Eyeview Sri Lanka

சர்வதேச மகளிர் தினத்தை தொழிற்துறை பங்கேற்பை ஊக்குவிக்கும் அர்ப்பணிப்புடன் Sun Siyam பாசிகுடா கொண்டாடியது

Share with your friend

பெண் ஊழியர்களின் பெறுமதி வாய்ந்த அளப்பரிய பங்களிப்பை கௌரவித்தும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை Sun Siyam பாசிகுடா கொண்டாடியது. பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் ரிசோர்ட்டினால் முன்னெடுக்கப்படும் வைபவங்களை குறிக்கும் வகையில் குறித்த தினத்தில் முன்னெடுக்கப்பட்ட கேக் வெட்டும் வைபவம் மற்றும் அதனுடனான உரையாடல்கள் போன்றன அமைந்திருந்தன. 

நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைப்பங்கிற்கும் அதிகமானவர்கள் பெண்களாக காணப்பட்ட போதிலும், விருந்தோம்பல் துறையில் அவர்களின் பிரதிநிதித்துவம் என்பது 10 சதவீதத்துக்கும் குறைவானதாக அமைந்துள்ளது. உலகளாவிய விருந்தோம்பல் துறை பணியாளர்களில் அரைப் பங்கிற்கும் அதிகமானவர்கள் பெண்களாக காணப்பட்ட போதிலும், இலங்கையில் இந்தப் பெறுமதி மிகவும் குறைவானதாக அமைந்துள்ளது.

இந்த பாகுபாடுகளில், சமூக அழுத்தங்கள், பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் பாரம்பரிய பாலின செயற்பாடுகள் போன்றன பங்களிப்பு செய்வதுடன், விருந்தோம்பல் துறையில் தொழில் நிலைகளை நாடுவதில் பெண்களை பின்தள்ளுவதாக அமைந்துள்ளன. இந்த சவால்கள் தொடர்பில் Sun Siyam பாசிகுடா கவனம் செலுத்தி, பெருமளவு உள்ளடக்கமான சூழலை ஏற்படுத்தும் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

ரிசோர்ட் இயங்கும் உள்ளூர் சமூகங்களிலிருந்து பெண்களை பணிக்கு அமர்த்துவதுடன், பரந்த பயிற்சிகளை வழங்கி, ஆதரவான மற்றும் பாதுகாப்பான பணியிடச் சூழலை வழங்குகிறது. அதனை மேற்கொள்வதனூடாக, ரிசோர்ட் பெண் ஊழியர்களின் நிபுணத்துவ வளர்ச்சியை மாத்திரம் மேம்படுத்தாமல், கிழக்கு பிராந்தியத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கும் பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

பொது முகாமையாளர் அர்ஷட் ரிஃபாய் கருத்துத் தெரிவிக்கையில், “Sun Siyam பாசிகுடாவில், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் என்பன எமது வெற்றியின் மையப்பொருட்களாக அமைந்துள்ளன. எமது பெண் ஊழியர்கள் கொண்டு வரும் பிரத்தியேகமான அம்சங்கள் மற்றும் திறமைகளுக்கு நாம் மதிப்பளித்து, விருந்தினர் அனுபவங்களுக்கு வளமூட்டி சமூக உறவுகளை வலிமைப்படுத்துகிறோம். சமமான வாய்ப்புகளுக்காக அர்ப்பணிப்பினூடாக, அனைவராலும் இயங்கக்கூடிய கலாசாரத்தை ஊக்குவிக்கிறோம்.” என்றார்.

மகளிர் வலுவூட்டல் தொடர்பான மைல்கற்களினூடாக இலங்கையின் வரலாறு நிறைந்துள்ளது. குறிப்பாக, முதன் முறையாக பெண் பிரதமர் ஒருவரை தெரிவு செய்த நாடு எனும் கீர்த்தி நாமமும் எமக்கு காணப்படுகின்றது. தேசிய ரீதியில் பெருமை மற்றும் ஊக்கமளிக்கும் அம்சமாக இது அமைந்திருப்பதுடன், சகல துறைகளிலும் பெண்கிளன் பங்குபற்றலின் முக்கியத்துவத்தை மீளுறுதி செய்வதாக அமைந்துள்ளது. Sun Siyam பாசிகுடா இந்த செழுமையான பாரம்பரியத்தை பின்பற்றி இயங்குவதுடன், தடைகளை தகர்த்து, விருந்தோம்பல் துறையில் பாலின சமத்துவத்தில் புதிய நியமங்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Sun Siyam பாசிகுடாவின் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள், பெண்களுக்கு வலுவூட்டல், அவர்களின் பங்களிப்புகளை கௌரவித்தல் மற்றும் விருந்தோம்பலில் வரையறைகளற்ற தொழில்நிலைகளை தொடர்வதற்கு எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் ரிசோர்ட் தொடரின் ஒப்பற்ற அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

Sun Siyam பாசிகுடாவினால் 34 வசதிகள் படைத்த ஒரு மற்றும் இரு படுக்கையறைகளைக் கொண்ட பெவிலியன்கள் வழங்கப்படுவதுடன், பாசிகுடாவின் மறைந்திருக்கும் அதிசயங்களை அனுபவித்து மகிழக்கூடிய பிரத்தியேகமான உள்நாட்டு உணவு வகைகள் மற்றும் உள்ளடக்கமான அனுபவங்களை வழங்குகிறது. snorkeling, jet-skiing மற்றும் scuba diving போன்ற நீர்சார் சாகச விளையாட்டுகள் முதல் பாரம்பரிய ரீதியில் செழுமை வாய்ந்த, பயணிகளை பிராந்தியத்துடன் இணைக்கும் அம்சங்களையும் வழங்குகிறது.

இந்த ரிசார்ட் தனித்துவமான சமையல் சாகசங்களை வழங்குகிறது, இலங்கையின் துடிப்பான சுவைகள் மற்றும் காலனித்துவ மரபுகளில் விருந்தினர்களை மூழ்கடிக்கிறது. குறிப்பிடத்தக்க தெரிவுகளில் கிழக்கு கடற்கரையில் உள்ள இலங்கையின் மிகப்பெரிய வைன் தெரிவான The Cellar, மகிழ்ச்சிகரமான சுவை பயணத்திற்கான விரிவான தேநீர் தெரிவுகளைக் கொண்ட Tea House, ரெட்ரோ வடிவமைப்புடன் கூடிய வேகமான சாதாரண நீச்சல் குளக்கரை கருத்தாக்கமான Slice & Grill மற்றும் கரீபியன் அம்சங்களுடன் கூடிய அயனவலய சொர்க்கமான Beach Shack ஆகியவை அடங்கும். பிரத்தியேகமான கடற்கரை திருமணங்கள், கூட்டாண்மை ரிட்ரீட்கள் மற்றும் தனியார் கொண்டாட்டங்கள், ஒவ்வொரு விருந்தினருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை உருவாக்குதல் ஆகியவற்றிற்கான ஒரு அழகிய அமைப்பையும் இந்த ரிசார்ட் வழங்குகிறது. மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும் https://www.sunsiyam.com/sun-siyam-pasikudah/


Share with your friend
Exit mobile version