Eyeview Sri Lanka

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம் 2025இல் “Give Back Life” திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் Coca-Cola 

Share with your friend

கொழும்பில் நடைபெறும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ பானம் வழங்குநராக Coca-Cola தனது “Give Back Life” திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், சமூக நலனையும் ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் விற்பனையாகும் அனைத்து போத்தல்களும், கேன்களும் மறுசுழற்சி செய்யப்பட்டு, நிறுவனத்தின் “கழிவற்ற உலகம்” (World without Waste) என்ற நோக்கத்தை வலுப்படுத்துகிறது. அதேபோல, இத்திட்டம் 2035ஆம் ஆண்டுக்குள் நிறுவனம் அடைய விரும்பும் சுற்றுச்சூழல் இலக்குகளை நோக்கி ஒரு முக்கிய படியாக அமைகிறது.

Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம், Neptune மறுசுழற்சி நிறுவனத்துடன் இணைந்து, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் முழுவதும் PET பிளாஸ்டிக் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்துள்ளது. போட்டி நடைபெறும் நாட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்ய இத்தொட்டிகள் உதவுகின்றன. இந்தத் திட்டம் கழிவு சேகரிப்பாளர்கள், மறுசுழற்சியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, சேகரிக்கப்பட்ட போத்தல்கள் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி வழிமுறைகள் மூலம் முறையாக செயலாக்கப்படுவதை உறுதி செய்கிறது. இந்த திட்டம் இலங்கையின் கழிவு மேலாண்மை முறையை மேம்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் Coca-Cola நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. 

“மகளிர் கிரிக்கெட் இன்று மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது, விளையாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தி, ஒற்றுமையின் மூலம் சமூகங்களுக்கிடையேயான இடைவெளிகளை இணைக்கிறது,” என்று Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதீப் பாண்டே கூறினார். “ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தினால் அதிகரித்து வரும் புகழ் நமக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுக்கவும், ஒவ்வொரு பயன்படுத்தப்பட்ட போத்தலுக்கும் மறுசுழற்சி மூலம் புத்துயிர் அளிக்கவும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை இணைப்பதன் மூலம் Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம் தனது உலகளாவிய சுற்றுச்சூழல் இலக்குகளை அடைந்து வருகிறது. இந்த திட்டம் கூட்டுப்பொறுப்பு, புத்தாக்கம் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புகள் ஆகியவற்றின் மூலம் உள்ளூர் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.


Share with your friend
Exit mobile version