ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் மாணவர் பரிமாற்ற வழித்தடம் தொடர்பில் மதிப்புமிக்க குயின்லான்ட் பல்கலைக்கழகத்துடன் கூட்டாண்மையை ஏற்படுத்திய SLIIT

Share with your friend

-எட்டுப் பல்கலைக்கழகங்களைக் கொண்ட குழுவின் ஸ்தாபக உறுப்பினர்-

குயின்லான்ட் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் வணிக பட்டங்களை வழங்குவதற்கான பரிமாற்றல் வழித்தடம் தொடர்பில் உலகப் புகழ்பெற்ற குயின்லான்ட் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலம் உயர் தரத்திலான பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவதில் இலங்கையின் முன்னணியாளரான SLIIT உலக வலையமைப்பில் அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளது. 

குயின்லான்ட் பல்கலைக்கழகமானது அவுஸ்திரேலியாவில் உள்ள முன்னணியான ஆய்வுப் பல்கலைக்கழகம் என்பதுடன் இது உலகத்தில் உள்ள சிறந்த 50 நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மதிப்புமிக்க 21 பல்கலைக்கழகங்களின் உறுப்பினராகவும், எட்டுக்களின் குழுவின் (Go8) ஸ்தாபக உறுப்பினராகவும் இப்பல்கலைக்கழகம் காணப்படுகிறது. 

SLIIT மற்றும் குயின்லான்ட் பல்கலைக்கழகம் மற்றும் SLIIT இன் பல்வேறு முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்நிகர் முறையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. குயின்லான்ட் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி துணைவேந்தரும் தலைவருமான பேராசிரியர் டெபோரா டெரி ஆ, பிரதி துணைவேந்தர் (உலகளாவிய ஈடுபாடு மற்றும் தொழில்முயற்சியான்மை) கலாநிதி ஜெசிகா கலகர், வணிகம், பொருளாதார பீடத்தின் நிறைவேற்றுப் பீடாதிபதி பேராசிரியர் அன்ரூ கிரிஃபித்ஸ், பொறியியல், கட்டடக்கலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் இணை பீடாதிபதி (வெளிவிவகார ஈடுபாடு) பேராசிரியர் அலெக்ஸான்டர் ராக்கெக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

SLIIT தரப்பில் அதன் உபவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லலித் கமகே, தலைவரும், வேந்தருமான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக, கல்விக்கான பிரதி உபவேந்தர் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ, சர்தேசத்துக்கான பிரதி உபவேந்தர் கலாநிதி அத்துல பிட்டிகல ஆராச்சி, சர்வதேச பீடாதிபதி பேராசிரியர் மஹேஷய கபுருபண்டார, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சமன் திலகசிறி, SLIIT பின்ஸ் ஸ்கூலின் பீடாதிபதி பேராசிரியர் சமந்த தெலிஜ்ஜகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் குயின்லான்ட் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் வணிக பட்டங்களை முதல் இரண்டு ஆண்டுகள் SLIIT இல் கல்வி கற்று பின்னர் இரு ஆண்டுகளில் பட்டங்களைப் பூர்த்திசெய்வதற்கான ஒரு தெளிவான ஏற்பாட்டை குயின்லான்ட் பல்கலைக்கழமும் SLIIT  நிறுவனமும் இந்த இணைப்பின் ஊடாக மேற்கொண்டுள்ளன. குயின்லான்ட் பல்கலைக்கழகத்தின் பங்காளியாக மாறுவதற்கும், செயலமர்வுகள், ஆய்வுப் பயிற்சிகள், கற்பித்தலின் போதான சிறந்த நடைமுறைகள் போன்றவற்றில் கூட்டு முயற்சியாகப் பங்கேற்பதற்கும் SLIIT நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் ஒரு தளத்தை வழங்குகிறது.

“SLIIT உடனான எமது உறவுகளை மேலுப் பலப்படுத்துவதற்கும், ஆழப்படுத்துவதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம். SLIIT இற்கு விஜயம் செய்வதற்கு எனக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்ததுடன், நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து விடயங்கள் குறித்தும் நான் எனது விஜயத்தின்போது அசாதாரணமாக ஈர்க்கப்பட்டேன். பொறியியல் மற்றும் வணிகம் ஆகிய இரண்டு பீடங்களில் உள்ள பாடநெறிகளுடன் இது ஆரம்பிக்கப்படுவதுடன், கல்வியின் கேந்திர நிலையமாகவும், ஆராய்ச்சிகளுக்கான இணைப்புக்களை கட்டியெழுப்பி, மாணவர்கள் பரிமாற்றத்தின் ஊடாக எதிர்கால முயற்சிகளில் அர்த்தத்தை ஏற்படுத்துகிறது” என குயின்லான்ட் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி துணைவேந்தரும் தலைவருமான பேராசிரியர் டெபோரா டெரி ஆ தெரிவித்தார்.

பேராசிரியர் லலித் கமகே குயின்லான்ட் பல்கலைக்கழகத்துக்கு நன்றி தெரிவித்து கருத்து வெளியிடுகையில், “ G8 பல்கலைக்கழகத்துடன் முதல் தடவையாக நாம் கைச்சாத்திடும் மிகவும் முக்கியமான மற்றும் விரிவான ஒப்பந்தம் இது என்பதுடன், SLIIT இன் கல்வித் தரம், மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கு நாம் மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பு என்பவற்றின் மீது குயின்லான்ட் பல்கலைக்கழகம் வைத்திருக்கும் நம்பிக்கையை இது பறைசாற்றுகிறது. சர்வதேச மற்றும் உள்நாட்டு மாணவர்களை ஈர்க்கக் கூடிய நிலைமாறுகால கல்விக் கேந்திர நிலையமாக மாற்றுவது மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர் மட்டத்திலான இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவது என்ற இலங்கையின் இலக்குக்கு இந்தக் கூட்டாண்மை மிகவும் முக்கியமானதாகும். பொறியியல் மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் நாம் இதனை ஆரம்பித்தாலும் எதிர்காலத்தில் கட்டடக்கலை, கம்பியூட்டிங் மற்றும் ஏனைய துறைகளிலும் விஸ்தரிக்க எதிர்பார்க்கின்றோம். இணைந்து ஆய்வு, எமது இளம் கல்வியியலாளர்கள் குயின்லான்ட் பல்கலைக்கழகத்தில் PhD பட்டத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் குயின்லான்ட் பல்கலைக்கழகம் மற்றும் SLIIT இற்கு இடையில் மாணவர் பரிமாற்றம் ஆகியவற்றுக்கும் இந்த ஒப்பந்தத்தை விஸ்தரிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றார். 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply