Site icon Eyeview Sri Lanka

கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட தெஹிவளை கிளையுடன் தனது வலையமைப்பை விரிதுபடுத்துகிறது சியபத பினான்ஸ்

Share with your friend

நிதிச் சேவைகளில் நம்பகமான பெயரான சம்பத் வங்கி பிஎல்சியின் முழு உரிமம் பெற்ற  துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, அண்மையில் தெஹிவளையில் தனது மற்றுமொரு புதிய கிளையை இல.249 காலி வீதி தெஹிவளை என்ற முகவரியில் திறந்து வைத்தது. இக்கிளையானது இலங்கை மக்களுக்கு ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல்  இணையற்ற நிதிச் சேவைகளை வழங்குவதற்கு தயாராக உள்ளது. பிரதம அதிதிகளாக, சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர்  திரு. ஆனந்த செனவிரத்ன சியபத பினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்; திரு. ஜெயநாத் குணவர்தன அவர்கள் மற்றும் சியபத பினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்; திருமதி ஸ்ரீயாணி ரணதுங்க  உதவி  பொலிஸ் அத்தியட்சகர் திரு சமன் ஜெயசேகர -தெஹிவளை பொலிஸ் நிலையம், கரகம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. அனுராத ஹேரத்  ஆகியோரின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

தெஹிவளை கிளையானது ஒப்பற்ற நிதிச்சேவைகளை இலங்கை மக்களுக்கு வழங்குவதற்கென சியபத பினான்ஸின் நாடளாவிய கிளை வலையமைப்பில் இணைத்துக்கொண்ட 46 ஆவது கிளையாகும். சியபத பினான்ஸ் பிஎல்சி குத்தகை, நிலையான வைப்பு, சேமிப்புக் கணக்குகள், தங்கக் கடன் வசதி, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், வாடகை கொள்முதல்; மற்றும் பிரதிநிதிச் சேவைகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை உள்ளடக்கி இக்கிளை தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க உள்ளதுடன் சிறிய வணிகங்கள் மற்றும் தொழில் முனைவோர் உள்ளடங்கலாக வணிகத் துறையையும் வலுப்படுத்துவதை தனது நோக்காக கொண்டுள்ளது.

நிதிச் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக நலனுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ள சியபத பினான்ஸ் பிஎல்சி,  தெஹிவளை கிளையின் திறப்பு விழாவை முன்னிட்டு, சியபத பினான்ஸ் தனது சமூக பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, பசுமையான மற்றும் ஆரோக்கியமான சூழலை ஊக்குவிக்கும் “சியபத்தன் மிஹிகாட்ட” என்ற தேசிய அளவிலான மரம் நடும் திட்டத்தின்  ஒரு அங்கமாக தெஹிவளை பிரதேசத்தில் 100 மரங்களை நட்டுள்ளது.  நிதி நிறுவனம் இலங்கையின் பல்வேறு இடங்களில் 10,500 மரங்களை நட்டு, அதன் நாடளாவிய கிளை வலையமைப்பின் இணையற்ற ஆதரவுடன் இந்த முயற்சியில் தீவிரமாக பங்கேற்க முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. மேலும், இந்த மாபெரும் முயற்சியின் ஒரு பகுதியாக WP/PILI/லலித் அதுலத் முதலி வித்தியாலயத்தில் 50 மரங்கள் நடப்பட உள்ளன.

சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன மேலும் கூறுகையில், “தெஹிவளை பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த விஸ்தரிப்பை நாங்கள் காண்கிறோம். சியபத பினான்ஸ் பிஎல்சி உயர்தர நிதிச் சேவைகளை வழங்குவதற்கும் நாம் சேவை செய்யும் ஒவ்வொரு சமூகத்திலும் நிதி வெற்றிக்கு உந்துசக்தியாக விளங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் சேவை வழங்க உள்ளது” எனக் கூறினார்.”

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், நாடு முழுவதிலும் உள்ள தனிப்பட்ட நபர்களின் நிதித் தேவையினை பூர்த்தி செய்வதிலும் சியபத பினான்ஸ் பிஎல்சி, பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலான ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, சமூகங்கள் தங்கள் நிதி நோக்கங்களை அடைய உதவுவதில் அதன் பங்ளிப்பை பிரதிபலிக்கிறது.

சியபத பினான்ஸ் பிஎல்சி, செழிப்பான நிதி வளம் நோக்கிய தனது இந்தப் பயணத்தின் கொண்டாட்டத்தில் இணையுமாறு தெஹிவளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைவரையும் அழைக்கின்றது. சியபத பினான்ஸ் மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.siyapatha.lk எனும் இணையதளத்தை பார்வையிடவும் அல்லது 0117 605 665 என்ற இலக்கத்துடன் தெஹிவளை கிளையை தொடர்பு கொள்ளவும். சியபத பினான்ஸ் பிஎல்சி, தனிநபர்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்தும் அதன் நோக்கத்தில் உறுதியுடன் உள்ளதுடன், நிதி வலுவூட்டல் மூலம் கனவுகளை நனவாக்குகிறது.


Share with your friend
Exit mobile version