சியபத ஃபினான்ஸ் அதன் 41வது கிளையை திறப்பதன் ஊடாக அதன் வலையமைப்பை மேம்படுத்துகிறது

Home » சியபத ஃபினான்ஸ் அதன் 41வது கிளையை திறப்பதன் ஊடாக அதன் வலையமைப்பை மேம்படுத்துகிறது
Share with your friend

முதன்மை நிதி நிறுவனமான சியபத ஃபினான்ஸ், அதன் 41வது கிளையை, இல. 46/12, சயுரு செவன, நவம் மாவத்தை, கொழும்பு 02 இல் திறந்து வைத்து, அதன் நாடளாவிய கிளை வலையமைப்பை அண்மையில் விரிவுபடுத்தியது.

கொழும்பு 02 மற்றும் அதனைச் சூழவுள்ள புதிய வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான தீர்வுகளை வழங்கும் அதே வேளையில், அதன் நம்பிக்கைமிகு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதற்கு புதிய கிளை ஆவலுடன் காத்திருக்கின்றது.

புதிய கிளை திறப்பு விழா, சியபத ஃபினான்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன மற்றும் சபையின் பணிப்பாளர்களான திரு.ஜெயநாத் குணவர்தன, திருமதி.ஸ்ரீயானி ரணதுங்க, மற்றும் திரு.மலிந்த போயாகொட ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

41வது கிளையை திறந்து வைத்து உரையாற்றிய சியபத ஃபினான்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன கூறுகையில்: வளர்ந்து வரும் எமது வலையமைப்பில் மேலும் ஒரு கிளையை இணைத்துக்கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். புதிய கிளையின் திறப்பானது எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் வசதியையும் புதுமையையும் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் சேவையினை மேம்படுத்த எங்களை ஊக்குவிக்கிறது. சியபத குழுவானது, நாட்டின் அனைத்து பாகங்களிலும் வளர்ச்சி அடைந்து முன்னேறி வருவதைக் காண்பது உண்மையிலேயே பெருமிதத்திற்குரியது” எனக் குறிப்பிட்டார்.

நவம் மாவத்தையில் உள்ள முழுமையாக தன்னிறைவு பெற்ற கிளையானது கொழும்பு 02 மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு குத்தகை, வாடகைக் கொள்முதல், வணிகக் கடன்கள், தங்கக் கடன்கள், வர்த்தக பிரதிநிதி சேவைகள் மற்றும் நிலையான வைப்புக்கள் உட்பட பல சேவைகளை வழங்குகிறது. நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்புமிக்க முழுமையான சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளனர்.

சம்பத் வங்கி குழுமத்தின் மிகப் பெரிய துணை நிறுவனமான சியபத ஃபினான்ஸ் பிஎல்சி, 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, தங்களது வாடிக்கையாளர்களுக்கு  சேவை வழங்கலில் சிறந்த தரநிலைகளை உறுதிசெய்து, வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் கிளை வலையமைப்பை மேம்படுத்துகிறது. 17 வருடங்களாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் அத்துடன் நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நிறுவனம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.இலக்கம் 46/12,  சயுரு செவன, நவம் மாவத்தை, கொழும்பு 02 இல். உள்ள சமீபத்திய கிளையுடன் தொடர்பு கொள்ள, நேரில் விஜயம் மேற்கொள்ளலாம். அல்லது 0117 605 835 ஐ அழைக்கவும் அல்லது சியபத ஃபினான்ஸ் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு, http://www.siyapatha.lk


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: