Site icon Eyeview Sri Lanka

கடல்சார் பிளாஸ்ரிக் மாசு தொடர்பில் கவனம் செலுத்த இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையுடன் ஹேமாஸ் கைகோர்ப்பு

Share with your friend

ஹேமாஸ் ட்ரான்ஸ்போர்டேஷன் பிரைவட் லிமிடெட் மற்றும் எவர்கிறீன் மெரீன் (ஹொங் கொங்) லிமிடெட் ஆகியவற்றுக்கிடையிலான இணை நிறுவனமான எவர்கிறீன் சிப்பிங் ஏஜென்ஸி லங்கா (பிரைவட்) லிமிடெட், இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடன் கைகோர்த்து இலங்கையின் கடல்பரப்பில் காணப்படும் மாசுகள் தொடர்பில் கவனம் செலுத்த முன்வந்துள்ளது.

காலி, சமனல கால்வாய் பகுதியில் மிதக்கும் கழிவுகளை கையகப்படுத்தும் கடல் வடிகட்டி (‘Ocean Strainer’) ஒன்றை எவர்கிறீன் லங்கா நிறுவியுள்ளதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் ஐந்து “கரையோர பராமரிப்பாளர்” செயற்திட்டங்களையும் முன்னெடுக்கின்றது. இதில் பரனம்பல பீச் மற்றும் லுன பொகுன பீச் போன்றன அடங்கியுள்ளன. இந்தப் பங்காண்மை ஹேமாஸ் நிறுவனத்தின் சூழல்சார் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவானதாக உள்ளதுடன், இலங்கைக்கு உரித்தான உயிரினங்களை மூன்று அம்ச செயற்திட்டத்தினூடாக பாதுகாப்பதாக இந்த நிகழ்ச்சி நிரல் அமைந்துள்ளது. பொறுப்பு வாய்ந்த முறையில் பிளாஸ்ரிக் பாவனை மற்றும் கழிவகற்றல், எமது சூழல் கட்டமைப்பை பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்களை பேணுதல் போன்றன இந்த அம்சங்களில் அடங்கியுள்ளன.

இந்தப் பங்காண்மை தொடர்பில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடன் கைகோர்த்து எமது கடல்சார் சூழல் கட்டமைப்பை பிளாஸ்ரிக் கழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் பெருமை கொள்கின்றோம். குழுமத்தின் சூழல்சார் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பாவனையை குறைப்பதில் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை பொறுப்பு வாய்ந்த வகையில் கழிவகற்றுவதை உறுதி செய்வதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். எமது நாட்டில் பிளாஸ்ரிக் கழிவுகளை குறைக்கும் முயற்சிகளின் முதல் படிமுறையாக இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது. நாடு முழுவதிலும் சூழலில் வெளியிடப்பட்டிருக்கும் பிளாஸ்ரிக் கழிவுகளை தொடர்ச்சியாக சேகரிக்கும் பணிகளை முன்னெடுக்க உதவுவதுடன், எமது பிளாஸ்ரிக் பிரசன்னத்தைக் குறைக்கும் பணிகளையும் முன்னெடுப்போம்.” என்றார்.

கரையோர பராமரிப்பு நிகழ்ச்சியினூடாக, சமூகத்தாரை ஈடுபடுத்தி கரையோரப் பகுதியை தூய்மையாக பேணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அந்தப் பணிகளில் ஈடுபடுவோருக்கு வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வலுவூட்டும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றது. கடலிலிருந்து சுமார் ஐந்து டொன்கள் எடையுடைய பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றுவதற்கு இந்தத் திட்டம் உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், இலங்கையின் ஆபத்துக்குள்ளாகியுள்ள மற்றும் அழிவடைந்து செல்லும் கடல்சார் சூழல் கட்டமைப்பை பாதுகாப்பதற்கு உதவுவதாகவும் அமைந்திருக்கும்.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நடமாடல் பிரிவின் பணிப்பாளர் முஷின் கிசிலான் கருத்துத் தெரிவிக்கையில், “அடர்ந்த உயிரியல் பரம்பல் மற்றும் கடல்சார் சூழல் கட்டமைப்பைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது. துரதிர்ஷ்டவசமாக, பிளாஸ்ரிக் கழிவுகள் காரணமாக இது ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. சகல சமூகத்திலும் ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க அர்ப்பணித்துள்ள பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், எமது கடல்சார் சூழல் கட்டமைப்பை பாதுகாப்பதை உறுதி செய்வதில் பங்களிப்பு வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருந்தோம். தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கடல்கள், சமநிலையான சூழல்கட்டமைப்பை மற்றும் நீர் வளத்தைப் பேணுவதில் முக்கிய பங்காற்றுவதுடன், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்குகின்றது. இந்த நடவடிக்கைகளினூடாக, கடலில் பிரவேசிக்கும் பிளாஸ்ரிக் கழிவுகளை குறைப்பதற்கு நாம் எதிர்பார்ப்பதுடன், இலங்கையின் கடல்சார் சூழல் கட்டமைப்பை பாதுகாக்க எண்ணியுள்ளோம்.” என்றார்.

இலங்கையில் தினசரி 900 மெட்ரிக் டொன் பிளாஸ்ரிக் கழிவுகள் உருவாக்கப்படும் நிலையில், கடல் வடிகட்டி (‘Ocean Strainer’) மிதக்கும் கழிவு வடிகட்டியினூடாக, கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் சென்றடையும் முன்னர் அவற்றை சேகரித்து அகற்ற உதவும். இந்தத் திட்டத்தை MAS ஹோல்டிங்ஸ் வடிவமைத்திருந்ததுடன், முதலாவது வடிகட்டி, 2020 ஆகஸ்ட் மாதம் தெஹிவளை கால்வாயில் நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட முதல் வருடத்தில், இந்த மிதக்கும் வடிகட்டியினூடாக சுமார் 67,000 கிலோகிராம் பிளாஸ்ரிக் கழிவுகளை கடலில் கலக்கவிடாமல் தவிர்த்துக் கொள்ள முடிந்தது.  திறந்த புத்தாக்கம் மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பதில் கைகோர்ப்பு என்பதில் நம்பிக்கை கொண்டுள்ள MAS, 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு கடல் வடிகட்டி (‘Ocean Strainer’) தொழில்நுட்பத்தை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது. 

1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஹேமாஸ், குடும்பங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு உதவுவதை நோக்காகக் கொண்டிருந்தது. இந்த பிரதான நம்பிக்கை எமது 70 வருடங்களுக்கு மேலான செயற்பாடுகளில் தொடர்ந்தும் பின்பற்றப்படுகின்றது. இன்று, நுகர்வோர் வர்த்தக நாமங்கள், சுகாதாரபராமரிப்பு மற்றும் இதர சேவைகளினூடாக ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு நாம் ஆதரவளிக்கின்றோம். இலங்கையின் சமூக-பொருளாதார செயற்பாடுகளில் இணைந்துள்ள ஹேமாஸ், பிராந்தியத்தில் பங்களாதேஷ், மேற்கு வங்கம் மற்றும் மியன்மார் ஆகிய பிராந்தியங்களுக்கு வியாபித்துள்ளது. நாம் தொடர்ந்தும் பரந்த மற்றும் ஆர்வமுள்ள அணியினரில் முதலீடுகளை மேற்கொண்டு, அர்த்தமுள்ள சேவைகளை வழங்குவதுடன், நம்பிக்கை வாய்ந்த பங்காண்மைகளை ஊக்குவிப்போம். அவற்றினூடாக, எமது சகல பங்காளர்களுக்கும் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கமான உலகை உருவாக்க பங்களிப்பு வழங்குவோம்.

Image 01 Caption: 

இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொது முகாமையாளர் ஜகத் குணசேகர, இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தவிசாளர் தர்ஷனி லஹந்தபுர, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நடமாடல் பிரிவின் பணிப்பாளர் முஷின் கிசிலான், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழும நிலைபேறாண்மை மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல்கள் சிரேஷ்ட முகாமையாளர் இஷானி ரணசிங்க மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழும நிலைபேறாண்மை மற்றும் விசேட செயற்திட்டங்கள் முகாமையாளர் மிந்திக திலகரட்ன ஆகியோர் காணப்படுகின்றனர்.

Image 02 Caption:

இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தவிசாளர் தர்ஷனி லஹந்தபுர

Image 03 Caption:

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நடமாடல் பிரிவின் பணிப்பாளர் முஷின் கிசிலான்


Share with your friend
Exit mobile version