சியபத பினான்ஸ் கிளிநொச்சியில் அதன் 43வது கிளையினை திறப்பதுடன் அதன் வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தியது

Home » சியபத பினான்ஸ் கிளிநொச்சியில் அதன் 43வது கிளையினை திறப்பதுடன் அதன் வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தியது
Share with your friend

சம்பத் வங்கி குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமான சியபத பினான்ஸ் தனது 43வது கிளையை அண்மையில் கிளிநொச்சியில்; திறந்து வைத்துள்ளதுடன், வடமாகாணத்தில் உள்ள தனது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு தனது நிதிச் சேவைகளை விரிவுபடுத்தி, சிறந்த சேவையை வழங்குவதற்கான அர்ப்பணிப்பையும் தொடர்கிறது.

சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன, சியபத பினான்ஸ் பிஎல்சியின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி திரு.மதிஷ ஹேவாவிதாரண, சியபத பினான்ஸ் பிஎல்சியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரஜீவ் டி சில்வா, சியபத பினான்ஸ் பிஎல்சியின் பிரதம மனித வள அதிகாரி திரு பிரசாத் உடுகம்பொல, திரு. எம்.கே.ஆர்.ஏ. குணரத்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கிளிநொச்சி மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர் திருமதி கார்த்திகா நிரோஜன் ஆகியோர் சியபத ஃபினான்ஸ் கிளிநொச்சி கிளையை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

நாடளாவிய ரீதியில் இயங்கும் அதன் வலையமைப்பில் இணைந்துள்ள இல. 317, காக்கடைச் சந்தி, ஏ-9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி கிளையானது, சியபத நிதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஆனந்த செனவிரத்னவினால் கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயஹரன், மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர் (கிளிநொச்சி), திருமதி கார்த்திகா நிரோஜன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.ஆர்.ஏ. குணரத்ன ஆகியோர் முன்னிலையில் வைபவ ரீதியாக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

அதிகளவிலான வாடிக்கையாளர்;களை ஈடுபடுத்துதல் மற்றும் அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன், புதிதாக முழுமையாக தன்னிறைவு பெற்ற அதிநவீன வசதிகளை  கொண்ட கிளை, வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு, நிலையான வைப்பு, குத்தகை, வாடகை கொள்முதல், வணிகக் கடன்கள், தங்கக் கடன்கள், தனிநபர் கடன்கள், சுழலும் கடன்கள், அத்துடன் வர்த்தக பிரதிநிதி சேவைகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்கத் தயாராக உள்ளது.

சியாபத நிதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன கிளை திறப்பு விழாவின் போது தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கையில்இ “கிளிநொச்சியானது வடமாகாணத்தில், நாட்டின் பொருளாதார அமைப்பில் முக்கிய பங்காற்றக்கூடிய நகரமாக விளங்குகிறது. இந்த புதிதாக சியபத பினான்ஸ் கிளையானது, எங்களால் பயன்படுத்தப்படாத வாய்ப்புகளை கண்டறிந்து, இப் பிராந்தியம் வழங்கும் முழுத் திறனையும் பயன்படுத்திக் கொள்வதை உறுதிசெய்ய நாங்கள் எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றாகும். நம்பகமான நிதித் தீர்வுகளை வழங்குதல், எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல் என்ற எமது வர்த்தக நாம வாக்குறுதிக்கு அமைவாக, கிளிநொச்சி கிளையானது, தனது வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அனுபவமும் அறிவும் மிக்க நிபுணர்களின் குழுவொன்றை முழுமையாகக் கொண்டுள்ளது.” எனக் கூறினார்.

சியாபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதிலும் உள்ள கிளைகளின் வலையமைப்பைக் கொண்ட முன்னணி நிதிச் சேவை வழங்குநர்களில் ஒன்றாகும், இது தனது வாடிக்கையாளர்களுக்கான சேவை வழங்கல் சிறந்த தரத்துடன் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தனது நிதிச் சேவைகளை வடிவமைத்துள்ளது. கடந்த பதினேழு ஆண்டுகளில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதிலும் உள்ள தனிப்பட்ட நிதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நிறுவனம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. அவர்களின் நிதிச் சேவைகளின் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு, சமூகங்கள் தங்கள் வணிக நோக்கங்களை அடைய உதவும் உந்துசக்தியாக திகழ்கிறது.

சியபத பினான்ஸ் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு, 0217 605 625 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள் அல்லது https://www.siyapatha.lk/ இற்கு விஜயம் செய்யுங்கள்.Share with your friend

Leave a Reply

%d bloggers like this: