சவால்களுக்கு மத்தியிலும் மீண்டெழுந்து தேசத்துக்கு பெறுமதி சேர்க்கும் SLT குழுமம்

Home » சவால்களுக்கு மத்தியிலும் மீண்டெழுந்து தேசத்துக்கு பெறுமதி சேர்க்கும் SLT குழுமம்
Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமம் (SLT குரூப்), 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 26 பில்லியன் வருமானத்தை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 5.4% உயர்வானதாகும். முதல் காலாண்டில் குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 2.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலிலும் குழுமத்தின் மீண்டெழுந்திறன திறனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. புதுவருடத்தின் ஆரம்பத்திலும் டிஜிட்டல் மாற்றியமைப்புத் திட்டங்கள் தொடர்பில் குழுமம் கவனம் செலுத்தியிருந்ததுடன், பங்காளர்கள் மற்றும் தேசத்துக்கு பெறுமதி சேர்ப்பது மற்றும் செயன்முறைகளை தன்னியக்க மயப்படுத்துவது போன்றவற்றிலலும் கவனம் செலுத்தியிருந்தது.

SLT குழுமத்தின் EBITDA (வரிக்கு முன்னரான வருமதிகள், வரி, மதிப்பிறக்கம் மற்றும் ஒதுக்கங்கள்) பெறுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.9% உயர்ந்து ரூ. 10.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. EBITDA எல்லைப் பெறுமதி இக்காலாண்டில் 41% இனால் அதிகரித்துள்ளது. காலாண்டில் குழுமத்தின் வரிக்கு முந்தைய இலாபம் (PBT) ரூ. 3.5 பில்லியனாக பதிவாகியிருந்தது.

குழுமத்தின் வருமானம் பிரதானமாக புரோட்பான்டினூடாக ஈட்டப்பட்து . இதை சாதிப்பதில் தேசிய ஃபைபர்மயமாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் Fibre விரிவாக்கல் திட்டத்தினூடாகவும், 4G/LTE வலையமைப்புகளின் விரிவாக்கங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் போன்றவற்றினூடாகவும் பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. ஃபைபர் மயமாக்கலின் மீதான முதலீடுகள் மற்றும் ஃபைபர் தீர்வுகளை சந்தைப்படுத்துவது துரிதப்படுத்தப்பட்டிருந்தமை போன்றன முதல் காலாண்டு பெறுமதிகளை எய்துவதில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. அதிகளவு நுகர்வோர் கேள்வியும் நிலவியிருந்தது. மேலும் ஃபைபர் விரிவாக்கத் திட்டத்தினூடாக, PEOTV வருமானத்திலும் அதிகரிப்பை குழுமம் அவதானித்திருந்தது. இக்காலப் பகுதியில் சேவை வழங்குநர் உள்ளக சேவைகளினூடாக வருமானமும் (Carrier Domestic Revenue)அதிகரித்திருந்தது.

SLT குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பெருமளவு சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது, எவ்வாறாயினும், SLT-MOBITEL இன் ஒட்டுமொத்த பெறுபேறுகள் மீட்சியையும் உறுதித் தன்மையையும் வெளிப்படுத்தியிருந்தன. 2022 ஆம் ஆண்டில், சகல பங்காளர்களுக்கும் பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்க நாம் எதிர்பார்ப்பதுடன், டிஜிட்டல் பாகுபாட்டை இல்லாமல் செய்து, தேசத்துக்கும் எமது மக்களுக்கும் ஆதரவளிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். கடும் நிதிசார் ஒழுக்கம் என்பது எமது வெற்றிகரமான செயற்பாட்டில் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.” என்றார்.

குழுமத்தின் தொழிற்பாட்டு பணப் பாய்ச்சல்கள் முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 35.3% இனால் அதிகரித்து ரூ. 16.3 பில்லியனாக பதிவாகியிருந்தது. காலாண்டின் இறுதியின் குழுமம் பணம் மற்றும் பணத்துக்கு நிகரான சாதகமான பெறுமதிகளாக ரூ. 31.6 பில்லியனை பதிவு செய்திருந்தது. முதல் காலாண்டில் அரசாங்கத்துக்கு SLT குழுமத்தின் பங்களிப்பு ரூ. 4.2 பில்லியனாக காணப்பட்டது. நேரடி மற்றும் மறைமுக வரிகளினூடாக இந்தப் பங்களிப்பு எய்தப்பட்டிருந்தது.

SLT குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “வளர்ந்து வரும் சிறந்த தொழில்நுட்பங்களில் நாம் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளோம். இதில் வலையமைப்புகள் மற்றும் டிஜிட்டல் ஆற்றல்கள் அடங்கியுள்ளன. நிறுவனத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய வண்ணம், புத்தாக்கமான தீர்வுகளையும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் அறிமுகம் செய்த வண்ணமுள்ளோம். குறிப்பிடத்தக்களவு உட்கட்டமைப்பு முதலீடுகளினூடாக எம்மால் புத்தாக்கமாகவும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும் முடிந்திருந்தது.” என்றார்.

குழுமத்தின் தாய் நிறுவனமான, ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT), வரிக்கு பிந்திய இலாபமாக முதல் காலாண்டில் ரூ. 4.1 பில்லியனை பதிவு செய்திருந்தது. காலாண்டில் வருமானம் ரூ. 15.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. EBITDA மற்றும் தொழிற்பாட்டு இலாபங்கள் ரூ. 6.3 பில்லியன் மற்றும் ரூ. 1.1 பில்லியனாக பதிவாகியிருந்தன.

SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “வியாபார வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட இலாபகரத்தன்மை ஆகியவற்றை எய்தும் வகையில் நாம் இயங்குகின்றோம், துரிதமான புரோட்பான்ட் சேவைகள், ஃபைபர்மயமாக்கல் மற்றும் அதிகரித்த பான்ட்வித் நுகர்வு போன்றன இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. வளர்ச்சியை எய்துவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்  . எமது பிரதான புரோட்பான்ட் மற்றும் நிலையான செயற்பாடுகளை மீளக் கட்டமைப்பதில் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், எமது உட்கட்டமைப்பு பணிகளை நவீனமயமாக்கலில் கவனம் செலுத்துகின்றோம். 2022 ஆம் ஆண்டு முழுவதிலும் இந்த நேர்த்தியான நிலையை பேணுவதில் தொடர்ந்தும் கவனம் செலுத்துவோம்.” என்றார்.

குழுமத்தின் மொபைல் சேவைகள் பிரிவான மொபிடெல் (பிரைவட்) லிமிடெட், 2022 இன் முதல் காலாண்டில் ரூ. 11.6 பில்லியனை வருமானமாக பதிவு செய்திருந்தது. EBITDA மற்றும் தொழிற்பாட்டு இலாப எல்லைப் பெறுமதிகள் 38.9% மற்றும் 19.3% ஆக காணப்பட்டன. நிறுவனத்தின் வருமானத்தில் அந்நியச் செலாவணி இழப்புகள் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், காலாண்டில் ரூ. 0.8 பில்லியன் தேறிய நட்டம் பதிவாகியிருந்தது.

மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரென கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நெருக்கடியான காலப்பகுதியிலும், எளிமைப்படுத்தப்பட்ட தொடர்பாடல் தீர்வுகளை வழங்கி அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் செயலாற்றுகின்றோம். தேசிய மொபைல் சேவை வழங்குநர் எனும் வகையில், நாம் தொடர்ந்தும் அடுத்த நிலை தீர்வுகளை அறிமுகம் செய்து வருவதுடன், எமது சந்தைப்பிரிவுகளில் டிஜிட்டல் துரிதப்படுத்தலை விரிவாக்கம் செய்து, சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குகின்றோம்.” என்றார்.பொருளாதார மந்த நிலை, செலவு அதிகரிப்பு, பணவீக்கம், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பிறக்கம் மற்றும் அவசியமான சாதனங்களை இறக்குமதி செய்து பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமதங்கள் போன்றவற்றுக்கு ஏற்ப வகையில் சில முக்கியமான தந்திரோபாயங்களை அறிமுகம் செய்ய SLT குழுமம் எதிர்பார்த்துள்ளது. குழும மட்டத்தில் உட்கட்டமைப்பு விருத்தியை பதிவு செய்வது, கள ஊழியர்களை மீளமைத்து, மதிநுட்பமாக பணியாற்றுவது, வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கு பல ஊழியர்களை ஊக்குவிப்பது, சகல வாடிக்கையாளர் பிரிவுகளுக்கும் பெறுமதி சேர்ப்பை வழங்குவது மற்றும் நிலைபேறான வியாபார மாதிரியினூடாக நீண்ட கால நிதிப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பது போன்றன இந்த தந்திரோபாயங்களில் அடங்கியுள்ளன.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: