்கையை திகழச் செய்வதுடன், இலங்கையின் வடிவமைப்பு திறமைசாலிகளை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் வகையில், முன்னணி மென்பொருள் வடிவமைப்பு பொறியியல் நிறுவனமான Rootcode Labs தனது புதிய துணை நிறுவனமான Rootcode Studio ஐ இலங்கையில் நிறுவியுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வு கொழும்பு Movenpick ஹோட்டலின் Mont Blanc Ballroom இல் ஜனவரி 29 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாட்டின் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற பலர் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் முன்னணி வடிவமைப்பு ஸ்ரூடியோக்களில் ஒன்றாக Rootcode Studio, தமது வர்த்தக நாமங்களையும் சிந்தனைகளையும் மாற்றியமைக்கும் சிறந்த வடிவமைப்புத் திறனை நிறுவனங்களுக்கு வழங்கி உதவுகின்றது. Rootcode இனால் பல நிறுவனங்களுக்கு மொபைல் மற்றும் வெப் அப்ளிகேஷன்கள், AI தீர்வுகள், அளவிடக்கூடிய Minimum Viable Products (MVPs), வடிவமைப்பு தயாரிப்புகள் மற்றும் புரொடோடைப்பிங் மற்றும் மென்பொருள் தரத்தை கணக்காய்வு செய்வது போன்றன வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளன.

UI/UX வடிவமைப்பாளர்கள், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள், வடிவமைப்பு ஆலோசகர்கள், தந்திரோபாய நிபுணர்கள் மற்றும் ஆக்கத்திறனாளர்கள் போன்ற பரந்த அணியினர் ஒவ்வொரு செயற்திட்டத்தையும் சவால்கள் நிறைந்த சிந்தனைகளின் அடிப்படையில் முன்னெடுப்பதுடன், சகல எதிர்பார்ப்புகளையும் விஞ்சும் வகையில் நிறைவேற்றப்படுவதையும் உறுதி செய்கின்றனர்.

நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளில் UI/UX வடிவமைப்பு, பாவனையாளரை மையப்படுத்தி அனுபவ அடிப்படையிலான, மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வர்த்தக நாம அலங்காரம், UX கணக்காய்வு, பாவனையாளர்களின் தேவைகளை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான வகையிலமைந்த தீர்வுகளை வழங்கக்கூடிய UX ஆய்வு முறைகள் போன்றன அடங்கியுள்ளன.

Rootcode ஸ்ரூடியோ வடிவமைப்பு செயன்முறையில் (3i’s) முதலில் ஈடுபாட்டுடனான (Immerse) செயன்முறை உள்வாங்கப்பட்டுள்ளது. இதன் போது, பாவனையாளர் எதிர்பார்ப்புகள், மனப்பாங்கு மற்றும் ஆய்வுப் பெறுபேறுகள் போன்றவற்றைக் கொண்ட ஈடுபாட்டுடனான வரைபடத்தை பெறுபேறாகக் கொண்ட பாவனையாளர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருப்பது. இரண்டாவதாக, தெளிவுபடுத்தல் (Ideate) வழிமுறையை பின்பற்றுதல் மற்றும் சிக்கலான நிலைகளை அணியினருக்கு இனங்காண்பது மற்றும் தெளிவுபடுத்துவது மற்றும் மூன்றாவதாக புத்தாக்கமான (Innovate) பரந்த தீர்வுகளை கொண்டு, சிறந்த வடிவமைப்பை இனங்கண்டு, சீரமைக்கப்பட்ட UX ஐ வழங்குவது போன்றன அடங்கியுள்ளன.

Rootcode ஸ்ரூடியோவினால் வாடிக்கையாளர்களுக்கு end-to-end UX ஆலோசனை செயற்படுத்தப்பட்ட சேவைகள் வழங்கப்படுவதுடன், அதனூடாக UX தீர்மானங்களை மேற்கொண்டு, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெறுபேறுகள் எய்துவது, சிந்திக்கக்கூடிய பயிற்சிப்பட்டறைகளை வடிவமைத்து, வாடிக்கையாளர் அணிகளையும் குழுக்களையும் UI/UX அலங்காரங்களில் உள்வாங்கி, அறிவுப் பகிர்வு தந்திரோபாயங்களை மேற்கொள்வது, ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு பொருத்தமான MVPs மற்றும் பரிபூரண, மீளப் பயன்படுத்தக்கூடிய வடிவமைப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, சகல பிரிவுகளிலும் வர்த்தக நாம தொடர் தன்மையை பேணக்கூடியதாக இருக்கும்.

கடந்த ஆண்டின் முற்பகுதியில் Rootcode இனால் புரட்சிகரமான Artificial Intelligence (AI) தீர்வுகளை வழங்கும் வகையில் Rootcode AI அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. மிகவும் சிக்கல்கள் நிறைந்த நிறுவனங்களுக்கு அவற்றை தீர்த்துக் கொள்ள வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளன. இதில் architecting மற்றும் productionizing, research மற்றும் industry-grade applications மற்றும் strategies போன்றவற்றைக் கொண்டு computer vision, natural language processing, business process optimization, anomaly detection, intelligent data process மற்றும் analytics மற்றும் complex document processing, மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயன்முறைகளைப் பயன்படுத்தி text mining போன்றவற்றை மேற்கொள்ள உதவியிருந்தது.
குறுகிய காலப்பகுதியில் Rootcode பாரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கையில் தலைமையகத்தைக் கொண்டுள்ளதுடன், அமெரிக்காவில் எஸ்டோனா மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் கூட்டாண்மை அலுவலகங்களையும் கொண்டு இயங்குகின்றது. மென்பொருள் வடிவமைப்பு பொறியியல் நிறுவனத்தினால் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியங்களின் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. Rootcode இன் வாடிக்கையாளர்களில் நியுயோர்க் பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் முதல் ஆரம்ப நிலை நிறுவனங்கள் வரை அடங்கியுள்ளன. 240 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மென்பொருள் தீர்வுகளை வடிவமைத்துள்ளது.


Share with your friend
Exit mobile version