சர்வதேச இளைஞர் தினைத்தை இளைஞர் பரிந்துரையாளர்களுடன் கொண்டாடிய ChildFund

Home » சர்வதேச இளைஞர் தினைத்தை இளைஞர் பரிந்துரையாளர்களுடன் கொண்டாடிய ChildFund
Share with your friend

ChildFund Sri Lanka நிறுவனம் தனது சுயாதீன இளைஞர் கூட்டணியான ‘சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான இளைஞர் கூட்டணி’ (AYEVAC) உடன் இணைந்து 2022 ஓகஸ்ட் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் சர்வதேச இளைஞர் தினத்தைக் கொண்டாடியது. “தலைமுறைகளுக்கிடையேயான ஒருமைப்பாடு: சகல வயதினருக்கும் ஓர் உலகை உருவாக்குவோம்” என்பதே சிந்தனையைத் தூண்டும் இளைஞர்களின் இரண்டு நாள் ஒன்று கூடலுக்கான தொனிப்பொருளாக அமைந்தது. ஆகஸ்ட் 12ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டான இந்த ஒன்று கூடலில் 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

சமூகத்தின் அடுத்த தலைமுறையினராக விளங்கும் இளைஞர்களே எந்தவொரு சமூகப் பிரச்சினைக்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதிலும் தலைமைத்துவத்தை ஏற்று கருத்துருவாக்கம் மற்றும் தீர்மானங்கள் எடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றனர். குழந்தைப் பருவத்தில் தாம் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பில் அனுபவங்களைக் கொண்டிருப்பதால் சிறுவர்கள் தொடர்பில் ஆலோசனை வழங்கக்கூடிய உறுதியான நிலையில் இளைஞர் பரிந்துரையாளர்கள் காணப்படுகின்றனர்.

இந்த நிகழ்வில் பிரதம உரைநிகழ்த்திய கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் சமூகவியல் திணைக்களத்தின் பேராசிரியர் எம்.ரி.எம்.மஹீஸ் இளைஞர்கள் மற்றும் சமூகம் குறித்து ஊக்கமளிக்கும் தனது நிலைப்பாட்டைப் பகிர்ந்துகொண்டார்.  இளைஞர்களின் இன்றைய தலைமுறை மற்றும் சகாப்தம் குறித்து அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. “இளைஞர்களுக்கு சக்தியும் பலமும் உள்ளது. இயற்கை மற்றும் சமூகத்தினால் வழங்கப்பட்ட அருமையான கொடையே இந்த வாழ்க்கையாகும். இளைஞர்கள் சமூகத்தின் ஒரு படைப்பாகும். ஏனையவர்களின் முன்னால் செல்லும்போதே இளைஞர்களுக்குத் தம்மைத் தாமே பார்க்க முடியும். இளைஞர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சீரான ஆளுமை இருந்தாலேயே சிறுவர்களின் வாழ்க்கையை அவர்களால் காப்பாற்ற முடியும்” என்றார்.

இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய சிறுவர் பாதுகாப்பு மற்றும் ஆலோசனை விசேட நிபுணர் கௌஷால் அத்தனாயக்க, சர்வதேச இளைஞர் தினத்தை ஒத்ததாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதன் நோக்கம் குறித்து விளக்கினார். உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டுவருதல், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் ஆன்லை ஊடாக பாலியல் சுரண்டல்களைத் தடுப்பதற்கான சட்டங்களைப் பலப்படுத்துவதில் AYEVAC இன் வகிபாகம் குறித்தும் அவர் தனது உரையின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

‘சிறுவர்கள் முன் மனிதர்களாவோம்’ என்ற தொனிப்பொருளில் ஆலோசனைகளைப் பலப்படுத்தும் AYEVAC இன் நோக்கத்துக்கு ஆதரவினை வழங்க ChildFund Sri Lanka நிறுவனம் மற்றும் பங்குதார நிறுவனங்கள் இதில் இணங்கின. முதற்கட்டமாக சிறுவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒக்டோபர் மாதத்தில் இளைஞர்களைத் தலைமையாகக் கொண்ட நுண்பொருளாதாரத் திட்டங்களை AYEVAC இன்  25 மாவட்ட அணிகளும் நடைமுறைப்படுத்துவதற்கு ChildFund Sri Lanka நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான உரிமை மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும்.

நுவரெலியா மாவட்ட AYEVAC ஒருங்கிணைப்பாளர் ரொக்ஷாந்தன் குறிப்பிடுகையில், “சர்வதேச இளைஞர் தினம் தொடர்பில் பலருக்குத் தெரியாது. இவ்வாறான நிலையில் இதுபோன்ற நிகழ்வைக் கொண்டாடுவதன் ஊடாக எமது வலையமைப்பைப் பலப்படுத்த முடிவதுடன், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நிலைபேறான தீர்வுகளைக் கண்டறிய உதவியாகவிருக்கும்” என்றார்.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட பரிந்துரைக் குழுவாக AYEVAC ஆனது ChildFund Sri Lanka நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான பௌதீக ரீதியான, பாலியல் ரீதியான, உள ரீதியான மற்றும் ஆன்லைன் ஊடான துஷ்பிரயோகங்களைத் தடுப்பது என்பவற்றை இது உள்ளடக்கியுள்ளது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: