கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் 2 ஆவது அரையாண்டு தேர்ச்சி அறிக்கை  

Home » கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் 2 ஆவது அரையாண்டு தேர்ச்சி அறிக்கை  
Share with your friend

ஆகஸ்ட்  2022, கொழும்பு: இந்த அறிக்கையானது ஜனவரி முதல் ஜூன் 2022 வரையிலான கொழும்பு துறைமுக நகர செயற்திட்ட நடவடிக்கைகளின் செயல்பாடுகளை உள்ளடக்கியதுடன், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவால் (CPCEC/Commission).பகிரப்பட்டது.  

 • ஒட்டுமொத்த செயற்திட்டத்திற்கான அபிவிருத்திக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் (DCR) ஏப்ரல் 2022 இல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்ததுடன், ஜூன் 2022 இல் அரசாங்க அதிகாரிகளுக்காக ஆணையத்தால் அவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றும் நடத்தப்பட்டது. அபிவிருத்திக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஆனது நிர்மாணிப்பாளர்கள், குடியிருப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கு கட்டமைப்பு மற்றும் திட்டமிட்ட நகரத்தில் உள்ள காணிகளின் பயன்பாடு தொடர்பில் அறியத்தருகின்றன.
 • மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்கள், கடல்கடந்த நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், தீர்வையின்றிய சில்லறை வர்த்தக செயல்பாடுகள், கட்டணம் மற்றும் அபிவிருத்திக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் போன்ற முக்கிய ஒழுங்குமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த முக்கிய ஒழுங்குமுறைகள் சர்வதேச ஆலோசகர்களுடன் சேர்ந்து, இனங்காணப்பட்ட வளர்ச்சிவாய்ப்புடைய துறைகளுக்கான பொருத்தமான வரைவு கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் அபிவிருத்தியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நிதி மற்றும் நிதி அல்லாத பகுதிகளில் மிகச் சிறந்த ஒழுங்குமுறைகளுக்கு விரிவான தர ஒப்பீட்டு ஆய்வுகளுடன் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், முதலீட்டாளர் ஒப்பந்தம் மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கான உரிமம் வழங்கும் செயல்முறைகளுக்கான விரைவான அங்கீகார நடைமுறையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
 • செயற்திட்ட நிறுவனத்தால் தொழில்நுட்ப ரீதியாக பூர்த்தி செய்யப்பட்ட 74 காணித் துண்டுகளில் 42 ஐ ஆணைக்குழு இப்போது பெற்றுள்ளது, அதற்கான பூர்த்திச் சான்றிதழ்கள் செயற்திட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
 • செயற்திட்ட நிறுவனத்திற்கு 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட 34 செயற்திட்ட நிறுவனத்தின் சந்தைப்படுத்தக்கூடிய காணித் துண்டுகளில், 6 காணித் துண்டுகள் செயற்திட்ட நிறுவனத்தால் மீண்டும் ஆணையத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளன. ஆணையம் முதலீட்டாளர்களுக்கு அண்ணளவாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் 99 ஆண்டு காலத்திற்கு 6 புதிய ஒப்பந்தக் குத்தகைகளை வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் 600 மில்லியன் அமெரிக்க டொலர் கூட்டு முதலீட்டு உறுதிப்பாட்டைக் கணித்துள்ளனர்.
 • பிராந்தியத்தின் முதல் மத்திய தீர்வையற்ற வணிக பேரங்காடியின் உள்கட்டமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், உட்புற பொருத்தப்பாடு பணிகள் விரைவில் ஆரம்பிக்கும். கொழும்பு துறைமுக நகர தீர்வையின்றிய ஒழுங்குமுறைகள் வரைவு செய்யப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. கொழும்பு துறைமுக நகரத்தை பிராந்திய பொருட் கொள்வனவு மையமாக நிலைநிறுத்தி, உலகின் முன்னணி மத்திய தீர்வையின்றிய பேரங்காடி தொழிற்பாட்டார்கள் இருவரால் இந்த பேரங்காடி மையம் இயக்கப்படும்.
 • ஒரு முன்னணி உலகளாவிய உணவு மற்றும் பான வகை தொழிற்பாட்டாளரை கொழும்பு துறைமுக நகரத்தில் அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. கீழைத்தேய, மேலைத்தேய மற்றும் கலப்பு உணவு வகைகளை இதன் மூலமாக வழங்கி, மத்திய தீர்வையின்றிய பேரங்காடி பொருட் கொள்வனவுக்கான ‘மதுபான சாலை’ கோட்பாட்டினை உருவாக்கும் அதேசமயம், கொழும்பு நகரில் உலகத் தரம் வாய்ந்த உணவருந்தும் இடமாகவும் மாறவுள்ளது. 
 • புறப்படும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான ‘தன்னியக்க முறையில் சுயமாக பயண புறப்பாட்டு நடைமுறைகளை பூர்த்தி செய்யும் செயல்முறை’ மற்றும் ‘தன்னியக்க முறையில் சுயமாக பயணப் பொதிகளை ஏற்றுதல்’ ஆகியவற்றின் சாத்தியக்கூறுகளுக்கான திட்டம் தற்போது வரையப்பட்டு, அவர்களின் பொருட் கொள்வனவு அனுபவத்தை நெறிப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 • ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் இணைந்து, கொழும்பு துறைமுக நகரச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட 3 விசா வகைகளுக்கான விசா விண்ணப்பம் மற்றும் அங்கீகார செயல்முறையை நெறிப்படுத்தி, தன்னியக்கமயமாக்குகின்றது. இவை முதலீட்டாளர் விசா (10 ஆண்டுகள்), வேலைவாய்ப்பு விசாக்கள் (ஒப்பந்த காலத்தைப் பொறுத்தது), மற்றும் நீண்ட கால வதிவிட விசாக்கள் (குத்தகை காலத்தைப் பொறுத்தது) மற்றும் விசாவைப் பெற்றுள்ளவர்களின் குடும்பத்தினர் அடங்கலாக அவர்களைச் சார்ந்த அனைவருக்குமான விசாக்களையும் உள்ளடக்கியது.
 • சர்வதேச வர்த்தக பிணக்கு தீர்வு மையத்தை சர்வதேச தொழிற்பாட்டாளர்களுக்கு வழங்குவது மற்றும்/அல்லது இலங்கை நீதி அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் சிங்கப்பூர் சர்வதேச நடுவப்பணி மையத்திலிருந்து தொழில்நுட்ப உதவியைப் பெறுவது தொடர்பாக சிங்கப்பூர் சர்வதேச நடுவப்பணி மையத்துடன் ஆணைக்குழு கலந்தாலோசித்து வருகிறது.
 • கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 30 ஆவது பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள ஒற்றை நுழைமுக வணிச் செயற்பாட்டு வசதி செயல்முறை ஆணையின் கீழ், கொழும்பு துறைமுக நகர சட்டத்தின் கீழ் எளிதாக நிறுவனங்களை அமைப்பதற்காக இலங்கையில் உள்ள கம்பனிகள் பதிவாளர் நாயகத்துடன் துரிதமான செயல்முறை ஏற்பாடு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
 • நாணயச் சபையும் நிதி அமைச்சும் ஆரம்பத்தில் 4 வங்கிகளுக்கான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தப்பட்ட கடல்கடந்த உரிமங்களை முழுமையாக அங்கீகரித்துள்ளன. மேலும், இலங்கை மத்திய வங்கியானது அதன் ஒழுங்குமுறை வரம்பிற்குட்பட்ட கொழும்பு துறைமுக நகர முதலீட்டுக் கணக்கு என்ற புதிய வகைக் கணக்கை உருவாக்கியுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிதியின்  உள்வரவுக்கு இது உதவும்.
 • கொழும்பு துறைமுக நகர உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்துவதற்காக உலகின் மிகவும் காலநிலைக்கு ஏற்ற நகரங்களின் விரிவான ESG (சூழல், சமூகம் மற்றும் ஆட்சி அதிகாரம்) தர ஒப்பீட்டு ஆய்வை ஆணையம் முன்னெடுத்து வருகிறது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம் (CPCEC/ஆணைக்குழு)

info@portcity.gov.lk 


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: