கொவிட்-19ற்கு எதிரான போராட்டத்துக்காக சுகாதார அமைச்சுக்கு முதலாவது தொகுதி முக்கிய உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை ChildFund Sri Lanka நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது

Share with your friend

தொடர்ச்சியான ஆதரிவின் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு முறைமையை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடையாளம் கண்டுகொண்டுள்ள ChildFund Sri Lanka நிறுவனமானது தொற்நோய்க்கு எதிரான போராட்டத்தில் உயிர்களைக் காப்பதற்காக 8,100,000 ரூபா பெறுமதியான புத்தம் புதிய முக்கிய உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை சுகாதார அமைச்சிடம் அண்மையில் கையளித்தது, 

அதிக பாவனையைக் கொண்ட ஐந்து நெபியூலைஸர்கள், ஆறு பல்டிபரா மொனிட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் முதற்கட்டத் தொகுதியில் உள்ளடங்கியிருப்பதுடன், தொற்று நோய்க்கு எதிராக நாடு முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது விசேடமாக சுவாசப் பிரச்சினை உள்ள நோயாளர்களுக்கு உதவி செய்வது இதன் பிரதான நோக்கமாகும்.

இந்த உபகரணங்கள் ChildFund Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளரும், திட்டப் பணிப்பாளருமான நாளக சிறிவர்தனவினால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன, அரசசார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜா குணரத்ன ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வு கடந்த 2021 ஜுலை 20ஆம் திகதி கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ChildFund Sri Lanka நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிரான்ட் போஸ்ட் அவோர்ட்ஸ் முகாமையாளர் ரொஷான் தெலபண்டார, நிர்வாக உதவியாளர் ஃபெட்ரோ சுரேன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

ChildFund Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் நாளக சிறிவர்தன தெரிவிக்கையில், “சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் வைரஸ{க்கு எதிராகப் போராடுவதற்கான அவசியமான உபகரணங்களை வழங்குவதே எமது இந்த நன்கொடையின் நோக்கமாகும். உள்ளூர் சமூகத்துக்கான அர்ப்பணிப்பிற்கான மற்றுமொரு அடையாளமாக இந்த நன்கொடை அமைவதுடன், முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதைய தருணத்தில் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை அடையாளம் கண்டுகொண்டதற்கான சமிக்ஞையாகவும் இது அமைகிறது” என்றார்.

இந்த நன்கொடையானது கொவிட்-19 இனால் ஏற்படுகின்ற நிவாரணத் தேவைகள் மற்றும் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு உதவுவதற்கான நிதி சேகரிப்புத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட  ChildFund Sri Lanka நிறுவனத்தின் கொவிட் பதிலிறுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளும் அனைத்து நன்கொடைகளுக்கும் ChildFund ஆனது சம அளவு பணத்தை வழங்கும் அல்லது அப்பெறுமதிக்கு சமமான அளவு மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்து கொடுக்கும். கொவிட்-19 பதிலிறுப்புத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்ப்பாதையை அளிப்பதற்கு கடந்த நான்கு மாதங்களில் தொடர்ச்சியான முயற்சிகளை ChildFund Sri Lanka நிறுவனமானது நடைமுறைப்படுத்தவுள்ளது. ‘Sri Lanka Gives Back’ என்ற நிதிதிரட்டலுக்குக் கிடைக்கும் அனைத்து நிதிகளும் இந்த முயற்சிகளுக்கு வழங்கப்படவுள்ளது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply