ஹேலீஸ் பெருந்தோட்டத்தின் துணை நிறுவனமான களனிவெலி தோட்டத்தில் (KVPL) அண்மயில் உலக சிறுவர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் உள்ளார்ந்த திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தன.
களனிவெளி பெருந்தோட்டத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளின் அற்புதமான திறமைகளை மேம்படுத்தும் வகையிலான கலைப் போட்டி மற்றும் திறன்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. 5 வயதுக்குட்பட்டவர்கள், 12 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் சிறப்பான செயல்பாட்டிற்காக வெற்றிக் கேடயங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசில்களும் வழங்கப்பட்டன.
வெற்றிபெற்ற குழந்தைகளின் கலை ஆக்கங்கள் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதியத்தின் (UNICEF) உத்தியோகபூர்வ இணையதளத்தில் காட்சிப்படுதத்தப்படுவதுடன், இதனால் இலங்கை குழந்தைகளின் திறமைகள் உலகம் முழுவதும் கொண்டுசெல்லப்படுகின்றன.
போட்டிக்காக 5,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் சித்திரங்கள் மற்றும் 350 வீடியோக்கள் முன்வைக்கப்பட்டன, இது ஒரு சிறப்பு நிகழ்வாக இருந்தது மற்றும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் அவர்கள் பங்கேற்றதற்காக ஒரு சிறப்பு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது