இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க கூட்டாண்மையை புதுப்பித்துள்ள DHL Sri Lanka மற்றும் SOS Children’s Villages

Share with your friend

• மூன்று வருடங்களுக்கு மேலும் கூட்டாண்மை புதுப்பிக்கப்பட்டது.
• இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவவும், இளைஞர்களை பலப்படுத்தவும் வேலைவாய்ப்புத் திறன் மற்றும் போட்டிப் பயிற்சித் திட்டம்

உலகின் முன்னணி சரக்குப் போக்குவரத்து நிறுவனமான DHL இலங்கையில் SOS Children’s Villages உடனான கூட்டாண்மையை மேலும் மூன்று வருடங்களுக்குப் புதுப்பித்துள்ளது. வேலைவாய்ப்புத் திறன் மற்றும் போட்டித்தன்மை குறித்த பயிற்சித் திட்டங்களினூடாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பது தொடர்பில் இதனூடாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

SOS Children’s Villages International கீழான SOS Children’s Villages Sri Lanka அமைப்பானது பெற்றோரின் பராமரிப்பு இல்லாத சிறுவர்கள் மற்றும் பெற்றோரின் பராமரிப்பு இழக்கப்படும் அபாயம் கொண்ட சிறுவர்கள் தொடர்பில் கடந்த நான்கு தசாப்தங்களாக அக்கறை காண்பித்து வருகிறது. பிலியந்தலை, காலி, நுவரெலியா, அநுராதபுரம், மொனராகலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் SOS Children’s Villages அமைந்திருப்பதுடன், இவற்றில்; 800 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். SOS Family Strengthening Program இன் ஊடாக பெற்றோரின் பராமரிப்பை இழக்கும் அபாயம் கொண்ட 3200 சிறுவர்களுக்கான அனுசரணை வழங்கப்படுகிறது.

சவால்மிக்க பொருளாதார – சமூக பின்னணியுடன் கூடிய இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பது மற்றும் அவர்களைப் பலப்படுத்துவதற்காக SOS Children’s Villages International உடன் இணைந்து Deutsche Post DHL Group (DPDHL Group) இனால் GoTeach’ என்ற தொனிப்பொருளிலான சர்வதேச திட்டம் 2018ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்டது. இதன் ஒரு கட்டமாக, இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டாண்மை ஆரம்பமானது. 15 வயது முதல் 20 வயது வரையான இளைஞர்கள் ஊழியப் படையில் இணைவதற்கு தயார்ப்படுத்தல் மற்றும் அவர்களின் துறைசார் தனிப்பட்ட திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் DHL Sri Lanka இனால் உள்நாட்டில் பிரத்தியேகமான அபிவிருத்தித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தபட்டது. பிலியந்தலையில்; உள்ள SOS Children’s Village இல் முதலாவது திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டாண்மை தொடர்பில் னுர்டு நுஒpசநளள ளுசi டுயமெய இன் இலங்கைக்கான தலைமையதிகாரி டிமித்ரி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், ‘இளைஞர்கள் தொழில்முறை உலகில் காலடி எடுத்துவைக்கும் போது தேவையான சமூக திறன்கள் மற்றும் அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான ஆதரவினை இத்தகைய சவால்மிக்க சூழ்நிலையில் வழங்குவதனையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

காலி மற்றும் பிலியந்தலையில் உள்ள SOS Children’s Village இல்; இளைஞர்களுக்கான பயிற்சியைப் பட்டறையை DHL Sri Lanka ளுசi டுயமெய தற்போது பூர்த்தி செய்துள்ளது. இதில் 50;ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் அநுராதபுரம் மற்றும் நுவரெலியாவில் உள்ள SOS Children’s Village இல் எதிர்வரும் மாதங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படவுள்ளன.

பங்குபற்றுனர்களுக்கு பயிற்சியளிக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற பல்வகையான செயற்பாடுகள் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. DHL இன் செயற்பாட்டு அறைகளை பார்வையிடலூடாக ஆரம்பபமாகும்; இந்தப் பயிற்சிப் பட்டறை நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கைள அதிகரிப்பதற்கு தேவையான தனிநபர் முதிர்ச்சி தொடர்பிலான ஆலோசனைகள், சமூக மற்றும் வேலைதேடும் திறன் தொடர்பான குழுநிலைக் கலந்துரையாடல்களும் இந்த பயிற்சிப் பட்டறையில் இடம்பெறுகின்றன.

பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை மேம்படுத்திக் கொள்வதிலும், அவர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை அதிகரித்துக்கொள்வதிலும் எதிர்நோக்கும் முக்கிய சவால்களை சமாளிக்க இந்த செயலமர்வுகள் உதவியாக இருந்தன. உதாரணமாக, தனிநபர் முதிர்ச்சி குறித்த செயலமர்வில், இளைஞர்கள் அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் சுய விழிப்புணர்வை மேம்படுத்துவது தொடர்பில் கற்றுக்கொண்டதுடன், சமூகத் திறன் அமர்வில் அவர்கள் ஊழியப் படையில் நுழைந்து மற்றவர்களுடன் பணிபுரியும் போது தேவையான சமூக திறன்கள் பற்றி அறிந்துகொண்டனர். துறைசார் தகைமை மற்றும் அதனுடன் இணைந்த திறன்கள் குறித்து வேலை தேடுவது தொடர்பான செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.

இந்த தடைகளை சமாளித்து இளைஞர்களை ஆதரிக்கும் நோக்கில் ஊடாடும் விளையாட்டுகள் உள்ளிட்ட பல செற்பாடுகளை DHL Sri Lanka முன்னெடுத்துள்ளது. இதில் பங்கேற்பாளர்கள் கூட்டு குழுப்பணி மற்றும் தனிப்பட்ட மதிப்பீடு பற்றி அறிந்து கொண்டதுடன், அவர்களின் தலைமைத்துவ திறன், மன அழுத்த மேலாண்மை, தனிப்பட்ட நிதி மேலாண்மை, எழுத்து மற்றும் நேர்காணல் திறன்களை எவ்வாறு மேம்படுத்தல்?, பணி மனப்பான்மை மற்றும் தொழில் வழிகாட்டுதல் போன்றவை குறித்தும் அறிந்துகொண்டார்கள்.
இந்த இளைஞர்களுக்கு அவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மற்றும் கூட்டு திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், முன்மாதிரிகள் மூலம் மதிப்புமிக்க அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் DHL Sri Lanka இன் இந்தத் தலையீடு உதவியுள்ளது.

SOS Children’s Villages இன் தேசியப் பணிப்பாளர் திவாகர் ரட்ணதுரை குறிப்பிடுகையில், ‘SOS Children’s Villages இல் உள்ள இளைஞர்கள் தொழிற்சந்தைக்குள் நுழையும்போது அல்லது அவர்கள் பெரியவர்களாகி சுதந்திரமான வாழ்க்கைக்குச் செல்லும்போது குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றனர். DHL இன் ஆதரவுடன் அவர்கள் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கான அனுசரணையைப் பெற்றுக்கொள்வதுடன், சிறந்த நாளையை அவர்களால் கனவுகாண முடியும்’என்றார்.

இளைஞர்களுக்கு வழிகாட்ட முன்வந்த DHL Sri Lanka ஊழியர்களால் இளைஞர்கள் உரிய வழிகாட்டல்களைப் பெற்றுக்கொண்டதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் வல்லுநர்களும் இளைஞர்களை ஊக்குவிப்பதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
னுர்டு புடழடியட குழசறயசனiபெ ளுசi டுயமெய இன் பிரதம தலைமையதிகாரியும்;, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் தலைவருமான அஹமட் உர் ரஹ்மான் தெரிவிக்கையில், ‘னுர்டு இன் தன்னார்வப் பணியார்களின் ஒத்துழைப்பு மற்றும் அனுபவத்தினூடாக, இந்த இளைஞர்கள் தமது எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உந்து சக்தியாக அமைந்துள்ளதோடு, அவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்’என்றார்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply