உத்தியோகபூர்வமாக ColorOS 12 இன் உலகளாவிய பதிப்பை வெளியிடும் OPPO

Home » உத்தியோகபூர்வமாக ColorOS 12 இன் உலகளாவிய பதிப்பை வெளியிடும் OPPO
Share with your friend

அன்ட்ரொய்ட் 12 அடிப்படையிலான புதிய ColorOS மிருதுவான செயற்றிறன் உடன் அனைத்தையும் கொண்ட புதிய பயனர் இடைமுகத்தை (UI) வழங்குகிறது

OPPO தனது உலகளாவிய பயனர்களுக்கான புதிய ColorOS 12 இயங்குதளத்தை ஒக்டோபர் 11ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Android 12 (அன்ட்ரொய்ட் 12) இற்கு நெருக்கமான வகையிலான, தடையற்ற அனுபவத்தை அதன் பயனர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ColorOS 12 ஆனது, அனைத்தையும் உள்ளடக்கிய புதிய பயனர் இடைமுகத்தை (UI) கொண்டுள்ளது. அத்துடன் மிருதுவான செயற்றிறன், உங்கள் அன்றாட வேலை-வாழ்க்கை இடையிலான தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான சிறந்த சமநிலையை வழங்க உதவும் உயர் ரக அம்சங்களையும் கொண்டுள்ளது.

ColorOS 12 வெளியீடு

இந்த வெளியீட்டின் மூலம், OPPO தனது உலகளாவிய பயனர்களுக்கு ColorOS 12 வெளியீட்டுக்கு முன்னரான பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய உலகளாவிய பதிப்பை (public beta) உத்தியோகபூர்வமாக வெளியிடுகிறது. அந்த வகையில் அன்ட்ரொய்ட் 12 இல் இயங்கும் முதல் OEM களில் ஒன்றாக அது மாறியுள்ளது. அந்த வகையில் முதன் முதலில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் Find X3 Pro 5G இல் அது வெளியிடப்படுவதுடன், தொடர்ந்து OPPO வின் மேலும் பல மாதிரிகளுக்கு அதனை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் மேலும் பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு அது விரிவாக்கப்படவுள்ளது. 150 மில்லியன் பயனர்களுடன் 110 மாதிரிகளுக்கு ColorOS 12 ஐ கொண்டு வருவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்ளடக்கம் ஒரு மைய எண்ணக்கரு

புதிய OS ஆனது, மேலும் உள்ளடக்கங்களை வழங்குவதன் அனுபவத்தை வழங்குகிறது. மிருதுவான ஐகன்கள், அனிமேஷன்கள், பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு ஏற்ற தகவல் கட்டமைப்பு மற்றும் பல்வேறு தொலைபேசி வடிவங்களுடன் பொருந்தக்கூடிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

மிருதுவான, தடையற்ற அனுபவம் அதிக செயற்றிறன்

நீண்ட நேர பயன்பாட்டிற்குப் பின்னர் ஏற்படும் பின்னடைவுகள் மற்றும் செயற்பாட்டின் தடுமாற்றங்களை நிவர்த்தி செய்வதில் ColorOS 12 ஆனது சில சாதனைகளைச் செய்துள்ளது. குறிப்பாக சேமிப்ப பயன்பாடு, வள ஒதுக்கீடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்த OS ஆனது, சராசரியாக 30% குறைந்த நினைவக ஆக்கிரமிப்பு மற்றும் 20% குறைந்த மின்கல நுகர்வை கொண்டுள்ளது.

உங்கள் காட்சி உள்ளுணர்வை பூர்த்திசெய்யும் வகையில், 300 இற்கும் மேற்பட்ட மேம்பட்ட அனிமேஷன்களை Quantum Animation Engine அனுமதிக்கிறது. மனித மூளையின் அறிவாற்றல் மற்றும் பழக்கவழக்கங்களுடன் ஒத்த வகையில் மந்தநிலை, மீளுருவாக்கம் போன்ற விடயங்களால் அது சீரமைக்கப்படுகிறது. எனவே இதன் மூலமான அனுபவம் மிகவும் யதார்த்தமானதும் உணர்வு ரீதியாகவும் அமைகின்றது.

Google Lens மூலமான 3 விரல் மொழிபெயர்ப்பு, FlexDrop, Phone Manager, PC Connect போன்ற நடைமுறை அம்சங்கள் மூலம், ColorOS 12 பயனர்களை பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையிலான பயன்பாட்டிற்கு அனுமதிக்கிறது.

தனியுரிமைக்கு முன்னுரிமை

ColorOS ஆனது தனிநபர் தரவு உரிமைக்கு முன்னுரிமை அளித்து உருவாக்கப்பட்டுள்ளது. ColorOS 12 ஆனது அன்ட்ரொய்ட் 12 இலுள்ள தனியுரிமை விடயங்களை மாத்திரம் கொண்டிராது, (Privacy Dashboards, Approximate Location Sharing, Microphone, Camera Indicators) இருப்பிடத்தின் பகிர்வு, ஒலிவாங்கி, மற்றும் கெமெரா இயங்குகின்றதா என்பதை திரையில் காண்பிக்கும் வசதி உள்ளிட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களால் நிரம்பியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தனியுரிமையை பாதுகாக்க முடியும். அது மாத்திரமன்றி Private System, Private Safe, App Lock போன்ற வரவேற்பைப் பெற்ற அம்சங்களையும் OPPO குழு உருவாக்கியுள்ளது.

பயனர்களுக்கான தனியுரிமை என்பது வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பதாகும் என்பதை அறிந்திருப்பதால், OPPO சேமிப்பு மற்றும் செயல்முறை மூலம் தரவு இணக்கத்தை மேம்படுத்துகிறது. 

ePrivacy மற்றும் ISO27001 போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தனியுரிமை தொடர்பான சான்றிதழ்களை வைத்திருக்கும் நிறுவனம் எனும் வகையில், தரவு பாதுகாப்பிற்காக மூன்றாம் தரப்பு மேற்பார்வையாளரையும் OPPO பயன்படுத்துகிறது.

அன்ட்ரொய்ட் டெவலப்பர்களுக்கான திறந்த OS

எமது அன்ட்ரொய்ட் பங்காளிகளுடன் ஆரோக்கியமான பரஸ்பர பரிமாற்றத்தின் பொதுவான மதிப்பைப் பகிர்ந்துகொள்வதுடன், இரு தளங்களையும் மேம்படுத்துவதற்கான திறந்த தன்மை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு பங்களிக்கின்றது. 

OPPO இன் ColorOS ஆனது அதிக Android டெவலப்பர் நட்பு OS ஆக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. OPPO வின் மிகவும் சாதகமான கெமரா திறன்களை உள்ளடக்கிய கெமரா SDK இற்கு மேலதிகமாக, Ultra Steady Video Shooting, HDR, Super Wide-Angle போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளறன. OPPO அதன் HyperBoost, Color Vision Enhancement போன்றவற்றை அன்ட்ரொய்ட் செயலி டெவலப்பர்களுக்காக மேலும் திறந்தள்ளது.

OPPO இன் பிரத்யேக மேம்படுத்தல் கொள்கை

முதல் முறையாக, OPPO ஒரு பெரிய மேம்படுத்தல் கொள்கையையும் அறிவிக்கிறது. குறிப்பாக, 2019 மற்றும் அதற்குப் பிறகு வெளியாகும் OPPO சாதனங்களுக்கு நிறுவனம் தனது முதன்மை அன்ட்ரொய்ட் அப்டேட்களை Find X தொடர் சாதனங்களுக்கு வழங்கவுள்ளது. குறைந்த நினைவகம் கொண்ட A தொடர் மாதிரிகளான Reno/F/K மாதிரிகளுக்கு ஒரு அப்டேட்டையும். வழக்கமான security patch புதுப்பிப்புகளை, Find X தொடருக்கு நான்கு வருடங்களுக்கும், Reno/ F / K/ A தொடருக்கு மூன்று வருடங்களுக்கும் வழங்கும்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: