Eyeview Sri Lanka

சர்வதேச சைபர்குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் இலங்கையில் மொபைல் நிதி இடர்கள் அதிகரிப்பு 

Share with your friend

இலங்கையில் மொபைல் சாதனங்களின் பாவனை பெருமளவு அதிகரித்து வரும் நிலையில், வங்கியியல், ஷொப்பிங் மற்றும் முதலீடுகளை நிர்வகித்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளுக்கு ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், Kaspersky இன் 2024 சைபர் பாதுகாப்பு அறிக்கையின் பிரகாரம், இந்த பாவனை அதிகரிப்பினால் மில்லியன் கணக்கான இலங்கையர்கள் மொபைல் நிதி சைபர் இடர்களுக்கு முகங்கொடுக்கும் சந்தர்ப்பம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaspersky இன் சர்வதேச டெலிமெட்ரி தரவுகளின் பிரகாரம், மொபைல் சாதனங்களை குறிவைத்து நிதி malware பரவுவதில் பெருமளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில், மொபைல் நிதி malware இனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது, அதே நேரத்தில் வங்கி Trojanகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் 3.6 மடங்கு அதிகரித்துள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பயனர் தளத்தில் இதேபோன்ற அச்சுறுத்தல்களில் உடனடி அதிகரிப்பை முன்னறிவிக்கின்றன.

Kaspersky இன் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான முகாமைத்துவ பணிப்பாளர் ஏற்றியன் ஹியா கருத்துத் தெரிவிக்கையில், “சைபர்குற்றங்களில் ஈடுபடுவோரின் கவர்ச்சிகரமான இலக்குகளாக மொபைல் சாதனங்கள் அமைந்துள்ளன. ஏனெனில் பாவனையாளர்கள் அரிதளவிலான பாதுகாப்பை கொண்டிருப்பதுடன், மோசடியான appகளை எதிர்பாராமல் தரவிறக்கம் செய்யக்கூடும். இலங்கையில், டிஜிட்டல் wallet பாவனை மற்றும் மொபைல் வங்கிச் சேவை பின்பற்றலினூடாக இது அதிகரித்துள்ளது. விசேடமாக, இள வயதினர், தொழினுட்பசார் திறன் படைத்த நுகர்வோரிடையே இது அதிகரித்துள்ளது.” 

தாக்குதல் நடைபெறும் சில பொதுவான முறைகளை அவர் விளக்கியிருந்தார்: “போலியான பொதி கண்காணிப்பு apps, மோசடியான கிறிப்டோ நாணய wallets, மற்றும் போலியான e-வணிக கட்டமைப்புகள் போன்றன இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த appகள் அசல் போன்று காட்சியளித்தாலும், தரவுகளை திருடுவது அல்லது spyware ஐ பிரயோகிப்பதை மேற்கொள்ளும். பல பாவனையாளர்கள் app மூலங்களை உறுதி செய்வதில்லை அல்லது தமது தொலைபேசிகளை அப்டேட் செய்ய தவறுகின்றனர். அதனால் ஆபத்து அதிகரிக்கிறது.”

Trojan-Banker குடும்பமான Mamont, உலகளவில் மிகவும் தீவிரமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது. மேலும் உள்ளூர் சூழல்களுக்கு எளிதில் மாற்றியமைக்கக்கூடிய நுட்பங்களை நிரூபித்துள்ளது. இலங்கையின் நிதித்தொழினுட்பத் துறை வளர்ந்து வருவதால், தாக்குபவர்கள் முக்கியமான நிதித் தரவைச் சேகரித்து சேவைகளை சீர்குலைக்கும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

Kaspersky’இன் தரவினூடாக,  பிரபலமான பயன்பாடுகள் அல்லது தகவல் தொடர்பு கருவிகளாக மாறுவேடமிட்டு, பயனர் தனியுரிமை மற்றும் நிதி பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் மொபைல் spyware பிரச்சாரங்களில் ஆபத்தான அதிகரிப்பு இருப்பதாக தரவு காட்டுகிறது. ஏற்றியன் அறிவுறுத்துகிறார், “இலங்கை நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும்: அதிகாரப்பூர்வ app store களில் இருந்து மட்டுமே appகளை பதிவிறக்கவும், app அனுமதிகளை ஆராயவும், தொடர்ந்து மென்பொருளைப் புதுப்பிக்கவும். நிதி நிறுவனங்கள் மற்றும் மொபைல் வலையமைப்பு செயற்பாட்டாளர்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.  

இலங்கையின் ஒழுங்குபடுத்துனர்களின் பங்களிப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டார்: “மொபைல் நிதிசார் சேவைகளுக்கு தெளிவான சைபர்பாதுகாப்பு வழிமுறைகளை நிறுவி, நாடு முழுவதிலும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக, பாவனையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வலுவூட்டலாம்.” என்றார். இந்த அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட, Kaspersky விரிவான மொபைல் பாதுகாப்பு தீர்வுகளை வழங்குகிறது: Kaspersky Internet Security for Android:: ரிமோட் லாக்கிங் மற்றும் டேட்டா துடைத்தல் உள்ளிட்ட நிகழ்நேர வைரஸ் தடுப்பு பாதுகாப்பு, ஃபிஷிங் எதிர்ப்பு மற்றும் திருட்டு எதிர்ப்பு அம்சங்களை வழங்குகிறது. Kaspersky Secure Connection: இணைய போக்குவரத்தை குறியாக்கம் செய்யும் ஒரு VPN சேவை, பாதுகாப்பற்ற நெட்வொர்க்குகளில் தரவு இடைமறிப்பிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கிறது. App Lock: ரகசிய குறியீட்டைக் கொண்டு முக்கியமான பயன்பாடுகளைப் பாதுகாக்க பயனர்களை அனுமதிக்கிறது, தனிப்பட்ட தகவலுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்கிறது.


Share with your friend
Exit mobile version