ஏசியா அசெட் ஃபினான்ஸ் பிஎல்சி தனது வலையமைப்பினை 2022 இல் நாடு முழுவதும் 70 இடங்களுக்கு விஸ்தரித்துள்ளதுடன், 2023 இல் மேலும் 20 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது

Home » ஏசியா அசெட் ஃபினான்ஸ் பிஎல்சி தனது வலையமைப்பினை 2022 இல் நாடு முழுவதும் 70 இடங்களுக்கு விஸ்தரித்துள்ளதுடன், 2023 இல் மேலும் 20 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது
Share with your friend

தங்கத்தை மையமாகக் கொண்ட இலங்கையின் ஒரேயொரு நிதியியல் தீர்வுகள் வழங்குநரான ஏசியா அசெட் ஃபினான்ஸ் பிஎல்சி, 2022 ஆம் ஆண்டில் 15 புதிய இடங்களில் தனது கிளைகளை விஸ்தரித்து, நாடு முழுவதும் 70 இடங்களுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. ஏசியா அசெட் ஃபினான்ஸ் பிஎல்சி, இலங்கையில் உள்ள அனைவருக்கும், கிடைக்கக்கூடிய வகையில் தனது புத்தாக்கமான நிதிச் சேவைகளை வழங்குவதற்காக மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளின் ஒரு அங்கமாக இந்த வலையமைப்பு விரிவாக்க முன்னெடுப்பு அமைந்துள்ளது. 52 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள, ஏசியா அசெட் ஃபினான்ஸ் பிஎல்சி ஆனது அதன் தாய் நிறுவனமான இந்தியாவைத் தளமாகக் கொண்ட உலகளாவிய நிதிச் சேவை நிறுவனமான முத்தூட் ஃபினான்ஸ் (Muthoot Finance) நிறுவனத்தின் பக்கலபலத்தைக் கொண்டது. இது உலகின் மிகப் பெரிய தங்க நிதி நிறுவனங்களில் ஒன்றாக, கிட்டத்தட்ட ரூபா 3 டிரில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் உள்ள பெரும்பாலான வர்த்தக வங்கிகளை விடவும் இது அதிகமான தொகையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டில், ஏசியா அசெட் ஃபினான்ஸ் பிஎல்சி ஆனது, வத்தேகம, புசல்லாவை, பொகவந்தலாவை, கிராண்ட்பாஸ், கந்தளாய், பொத்துவில், வெலிமடை, அப்புத்தளை, அக்கரபத்தனை, அச்சுவேலி, செட்டிகுளம், மட்டக்குளி, மானிப்பாய், எலகந்த மற்றும் ஹாவாஎலிய உள்ளிட்ட நாடளாவிய பல்வேறு இடங்களில் 15 புதிய கிளைகளைத் திறந்து வைத்தது. இந்த இடங்கள் வணிக மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையங்களாக இருப்பதால் மூலோபாய ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டன. அதே நேரத்தில் தங்கள் வாழ்க்கையில் தமது கனவுகளை அடைய ஆர்வமுள்ள இலங்கை மக்கள் இங்கு செறிந்து வசிக்கின்றனர். இவற்றில் சில இலங்கையின் முக்கிய நெடுஞ்சாலைகளில் முக்கியமான கேந்திர இணைப்புப் பிரதேசங்களில் அமைந்துள்ளன. 2022 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் விரிவாக்க முயற்சிகளால், ஏசியா அசெட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணியாளர் சமூகமும் 20% ஆல் வளர்ச்சியடைந்தது. அதன் சொத்துத் தளமும், நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக ரூபா 20 பில்லியனைத் தாண்டியுள்ளது. 

வலையமைப்பு விரிவாக்கம் மற்றும் பிற மூலோபாய முயற்சிகள் தொடர்பில், பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. ரஜீவ் குணவர்தன அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நெருக்கடியும், வாய்ப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நிலையில், வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதை நாங்கள் தெரிவு செய்கிறோம். இலங்கையில் இதுவரை நாம் கண்டிராத மோசமான பொருளாதாரச் சூழலுக்கு மத்தியிலும், எமது தாய் நிறுவனத்தின் ஆதரவுடன், எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் சிறந்த மதிப்பைத் தொடர்ந்து உருவாக்குவதற்கு இதுவே எம்மைத் தூண்டியது. 2022 ஆம் ஆண்டில், கிளை வலையமைப்பு, பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் அதிகம் முதலீடு செய்த சில நிதி நிறுவனங்களில் ஒன்றாக நாமும் காணப்படுவதுடன், 15 புதிய கிளைகளை திறந்து வைத்து, 9 மாதங்களில் எங்கள் சொத்துத் தளத்தை 22% ஆல் விரிவுபடுத்தியுள்ளோம். மேலும் தற்போதைய தேவைகளை எதிர்கொள்ள டிஜிட்டல் தங்க கடன்கள் போன்ற புத்தாக்கமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் மேலும் 20 புதிய இடங்களில் கிளைகளைத் திறந்துவைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும், இலங்கையில் தங்கத்தை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளின் மிகவும் அபிமானம் பெற்ற மற்றும் புத்தாக்கமான சேவை வழங்குநராக எங்களை நிலைநிறுத்த முயல்வதால், எங்கள் தயாரிப்பு விரிசையைத் தொடர்ந்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார். 

ஏசியா அசெட் ஃபினான்ஸ் பிஎல்சி என்பது வங்கியல்லாத நிதி நிறுவனம் என்பதுடன், உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டு, தங்கம் சார்ந்த நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மையமாகக் கொண்டு 1970 இல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதுடன், வைப்பாளர்கள் மற்றும் கடன்படுநர்கள் என இரு தரப்பினருக்கும் சேவைகளை வழங்கி வருகின்றது. ஏசியா அசெட் ஃபினான்ஸின் பரந்த அளவிலான நிதிச் சேவைகளில் தங்கக் கடன்கள், நிலையான வைப்புக்கள், அடமானங்கள் மற்றும் ஏசியா அசெட் ஃபினான்ஸ் செயலி மூலம் டிஜிட்டல் நிதிச் சேவைகள் ஆகியவை அடங்கும்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: