Eyeview Sri Lanka

சிறப்புடன் நிறைவுற்ற கலா பொல 2023

Share with your friend

இலங்கையின் வருடாந்த திறந்தவெளி கலைக் கண்காட்சியான கலா பொல 2023, கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி இடம்பெற்றதோடு, இவ்வருடம் தனது 30 ஆவது ஆண்டு நிறைவையும் அது கொண்டாடியது. ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையினால் (George Keyt Foundation) கருத்தாக்கம் பெற்ற இந்த திறந்தவெளி கலைக் கண்காட்சி, முதன்முதலில் 1993 இல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 1994 முதல் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தொடர்ச்சியான ஆதரவுடனும் அனுசரணையுடனும் இடம்பெற்று வருகின்றது.

கலா பொல என்பது, கலைஞர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தவும் கலைஞர் சமூகத்துடன் தொடர்பு ஏற்படுத்தவுமான, இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் துடிப்பான தளமாகும். அந்த வகையில் இந்நிகழ்வில், நாடு முழுவதிலுமிருந்து 300 உள்ளூர் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது


Share with your friend
Exit mobile version