Eyeview Sri Lanka

இலங்கை பெண்களின் வியாபாரத் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தும் வகையில் Women
in Management மற்றும் IFC இணைந்து 11ஆவது நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு

Share with your friend

இலங்கை பெண்களின் வியாபாரத் தலைமைத்துவ பண்புகளை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையில் 11 ஆவது வருடமாகவும் Women in Management (WIM) இனால் IFC மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் 2021 தொடர்பில் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளன.

இந்தத் திட்டத்தில் IFC ஏழாவது வருடமாகவும் இணைந்துள்ளதுடன், IFC-DFAT Women in Work நிகழ்ச்சியில் நான்காவது வருடமாகவும் இணைந்துள்ளது. இலங்கையில் பெண்கள் தமது தொழில்நிலை, வியாபாரங்கள் மற்றும் தினசரி வாழ்க்கையில் சிறப்பாக செயலாற்றி ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக முன்னெடுக்கப்படும் சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் வழங்கலினூடாக இலங்கையின் வங்கி மற்றும் நிதியியல், விருந்தோம்பல், ஊடகம், சட்டம், சரக்குக் கையாளல் மற்றும் விநியோகத் தொடர் போன்ற வௌ;வெறு தொழிற்துறைகளைச் சேர்ந்த 470 க்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

Women in Management இன் ஸ்தாபகரும் தலைமை அதிகாரியுமான கலாநிதி. சுலோசனா செகேரா கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த ஆண்டு சிறந்த 50 விருதுகள் வழங்கலினூடாக, தொற்றுப் பரவல் காலப்பகுதியிலும் தமது தொழில்நிலையில் சிறப்பாக செயலாற்றுவதற்கு தமது திறமைகள் மற்றும் ஆளுமைகளை வெளிப்படுத்தியிருந்த வௌ;வேறு வியாபாரத் துறைகளைச் சேர்ந்த பெண் தலைமைகளை கௌரவிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். கடந்த பத்து வருடங்களில், இந்த விருதுகள் வழங்கலினூடாக, பெண்களின் வியாபார தலைமைத்துவத்தை பாலின பிரதிநிதித்துவமாக மாத்திரம் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக உள்ளடக்கம் போன்றவற்றை ஊக்குவிப்பதில் ஆற்றும் முக்கிய பங்குக்காகவும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.’ என்றார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாலின இடைவெளிகள் ஏற்பட்டுள்ள நிலையில், உலகளாவிய ரீதியில் பல தசாப்த காலமாக எய்திய அனுகூலங்களை மீளத் திருப்பியுள்ளது. இந்தச் சூழலில் உறுதியான மற்றும் நிலையான கூட்டாண்மை தலைமைத்துவத்துக்கான தேவையை உணர்த்தியுள்ளது. நிறுவனங்கள் உறுதியான மீட்சியை எதிர்பார்ப்பதுடன், அதிகளவு உள்ளடக்கமான, உற்பத்தித் திறன் படைத்த மற்றும் இலாபகரமான வளர்ச்சியை நிறுவனத்தினுள் எய்துவதற்கு பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கு அதிகளவு ஊக்குவிக்கின்றன.

IFC இன் Women in Work நிகழ்ச்சி முகாமையாளர் சாரா டுவிக் கருத்துத் தெரிவிக்கையில், ‘சிறந்த 50 நிபுணத்துவ பெண்கள் மற்றும் தொழில்நிலை விருதுகள் வழங்கல் என்பது இலங்கையின் மறைந்திருக்கும் திறமைசாலிகளை முன்கொண்டு வருவதற்கான சிறந்த களமாக உள்ளது. கடந்த வருடங்களில் வழமைக்கு மாறாக சிந்தித்து செயலாற்றியிருந்த சிறந்த பெண் முயற்சியாளர்களை நாம் கௌரவித்துள்ளதுடன், இலங்கையின் உள்ளடக்கமான மற்றும் பரந்த பொருளாதாரத்துக்கு இது அவசியமான தேவையாக உள்ளது. தொற்றுப் பரவல் காரணமாக மற்றுமொரு உறுதியற்ற ஆண்டில் நாம் வசித்து வரும் நிலையில், இதனால் எழுந்துள்ள சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுத்து, சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கையின் பெண்கள் எவ்வாறு தம்மை தயார்ப்படுத்தியுள்ளனர் என்பதை கேட்டறிவதற்கான நேரம் இதுவாகும்.’ என்றார்.

இலங்கையில் IFCஇன் 50 வருட கால செயற்பாட்டின் போது, WIM என்பது நீண்ட காலமாக இணைந்துள்ளது. IFC மற்றும் WIM ஆகியன இணைந்து, சிரேஷ்ட மற்றும் நடுநிலை முகாமைத்துவத்தைச் சேர்ந்த பெண்களுக்கு திறன் கட்டியெழுப்பல் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குகின்றன. அத்துடன் இலங்கையின் நுண் மற்றும் சிறு வியாபாரங்களில் பணியாற்றும் தொழிற்முயற்சியாளர்களுக்கும் வழிகாட்டல்களை வழங்குகின்றன. சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் 2021 அடங்கலான இந்தச் செயற்பாடுகள், IFC-DFAT Women in Work நிகழ்ச்சியினூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான இடைக்கால அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அமன்டா ஜுவெல் கருத்துத் தெரிவிக்கையில், ‘உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவ பங்கேற்பை ஊக்குவிப்பதில் அவுஸ்திரேலியா உறுதியான அர்ப்பணிப்பை கொண்டுள்ளது. இலங்கையில் ஐகுஊ உடன் எமது றுழஅநn in றுழசம மற்றும் றுழஅநn in ஆயயெபநஅநவெ உடனான பங்காண்மை என்பது பெண்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இலங்கை பெண்களின் தொழில்நிலை சாதனைகளை கௌரவிக்கும் சிறந்த 50 நிபுணத்துவ பெண்கள் மற்றும் தொழில்நிலை விருதுகள் வழங்கல் நிகழ்வுடன் கைகோர்த்துள்ள நான்காவது வருடம் இதுவாகும். வெற்றியாளர்களை தெரிவு செய்யும் நடுவர் குழுவில், இதர உயர்நிலை நடுவர்களுடன் இணைந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.’ என்றார்.

கனடா மற்றும் மாலைதீவுகளில் பிரசன்னத்தை கொண்ட சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் வழங்கலினூடாக, விருதுகளை வென்றவர்களுக்கு தமது தொழில்நிலையில் அல்லது வியாபாரத்தில் முன்னேறுவதற்கு ஊக்கமளிப்பதுடன், பரந்தளவு பின்புலங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள பெண்களுகு;கு புதிய வாய்ப்புகளை இனங்காண்பதற்கும், தாம் தெரிவு செய்த துறையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு ஊக்குவிப்பதாகவும் அமைந்திருக்கும்.

2021 நடுவர் குழுவின் தலைமைப் பொறுப்பை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் செயலாளர் மற்றும் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு, சட்டச் செயற்பாடுகள் போன்றவற்றின் தலைமை அதிகாரி நதீஜா தம்பையா வகிப்பதுடன், அக்குழுவில், ஹேலீஸ் அக்ரிகல்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜயந்தி தர்மசேன, Dreamron குரூப் ஒஃவ் கம்பனிஸ் குழும முகாமைத்துவ பணிப்பாளர் ஃபிரதம நிறைவேற்று அதிகாரி கிஷு கோமஸ், Daily FT பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிஸ்தார் காசிம், Clootrack இலங்கைஃமாலைதீவுகள் மற்றும் பாகிஸ்தான் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹாந்த அதுகோரல, டயலொக் அக்சியாடா பிஎல்சியின் குழும பிரதம வாடிக்கையாளர் அதிகாரி சன்ட்ரா டி சொய்ஸா, தந்திரோபாய சந்தைப்படுத்தல் நிபுணர் சந்தியா சல்காடோ, KL.LK இன் பிரதம நிறைவேற்று அதிகார சந்தோஷ் மேனன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய இடைக்கால உயர் ஸ்தானிகர் அமன்டா ஜுவெல் மற்றும் IFC இன் Women in Work நிகழ்ச்சி முகாமையாளர் சாரா டுவிக் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இந்த விருதுகளுக்காக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது 2021 ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை இடம்பெறும் என்பதுடன், www.womeninmanagementawards.org எனும் இணையத்தளத்துக்கு பிரவேசித்து அவற்றை பதிவிட முடியும்.

IFC இனைப் பற்றி
உலக வங்கியின் சகோதர அமைப்பும் உலக வங்கிக் குழுவின் உறுப்பினருமான IFC வளர்ந்து வரும் சந்தைகளில் தனியார் துறையில் கவனம் செலுத்திய மிகப்பெரிய உலகளாவிய வளர்ச்சி நிறுவனம் ஆகும். உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நாங்கள் பணியாற்றுகிறோம், எங்கள் மூலதனம், நிபுணத்துவம் மற்றும் செல்வாக்கினைப் பயன்படுத்தி சந்தைகள் மற்றும் வாய்ப்புக்களை உருவாக்க மிகவும் தேவைப்படும். 2021ஆம் நிதியாண்டில் வளரும் நாடுகளுக்கு 31.5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நீண்ட கால நிதியுதவியினை நாங்கள் வழங்கினோம், தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பகிர்வு செழிப்பினை அதிகரிப்பதற்கும், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதார சுபீட்சத்திற்கும் தனியார் துறையின் சக்தியை மேம்படுத்துகிறோம். மேலும் தகவல்களுக்கு, www.ifc.org. பார்வையிடவும்.

Stay Connected
www.facebook.com/IFCwbg
www.twitter.com/IFC_org
www.youtube.com/IFCvideocasts
www.instagram.com\ifc_org
www.ifc.org/southasia
www.facebook.com/IFCsouthasia
www.twitter.com/IFC_SouthAsia

WIM இனைப் பற்றி
பெண்களின் வெற்றிக்காக அர்ப்பணிக்ப்பட்ட Women in Management (WIM) இலங்கையின் பெண் தொழில் வல்லுனர்களையும் தொழில் முனைவோரையும் ஒரு தனித்துவமான இணைய தளத்தின் மூலம் ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளை உலகளாவிய வெற்றிக்கு கொண்டு செல்கிறது. மேலதிக தகவல்களை பின்வரும் லிங்க்களில் பார்வையிடவும்:

www.womeninmanagementawards.org/ 

www.womeninmanagement.org/  

www.facebook.com/SLWIM/ 

www.twitter.com/WomeninManageme www.linkedin.com/in/women-in-management-sri-lanka


Share with your friend
Exit mobile version