கொடுப்பனவு சேவை அறிமுகத்துடன் Viber ஐ சிறந்த செயலி வகைக்குக் கொண்டு செல்ல தலைமைத்துவம் வகிக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரி Ofir Eyal

Home » கொடுப்பனவு சேவை அறிமுகத்துடன் Viber ஐ சிறந்த செயலி வகைக்குக் கொண்டு செல்ல தலைமைத்துவம் வகிக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரி Ofir Eyal
Share with your friend

Viber இன் சொந்த வொலட் மற்றும் ஏனைய அம்சங்களை மேம்படுத்துவதன் ஊடாக வாடிக்கையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை

குறுஞ்செய்தி அனுப்பல் மற்றும் அழைப்பை ஏற்படுத்தல் என்ற பிரதான அம்சங்களைப் பயனர்களுக்கு வழங்குவதில் உறுதியாக இருக்கும் அதேநேரம் சிறந்த செயலியாக மாற்றுவது என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் புகழ்பெற்ற தொடர்பாடல் செயலியை Rakuten Viber இன் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. Ofir Eyal நிதி தொழில்நுட்ப (fintech) வகைக்குள் கொண்டுவந்துள்ளார். 

பயனர்கள் இந்தத் தளத்திற்குள்ளேயே டிஜிட்டல் வொலட் ஒன்றை உருவாக்கி செயலிக்கான கொடுப்பனவு சேவைகளை மேற்கொள்ள Viber வழி ஏற்படுத்தியுள்ளது. ஏனைய நபர்களுக்குப் பணத்தைப் பரிமாற்ற, உற்பத்திகளைக் கொள்வனு செய்ய மற்றும் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள கொடுப்பனவுக்கான வொலட்களை வங்கிக் கணக்குகள் மற்றும் வீசா, மாஸ்டர் போன்றவற்றுடன் இணைக்க முடியும். பயனர்கள் இலவசமாப் பரிமாற்றத்தை மேற்கொள்ள நண்பர்-நண்பர் அம்சத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்துவதாக Viber அமைகிறது. இந்த வசந்த காலத்தில் ஜேர்மன் மற்றும் கிறீஸ் ஆகிய நாடுகளில் இந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், ஏனைய சந்தைகளுக்கு இந்த சேவையை விஸ்தரிப்பதற்கு முன்னர் தேவையான மேம்படுத்தல்களை மேற்கொள்ள முதல்காலப் பகுதியில் பயனர்களிடமிருந்து பின்னூட்டங்களை Viber பெற்றுக்கொள்ளும். 

“பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற எனது வகிபாகத்தின் ஊடாக, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்வது என்ற நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு Rakuten Viber இல் உள்ள உந்துதல் கொண்ட குழுவை வழிநடத்துவதற்கும் அதில் ஒரு பகுதியாக இருப்பதையிட்டு பெருமையடைகிறேன். மேலும், சூப்பர் செயலியாக மாறும் வகையில் செயற்பாடு மற்றும் பயனர்களின் அனுபவத்தை மெருகூட்டவும், செயலியில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் Viber இன் தரம் மற்றும் புத்தாக்கத்தைத் தொடர்ந்து பேண நாம் விரும்புகின்றோம். இன்று இருக்கும் நிலைக்குக் கொண்டுவரும் பயணத்தில் பகுதியாக இருந்த அனைத்துப் பணியாளர்களையும் நான் எப்பொழுதும் பாராட்டுவதுடன், அவர்களுக்கு நன்றி பாராட்டுகின்றேன்” என திரு. Eyal தெரிவித்தார்.

“நிறுவனம் மற்றும் எமது பயனர்களுக்கு சேவையாற்றுவதற்கான எனது வகிபாகம் மற்றும் நோக்கம் என்பவற்றை நான் தெளிவாக வரையறுத்துள்ளேன். இந்தப் பயணம் எனக்கும் Viber இற்கும் சவால் மிக்கதாக இருந்தாலும் எமது தொழில்நுட்பத்தை வழங்குவது என்ற உறுதிமொழியை நிறைவேற்ற எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்” என்றார். 

Viber இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கடந்த வருடம் ஓகஸ்ட் தாம் இப்பதவிக்கு அடியெடுத்து வைத்ததுடன், நிறுவனத்துடனான தனது 7 ஆண்டுகளுக்கும் மேலான பதவிக்காலத்தின் பயணம் முழுவதும் Viber ஐ வளர்ப்பதற்கும் நிறுவனத்தைப் பயனர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்னர் Rakuten Viber இன் தயாரிப்புக்கான துணைத் தலைவராகப் பயனர்களுக்கான அனுபவம், வாடிக்கையாளர் வெற்றி, உள்ளடக்கம் மற்றும் உள்ளூர்மயமாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார்.

அண்மையில், Viber இன் தற்போதைய முன்னேற்றங்கள், வணிகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டிலும் பயனர்களின் அனுபவத்தை அதிகரிக்க உதவும் அம்சங்களை வழங்கியிருப்பதுடன், இது பயன்படுத்துபவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை இவை ஊக்குவிக்கின்றன. Viber இன் உயர் பதவியைப் பெற்றுள்ள திரு. Eyal நிறுவனத்தின் இலட்சியத் தயாரிப்புக்களை உருவாக்குதல் மற்றும் சந்தை விரிவாக்கம் குறித்துக் கவனம் செலுத்தியுள்ளார். அதேநேரம், நிறுவனம் ஒரு உலகளாவிய தொழில்துறையின் முன்னணியாளராகத் தன்னை வேறுபடுத்திக் காண்பிப்பதால் புதிய வணிக வாய்ப்புக்களையும் அவர் தேடிவருகின்றார்.

ஆசிய பசுபிக் Viber இன் உயர்ந்த முன்னேற்றத்தைக் கொண்ட பிராந்தியமாகக் காணப்படுகிறது. இதன் வளர்ச்சி வருடாந்தம் 20% ஐவிட அதிகமாகக் காணப்படுவதுடன், இப்பிராந்தியத்துக்கு தனித்துவமான திட்டங்கள் மற்றும் புத்தாக்கமான கூட்டாண்மைகள் தொடர்ந்து வருகின்றன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் Viber தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்டு வருவதுடன், நாடுகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மைகள், உள்ளூர்மயப்படுத்தும் திட்டங்கள், பயனர்களுக்கு மேலும் நன்மைகள் மற்றும் விசேட கழிவுகளை வழங்கி பயனர்களின் எண்ணிக்கையை கணிசமாக வளர்த்துள்ளது. 

இலங்கையில் மிகவும் நம்பிக்கையானதும், பெரிதும் விரும்பப்படும் குறுஞ்செய்தி செயலியாக Rakuten Viber விளங்குவதுடன், பயனர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான தொடர்பாடலை வழங்குவதற்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் தெரிவுகளுக்கு ஏற்ற வகையில் உள்ளூர் கூட்டாண்மைகளைத் தொடர்ந்தும் ஏற்படுத்தி வருகிறது. இலங்கையிலுள்ள Viber வாடிக்கையாளர்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு போட்டிகள் பற்றிய விபரங்கள், புதிய செய்திகள், போட்டி தொடர்பான எதிர்வுகூறல்களை முன்வைப்பதற்கான வாய்ப்புக்கள், பரிசுகளை வெல்லக் கூடிய வாய்ப்புக்கள் போன்றவற்றை வழங்கக் கூடிய வகையில் Cricket Vibes Channel ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த சனலின் விசேட அம்சமாக  ‘Cricket Talks’ காணப்படுவதுடன், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்குபெற்றும் கிரிகெட் தொடர்பான விடயங்களைக் கொண்ட கலந்துஐரயாடல் நிகழ்வாகும். 8 இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை இந்தச் சனல் கொண்டுள்ளதுடன், இது தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. 

Viber ஐ அடுத்து எந்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தெளிவான வழிகாட்டுதலை அவர் கொண்டுள்ளார். இன் தலைமைத்துவத்தில் தயாரிப்பு, சேவை முன்னேற்றம், புதிய சந்தையில் விஸ்தரிப்பு என்பவற்றில் தொடச்சியாக 
Viber ஐ அடுத்ததாக எங்கு கொண்டு செல்ல விரும்புகிறார் என்பது பற்றிய தெளிவான வழிகாட்டுதலுடன், திரு. Eyal இன் தலைமையானது Viber இன் தயாரிப்பு மற்றும் சேவை மேம்பாடு மற்றும் புதிய சந்தைகளில் விரிவாக்கம் ஆகியவற்றில் தொடர்ந்து வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மாத்திரமன்றி உலக குறுஞ்செய்தி மற்றும் செயலி தளத்தில் Viber ஆனது பாரிய புத்தாக்கம் கிறைந்ததாக விளங்கச் செய்யவதற்கும் அவருடைய தலைமைத்துவம் உதவியாக இருக்கும்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: