Site icon Eyeview Sri Lanka

கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் அறிக்கை (JAAF)

Share with your friend

கடந்த திங்கட்கிழமை (09) கொழும்பு மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில்  இடம்பெற்ற வன்முறை மற்றும் அதனால் ஏற்பட்ட உயிர் சேதம் துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் பொருளாதார நெருக்கடியின் அசாதாரணமான பாதகமான தாக்கம் குறித்து மக்களின் துயரம் குறித்தும் நாங்கள் அனுதாபம் கொள்கிறோம். எவ்வாறாயினும், விலைமதிப்பற்ற மனித உயிர்களை பலிவாங்கும் வன்முறையானது வன்மையான கண்டனத்திற்குரியது.

நாடு முழுவதும் அரசியல் ஸ்திரத்தன்மையை உடனடியாக மீட்டெடுக்குமாறு அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம். இந்த கடினமான நெருக்கடியின் மூலம் நாம் கூட்டாக இணைந்து செல்லும்போது, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை மற்றும் பணிச்சூழலை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

அதே வகையில், அமைதியான, ஜனநாயக ரீதியிலான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் வலுவாக ஆதரவளிக்கிறோம். தற்போதைய அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய அரசாங்கம் அவசரமாக நியமிப்பது மிகவும் முக்கியமானதாகும்.

நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி, சாத்தியமான வன்முறை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு திரும்புத அகிய இதே முடிவைத் தேடும் ஏனைய அனைத்து நிறுவனங்களின் முயற்சிகளையும் நாங்கள் ஆதரிப்போம்.


Share with your friend
Exit mobile version