Site icon Eyeview Sri Lanka

சிறுவர் தினத்தை முன்னிட்டு யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ உடன் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Share with your friend

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றுவதில் தம்மாலான இயன்ற தியாகங்களைச் செய்கின்றனர். யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வர்த்தக நாம உறுதிமொழிக்கமைய, Sisumaga+ உடன் ஒவ்வொரு சிறுவருக்கும் தமது கல்வியை தொடர்வதற்கு தடங்கலற்ற பாதுகாப்பை வழங்குகின்றது.

Sisumaga+ என்பது பிரத்தியேகமான பாதுகாப்பு அடிப்படையிலான கல்விக் காப்பீட்டுத் திட்டமாக அமைந்துள்ளதுடன், பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் உயர்கல்விக்கான செலவை நிர்வகித்துக் கொள்ள உதவுகின்றது. தமக்கேற்ற வகையில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய கல்வி நிதியத்தை வழங்குவதுடன், நிதியத்தின் மீதியின் மீது மாதாந்த பங்கிலாபங்கள் எனும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸினால் வருடாந்தம் வட்டி வீதம் செலுத்தப்படுவதுடன், முதிர்வின் போது 15% போனஸ் கொடுப்பனவு வழங்கப்படுவதனூடாக அந்த நிதியம் தொடர்ச்சியாக வளர்ச்சியடையும். 

சராசரி கல்விக் காப்பீட்டுத் திட்டத்துக்கு அப்பாலான Sisumaga+ இனால் காப்புறுதிதாரரின் (பெற்றோர்) துரதிர்ஷ்டவசமான எதிர்பாராத உயிரிழப்பின் போது, பிள்ளைகளின் உடனடி கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பாரிய தொகை வழங்கப்படுவதுடன், அந்தத் திட்டம் முதிர்வடையும் வரை கட்டுப்பணத்தை யூனியன் அஷ்யூரன்ஸ் செலுத்தி, நிதியத்தை கட்டியெழுப்பும்.   கல்வி உதவி கொடுப்பனவு எனும் மேலதிக அனுகூலத்தையும் இது வழங்குகின்றது. இதனூடாக காப்புறுதிதாரர் உயிரிழந்தது முதல் காப்புறுதித் திட்டம் முதிர்ச்சியடையும் வரை சிறுவர்களின் கல்விச் செலவுகளை ஈடு செய்யும் வகையில் மாதாந்தம் தொடர்ச்சியாக வருமானம் வழங்கப்படும்.

Sisumaga+ உடன் ஒவ்வொரு பெற்றோருக்கும், இலங்கையின் மாபெரும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி நிறுவனத்துடன், தமது பிள்ளையின் கனவு நனவாகும் எனும் மன நிம்மதியை அடைய முடியும். மேலதிக தகவல்களை நிறுவனத்தின் 24/7 மும்மொழிகளிலும் இயங்கும் அழைப்பு நிலையமான 1330 உடன் தொடர்பு கொண்டு அல்லது யூனியன் அஷ்யூரன்ஸ் இணையத்தளமான https://unionassurance.com/sisumaga/ இலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த உலக சிறுவர் தினத்தில், எமது தேசத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக முன்வந்து தம்மை அர்ப்பணித்துள்ள சகல பெற்றோருக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 45.3 பில்லியனையும், 2021 ஜுன் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 300% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.


Share with your friend
Exit mobile version