கொவிட்-19 அவசர நிவாரணத்துக்கு ஆதரிக்கும் Sri Lanka Gives Back நிதி திரட்டலை அங்குரார்ப்பணம் செய்துள்ள ChildFund Sri Lanka நிறுவனம்

Share with your friend

கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான பாதை நீண்டது என்பதுடன் கடுமையானது என்பதையும், இலங்கையில் உள்ள சமூகங்களுக்கு முன்னெப்போதும் இல்லாதளவு உதவி தேவைப்படுகிறது என்பதையும் ChildFund Sri Lanka நிறுவனமானது புரிந்துகொண்டுள்ளது. கொவிட்-19 இல் இருந்து உருவாகும் நிவாரணத் தேவைகள் மற்றும் நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் தேவைகளில் பங்குதாரர்களாக இணைந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பதுடன், அனைத்து நன்கொடைகளுடனும் ஒன்றுக்கொன்று இணங்கச் செய்யும் உறுதிப்பாட்டுடன் ChildFund Sri Lanka நிறுவனம் தனது தனித்துவமான நிதி திரட்டும் தளமான ‘Sri Lanka Gives Back’ அண்மையில் அங்குரார்ப்பணம் செய்தது.

இதனூடாகக் கிடைக்கும் அனைத்து நன்கொடைகளையும் ஒன்றுடன் ஒன்று இணங்கச் செய்வதில் ChildFund Sri Lanka நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது. பணமாக அல்லது மருத்துவ உபகரணமாகக் கிடைக்கும் ஒவ்வொரு நன்கொடைக்கும் ChildFund Sri Lanka நிறுவனமானது அதே நன்கொடைக்கு நிகரான பணத்தையோ அல்லது தேவையான மருத்துவ உபகரணங்களையோ கொள்வனவு செய்து வழங்கும்.

பெருநிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் உதவி செய்யும் நோக்கத்தைக் கொண்ட குழுக்கள் அல்லது நபர்களை இந்த முயற்சியில் ஈடுபாடு காட்டுமாறும், இப்பயணத்தில் பங்காளர்களாக இணைந்துகொள்ளுமாறும் ChildFund Sri Lanka நிறுவனம் அழைப்பு விடுத்திருப்பதுடன், தகுதியான காரணத்துக்குப் பங்களிப்புச் செய்யுமாறும் குறிப்பாக, மோசமான கொவிட்-19 அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவுமாறும் அழைத்துள்ளது.

கொவிட்-19 பதிலிறுப்புத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்ப்பாதையை அளிப்பதற்கு கடந்த நான்கு மாதங்களில் தொடர்ச்சியான முயற்சிகளை ChildFund Sri Lanka நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ளது. ‘Sri Lanka Gives Back’ என்ற நிதிதிரட்டலுக்குக் கிடைக்கும் அனைத்து நிதிகளும் இம் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

தமது திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள 200,000 சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இந்த முயற்சிகள் சென்றடையச் செய்வதே ChildFund Sri Lanka நிறுவனத்தின் இலக்காகும். இது 11 மாவட்டங்களில் 226 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. ChildFund Sri Lanka நிறுவனத்தின் கொவிட்-19 அவசர நிவாரணத் திட்டத்தின் ஊடாக தேசிய மட்டத்தில் 500,000 தனிநபர்கள் நன்மையடைவார்கள்.

இந்த முயற்சிகள் குறித்து ChildFund Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திரு.நாளக்க ஸ்ரீவர்த்தன விளக்கமளிக்கையில், ‘உலகளாவிய தொற்றுநோயான இக் ஊழுஏஐனு-19 பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பங்களை அச்சுறுத்துகிறது, குறிப்பாக அவர்களின் உடல்நலம், கல்வி, அடிப்படை தேவைகள் மற்றும் ஏனைய சேவைகளை பெறுதல் மற்றும் சமூகத் தொடர்பு ஆகியவற்றில் அவர்களின் வாழ்க்கையில் பாரிய இடையூறுகளை உருவாக்கியுள்ளது. ஊhடைனகுரனெ நிறுவனத்தின் கொவிட்-19 அவசர நிவாரண முயற்சிகள் மற்றும் நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களிற்கு எம்மோடு இணைந்து செயற்பட, அதற்கு பங்காளர்களாக இணைந்துகொள்ளுமாறு பொதுமக்கள், தனிநபர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களை நாம் அழைக்கின்றோம்’என்றார்.

தேவைப்படும் சமூகங்களுக்கு உதவுவதற்காக, ChildFund Sri Lanka நிறுவனமானது அத்தியாவசிய உணவுகள், உலருணவுகள், மருந்துகள், முகக்கவசங்கள், முகமூடிகள், கிருமிநீக்கிகள் போன்றவற்றை பெரும்பாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வருகிறது. ஏனைய உணவு விநியோகத் திட்டங்களினால் ஆதரவு பெறாதவர்களே எமது இந்த உதவிகளைப் பெறுகின்றனர்.

கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள் மற்றும் ஏனைய சுகாதாரத் துறையினர் முன்னணியில் உள்ளனர் என்பதை அங்கீகரிப்பதுடன், அவர்கள் தனிநபர் பாதுகாப்பு அங்கிகளிலேயே அதிகம் தங்கியுள்ளனர். சுகாதார மற்றும் தூய்மையான சேவையை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய உயிர் காக்கும் கருவிகள், பாதுகாப்பு கியர்கள் மற்றும் கிருமிநாசினிகளை ChildFund Sri Lanka நிறுவனமானது விநியோகித்து வருகிறது.

புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் தற்காலிக கொவிட்-19 சிகிச்சை நிலையத்தில் வைரஸுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான சுகாதார வசதிகளை மேம்படுத்த ChildFund Sri Lanka நிறுவனமானது உதவிகளை வழங்கியிருந்தது. எதிர்காலத்தில் கிராமிய வைத்தியசாலைகளில் மேலும் சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு உதவவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவிவரும் ChildFund Sri Lanka நிறுவனமானது புதிய சூழலில் இந்தக் குடும்பங்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

Global Shapers Kandy Hub, Headstart Pvt. Ltd, John Keells Foundation, Leo Club of Colombo Fort மற்றும் Rotaract Club of University Alumni உள்ளிட்ட இன்றுவரை அனைத்து விடயங்களுக்கும் ஒத்துழைக்கத் தயாராகவிருக்கும் மகத்தான நன்கொடையாளர்களையும் ChildFund Sri Lanka நிறுவனமானது பாராட்டுகிறது.

இந்த சுகாதார நெருக்கடியால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டுள்ள தேசத்திற்கும் அனைத்து சமூகங்களுக்கும் உதவுகின்ற ChildFund Sri Lanka நிறுவனமானது எதிர்காலத்தில் தேவைகளின் அடிப்படையிலான திட்டங்களுக்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கிறது.

ChildFund Sri Lanka நிறுவனத்தின் ‘Sri Lanka Gives Back’ பற்றிய மேலதிக தகவல்களை அறிய விரும்புவர்கள் மற்றும் கொவிட்-19 அவசர பதிலிறுப்புத் திட்டத்தில் இணைய ஆர்வம் உள்ளவர்கள் 1094 716446683 என்ற இலக்கத்தில் அல்லது rkatugaha@childfund.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எமது நிறுவனத்தின் உத்தியோகத்தர் ருவந்த கட்டுகஹாவைத் தொடர்புகொள்ள முடியும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply