Site icon Eyeview Sri Lanka

உயர்த்த நிலையிலுள்ள “நிலைபேறான” இதழில் வெளியிடப்பட்டதன் மூலம் SLIIT இன் ஆராய்ச்சி கலாசாரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெறுகிறது

Share with your friend

ஒரே மாதிரியாக எதிர்பார்க்கப்படும், விவாதிக்கப்படும், முன்வைக்கப்படும் மற்றும் மதிப்பைக் கொண்ட ஆராய்ச்சிகளுக்கு ஆதரவான சூழலை வழங்குவது உள்ளிட் ஆராச்சி கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிறுவனமாக SLIIT அங்கீகரிக்கப்பட்டுள்ளது. SLIIT இன் ஆராய்ச்சி வெளிப்பாடுகளுக்குப் பங்களிப்புச் செலுத்தும் வகையில் பிஸ்னஸ் ஸ்கூலின் வர்த்தக முகாமைத்துவத் திணைக்களத்தின் விரிவுரையாளர் நில்மினி ரத்னாயக உயர்தர ஆய்வு ஆராய்ச்சியை வெளியிடுவதில் வெற்றியைப் பெற்ற SLIIT கல்வியாளர் என்ற உயர்ந்த சிறப்பைப் பெற்றுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்லைக்கழகத்தில் பொது முகாமைத்துவ (விசேட) விஞ்ஞானமானி பட்டத்தை (தங்கப் பதக்கத்துடன் முதல் தரத்தில்) பூர்த்திசெய்த ரத்னாயக, தற்பொழுது அதே பல்கலைக்கழகத்தில் MPhil ஐ தொடர்ந்து வருகிறார். தனது ஆய்வினை பிரசுரம் செய்தமை குறித்த அனுபவத்தையும், தனது நிலைப்பாடுகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

கேள்வி : உங்கள் ஆய்வுத் தலைப்பையும் அதைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தையும் தயவுசெய்து விளக்கவும்?

பதில் : “கொவிட்-19 மற்றும் அதற்கு அப்பாலான சூழ்நிலையில் பல்வேறு வகையான பல்கலைக்கழக கல்வியாளர்கள் வீட்டிலிருந்து எவ்வாறு வேலை பார்க்கிறார்கள்?” என்பதே எனது தலைப்பாகும்.

கொவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து வீட்டிலிருந்து பணியாற்றுவது என்ற எண்ணக்கரு நடைமுறைக்கு வந்ததுடன், பல்கலைக்கழக கல்வியியலாளர்களுக்கு இது புதியதொரு அனுபவமாக அமைந்தது. 

இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ள விடயங்களை இலங்கையின் உயர்கல்வி நிறுவனங்கள் கல்வியாளர்களுக்கு பயனுள்ள வேலை மாதிரிகள் குறித்த கொள்கைகளை உருவாக்கப் பயன்படுத்த முடியும் என நான் கருதுவதுடன், கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து திறனை விருத்தி செய்து அவற்றைத் தொற்றுநோய்க்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் பயன்படுத்தவும் முடியும். 

நான்காவது நிலைபேறான அபிவிருத்தி இலக்கான தரமான கல்வியை நோக்கி நாடு முன்னோக்கிச் செல்வதற்கு இந்த அனுபவம் வாய்ப்பாக அமையும். உயர் தரத்திலான ஆராய்ச்சி இதழில் இவ்விடயம் குறித்த தரமான ஆய்வுகளை என்னால் காணமுடியவில்லை. 

கேள்வி : உங்களுடைய இந்த ஆராய்ச்சியின் நடைமுறை பயன்பாடு உங்கள் பார்வையில் எவ்வாறாக அமைந்துள்ளது ?

பதில் : வீட்டிலிருந்து பணியாற்றுவவதன் பலன்களைப் பெறுவதன் மூலம் பல்வேறு வகையான கல்வி நோக்குநிலை மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வதில் சாதகமான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கலப்பின வேலை மாதிரியை அறிமுகப்படுத்தலாம். சில கல்வியாளர்கள் கற்பித்தலிலும், சிலர் ஆராய்ச்சியிலும், மற்றவர்கள் அறிவைப் பரப்புவதிலிலும் அதிக சார்நிலைகளைக் கொண்டுள்ளனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

அவர்களின் ஆதிக்கம் செலுத்தும் களங்கள் மற்றும் அவர்களின் கற்பித்தல் துறைகளை அடையாளம் கண்டுகொள்வதன் மூலம், உயர் கல்வி நிறுவனங்கள் முன்பு போல் முழு அளவிலான பௌதீக கல்விச் சூழலுக்குத் திரும்பாமல் ஒன்லைன் மற்றும் ஓஃப்லைன் எண்ணக்கருக்களின் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய பயனுள்ள கொள்கைகளைப் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான நெகிழ்வுப் போக்கைக் கொண்டுள்ளன.

டிஜிட்டல் புரட்சியானது உடல் உழைப்பிலிருந்து ஒன்லைன் தளங்களுக்கு மாறுவது, நம்பிக்கைக்கான நம்பத்தகுந்த காரணங்களை உருவாக்கியுள்ளது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் தொற்றுநோயானது உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்லைக்கழக கல்வியியலாளர்களுக்கு ஆசீர்வாதமாக அமைந்துள்ளது. உலகின் சிறந்த நடைமுறையுடன் எமது கல்வி முறையை சர்வதேசமயப்படுத்துவதற்கு இது வழியைத் திறந்துள்ளது. 

எனவே, எமது ஆய்வு சமூகம் மற்றும் மாறுபட்ட பங்காளர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி : உயர் சுட்டி தொடர்பில் உங்கள் சாதனை என்ன? 

பதில் : 85 உயர் சுட்டி மற்றும் ஸ்கோபஸ் டொப் 16% பிரிவுடன் எமது ஆய்வுப் பத்திரிகையை எம்மால் பிரசுரிக்க முடிந்தது. அதாவது உயர்ந்த மட்டத்திலான ஆய்விதழ்களுக்கு ஆய்வுப் பத்திரிகைகளை ஏற்றுக் கொள்வது 16% ஐவிடக் குறைவாகும்.  அத்தகைய கட்டுரையை வெளியிடுவது ஒருவரின் கல்வியியல் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

கேள்வி : SLIIT ஆய்வுகளுக்குப் பொருத்தமான சூழலை வழங்குகிறது என நீங்கள் நம்புகின்றீர்களா?

பதில் : உயர்ந்த மட்டத்திலான ஆய்வை மேற்கொள்வதற்கு ஆதரவு வழங்கிய மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய SLIIT இன் வேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் எல்.ரத்னாயக, உபவேந்தர் பேராசிரியர் லலித் கமகே, பிரதி உபவேந்தர் கலாநிதி நிமல் ராஜபக்ஷ, கல்விப் பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் ராகுல அத்தலகே ஆகியோருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

ஆய்வு கலாசாரத்தை உருவாக்குவதற்கு இன் பிஸ்னஸ் ஸ்கூலின் பீடாதிபதி பேராசிரியர் சமந்த தெலிச்ஜகொட கருவியாக அமைந்தார். எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய திணைக்களத்தின் தலைவர் கலாநிதி நிஷா ஜயசூரிய மற்றும் பிஸ்னஸ் ஸ்கூலின் பணியாளர்களுக்கும் எனது நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.

இந்த வெற்றியை அடைவதில் நான் பெருமையடைவதுடன், இதனை அடைவதற்கு ஸ்ரீஜயவர்த்தனபுர பல்லைக்கழகத்தில் எனது MPhil இற்கு ஆய்வு மேற்பார்வையாளர்களான பேராசிரியர் ஜனக குமாரசிங்ஹ மற்றும் பேராசிரியர் சிசிர குமார ஆகியோருக்கும் பெரும்பகுதி பங்குள்ளது. 

கேள்வி : ஆய்வுத் துறையில் உள்ள கல்வியியலாளர்கள் மற்றும் மாணர்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

பதில் : கல்வியியலாளர் என்ற ரீதியில் நிலைபேறான இலக்குகளை நோக்கி வேலை செய்ய எனக்கு ஆர்வம் இருந்தது. இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது. மேற்பார்வையாளர்களின் ஆதரவுடன் இந்த ஆவணத்தை உருவாக்க ஏறத்தாழ 6 மாதங்கள் ஆனது. கட்டுரையை பத்திரிகையில் சமர்ப்பித்த பிறகு, இரண்டு சுற்று திருத்தங்களுடன், மதிப்பாய்வாளர்களிடமிருந்து நுண்ணறிவுள்ள கருத்துகளைப் பெற்றேன்.

இது ஒரு கல்வியியலாளராக நான் பெற்ற அனுபவமாகும். நான் எதிர்கால ஆராய்ச்சியில் ஈடுபடும்போது இந்த அறிவை இப்போது பயன்படுத்த முடியும்.

உயர் குறியீட்டு இதழ்களில் வெளியிட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை நான் ஊக்குவிக்கிறேன். கடின உழைப்பு இருந்தபோதிலும், அனுபவம் வலுவூட்டும் அதே வேளையில் எங்கள் தொழில் வாழ்க்கைக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும் பங்களிப்பை அளித்தது.இது தொடர்பான முழுமையான கட்டுரையை வாசிக்க : https://www.mdpi.com/2071-1050/14/9/4868/pdf?version=1650343739


Share with your friend
Exit mobile version