சகல மக்களுக்கும் அனுகூலமளிக்கும் வகையில் தேசிய நீர் வழங்கல் சபைக்கு அழைப்பு நிலைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க SLT-MOBITEL நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

Home » சகல மக்களுக்கும் அனுகூலமளிக்கும் வகையில் தேசிய நீர் வழங்கல் சபைக்கு அழைப்பு நிலைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க SLT-MOBITEL நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையுடன் முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. சகல மக்களுக்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அழைப்பு நிலைய வசதி இந்த உடன்படிக்கையினூடாக ஏற்படுத்தப்படும்.

இரத்மலானையிலுள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வளாகத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தவிசாளர் நிஷாந்த ரணதுங்க மற்றும் பொது முகாமையாளர் திலின விஜேதுங்க மற்றும் SLT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க மற்றும் பிரதம வர்த்தக மற்றும் மொத்த சேவைகள் அதிகாரி லக்மால் ஜயசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர். இரு நிறுவனங்களின் உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உடன்படிக்கையின் கீழ், SLT-MOBITEL இனால் பரிபூரண அழைப்பு நிலைய தீர்வு 1939 எனும் கட்டணமற்ற தொலைபேசி இலக்கத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் சேவைகளை நாடும் மக்களுக்கு வழங்கும். நவீன தொழில்நுட்ப தீர்வினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தன்னியக்கமான சேவைகளையும், முகவர்களின் உதவிகளுடனான வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அழைப்பு நிலையம் WhatsApp மற்றும் smart Chatbot உடன் 0112 044800 ஊடாக இணைக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோருக்கு தமது தீர்வுகளை விரல்நுனிகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். SLT-MOBITEL தீர்வினால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு அதிகளவு சௌகரியமான சேவை மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை சகல சகல மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

இந்த புதிய பங்காண்மை தொடர்பாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தவிசாளர் நிஷாந்த ரணதுங்க கருத்துத் தெரிவிக்கையில், “தேசம் எனும் வகையில், நுகர்வோரின் கேள்விகளில் நாம் மாற்றத்தை அவதானிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு முன்னேற்றகரமான நாளிகை தேவையாக அமைந்திருப்பதுடன், அவர்களுடனான உறவுகளை பேண வேண்டியும் உள்ளது. அழைப்பு நிலைய தீர்வை பெற்றுக் கொள்வதற்காக தொழில்நுட்ப புத்தாக்கங்களில் முன்னோடியாக அமைந்துள்ள SLT-MOBITEL உடன் நாம் கைகோர்த்திருந்ததுடன், நவீன வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையை திகழச் செய்வதற்கு அதிகளவு சௌகரியம் மற்றும் வினைத்திறனானதாக அமைந்திருக்கச் செய்யும்.” என்றார்.SLT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டுக்கு நீர் முகாமைத்துவம் மற்றும் தூய்மை தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆற்றும் பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். SLT-MOBITEL இன் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அழைப்பு நிலைய அறிவைப் பயன்படுத்தி, நீர் வழங்கல் சபைக்கு முதல் தர அழைப்பு நிலைய தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கான வசதி, சேவை வழங்கும் தரத்தை மேம்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: