எதிர்காலத்தை நோக்காகக் கொண்ட உலகத்தரமான அனுபவத்தை பெற மாணவர்களுக்கான  அழைப்புடன் 2011 செப்டம்பர் உள்ளீர்ப்பை SLIIT ஆரம்பிக்கிறது

Share with your friend

உற்பத்தித் திறன் மற்றும் நடைமுறை சாத்தியமான பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் பலமான தலைமைத்துவத்துடன் கூடிய தரத்திலான பட்டதாரிகளுக்கான அங்கீகாரம் பெற்ற SLIIT, இளங்கலைமானி பட்டத்துக்கான 2021 செப்டெம்பர் உள்ளீர்ப்பில்

 இணைந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இடைநிலைக் கல்வியின் முன்னோடியாகவும், நாட்டின் முதன்மையான அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனமாகவும் விளங்கும் SLIIT, கம்ப்யூட்டிங், வணிகம், பொறியியல், கல்வி, உளவியல், தாதியியல், சட்டம், கட்டடக்கலை, அளவையியல் மற்றும் விருந்தோம்பல் மற்றும் சமையல், மனிதநேயம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட பரந்த அளவிலான இளங்கலைமானி திட்டங்களில் இருந்து தேர்வு செய்ய புதிய மாணவர்களுக்குத் தெரிவுகளை  வவழங்குகிறது. SLIIT இன் அனைத்துப் பட்டங்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

வருங்கால மாணவர்களுக்கு மேலும் வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் SLIIT ஆனது உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற புகழ்பூத்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் பங்கான்மையை ஏற்படுத்தியுள்ளது. இதனைவிடவும் அவுஸ்திரேலியாவின்  Curtin பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியத்தின் Liverpool John Moores  பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் William Angliss நிறுவனம் ஆகியவற்றினால் வழங்கப்படும் வெளிநாட்டு பட்டப் பாடநெறிகளிலும் மாணவர்கள் இணைந்துகொள்ள முடியும். இந்தப் பட்டங்களின் ஒரு பகுதியை இங்கு முடித்துவிட்டு மிகுதியை வெளிநாடு சென்று  அந்ததந்த நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான வாய்ப்புக்களும் மாணவர்களுக்கு உண்டு.

புதிய உள்ளீர்ப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ” மாணவர்கள் எந்த பாடத்திட்டத்தை தேர்வு செய்தாலும் உலகின் நிலையான, தொழில்நுட்ப, சமூக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் தலைவர்களை உருவாக்க SLIIT இல் நாங்கள் முயற்சி செய்கின்றோம். சவால்களை வெற்றிகொள்ளக் கூடிய துறைசார் நிபுணர்களாக அங்கீகரிக்கப்பட்ட சிறந்த பட்டதாரிகளை உருவாக்கியதில் SLIIT பெருமையடைவதுடன், பல்வேறு துறைகளில் சிந்தனை மிக்க தலைவர்களாகத் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள மாணவர்களைத் தயார்படுத்தும் எங்கள் திட்டங்களில் அனுபவங்களைப் பெற மாணவர்களை அழைக்கிறோம்” என்றார்.

SLIIT ஆனது மாணவர்களுக்கு பாதுகாப்பான கற்றல் சூழலை வழங்குவது மாத்திரமன்றி, அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள வசதகளுடன் ஒப்பிடக்கூடியளவு வசதிகளைக் கொண்ட அதிநவீன கணினி ஆய்வகங்கள், நவீன விரிவுரை அரங்குகள், கற்றல் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக  புதிய மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மாணவர் சேவை உதவி மையம், மாணவர் மன்றம், ஆங்கில உதவி மையம் மற்றும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு இணையற்ற கற்றல் அனுபவத்தை வழங்குவதையும் உறுதி செய்கிறது.

SLIIT இன் 2021 செப்டெம்பர் உள்ளீர்ப்புக்கான விண்ணப்பப் படிவகங்கள் மற்றும் ஏனைய தகவல்களை http://apply.sliit.lk/Apply/Create என்ற இணையத்தளத்தின் மூலம் அல்லது 011 754 4801 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply