Eyeview Sri Lanka

செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனுக்கு அதிகரித்துள்ள தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி (MSc in Artifical Inteligence) பட்டப் பாடத்திட்டத்தை ஆரம்பித்துள்ள SLIIT 

Share with your friend

வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு ஒரு அத்தியாவசிய திறமையாக மாறியுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் தொழில்துறைகள் ஏற்கனவே மாறத் தொடங்கியிருப்பதுடன், தொழில்வாய்ப்புக்களும் இதற்கு ஏற்ற வகையில் உருவாகிவருகின்றன. எதிர்கால உலகத்தை வெற்றிகொள்வதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவ மாணவியருக்கு இதன் ஊடாகப் பாரிய நன்மை ஏற்படுகின்றது. செயற்கை நுண்ணறிவில் நாளுக்கு நாள் மேம்பட்டுவரும் உலகின் தேவையை நன்கு அறிந்துகொண்டு, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி (MSc in Artifical Inteligence) பட்டப் பாடத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

கல்வி அமைச்சினால் இந்தப் பட்டப்பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதுடன், இதன்மூலம் கோட்பாட்டு ரீதியான அனுபவம் மற்றும் நடைமுறை ரீதியான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இரண்டு வருடங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பாடப்பரப்பு பரந்துபட்டதாகவும், வளர்ந்துவரும் விடயங்களை உள்ளடக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்தப் பாடநெறியில் ரோபோட்டிக்ஸ் (Robotics), கணினிக் கண்ணோட்டம் (Computer Vision), இயந்திரக் கற்கை (Machine Learning), ஆளமான கற்கை (Deep Learning), க்ளவுட் கணினியியல் (Cloud Computing), நியூரோ கணினியியல் (Neuro Computing) மற்றும் செயற்கை நுண்ணறிவின் பொறுப்புவாய்ந்த பயன்பாடு போன்ற பிரதான விடயங்கள் இப்பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டப்பாடத்திட்டத்துடன் SLIIT இன் சிரேஷ்ட கல்வியியலாளர்கள், தொழில்துறையில் உள்ள முன்னணி செயற்கை நுண்ணறிவின் விற்பன்னர்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பேராசிரியர்களுடன் புகழ்பெற்ற உள்நாட்டு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் இணைந்துகொள்கின்றனர். ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், மாணவர்கள் கற்றல் மற்றும் நடைமுறையான பயன்பாடுகளில் ஈடுபட ஏராளமான வாய்ப்புகளையும் பெறுகின்றார்கள். இறுதியாண்டு புத்தாக்கமான மற்றும் பிரயோக ரீதியான ஆய்வை ஊக்குவிப்பதாக அமையும்.

இந்தப் பட்டப்பாடத் திட்டம் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ரெசிடன்ஸில் நடைபெற்ற பிரமாண்டமான அங்குரார்ப்பண விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. SLIIT இன் கணினி விஞ்ஞான பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஏராளமான கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். இங்கு குழு விவாதம் இடம்பெற்றதுடன், இப்பாடத் திட்டத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் குழுக் கலந்துரையாடல் நிகழ்வில் இன் கணினிப் பீடத்தின் உதவி துணைவேந்தர் பேராசிரியர் நுவன் கோதாகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் பேராசிரியர் லசித் குணவர்தன, இன் இலங்கைக்கான இணைத் தலைவரும் நிலைத்தன்மை மற்றும் வசதிகளுக்கான உலகளாவிய தலைவர் திரு.டென்வர் டி சில்வா, at CoHEAD Therapeutics (United States) இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பிரதம செயற்கை நுண்ணறிவு அதிகாரியும், சம்பத் வங்கியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் மூலோபாய நிபுணரும், நிறுவனத்தின் தலைவருமான திரு.துஷேர கௌடவத்த ஆகியோர் குழுக் கலந்துரையாடலில் இணைந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் SLIIT இன் ஆய்வு மற்றும் கல்வித் துறைகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பொறியியல் பீடத்தின் பிரதிநிதிகள் முன்வைப்புக்களை மேற்கொண்டனர். இயந்திர கற்றல், ரோபோட்டிக்ஸ் மற்றும் தரவு விஞ்ஞானம் போன்றவற்றின் முன்னேற்றங்களுடன் உயர்கல்வியை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதால், சிக்கலான சமூக மற்றும் தொழில்துறை சவால்களைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்தப்படலாம் என்பதையும் அவர்கள் எடுத்துக் கூறியிருந்தனர். 

இந்த நிகழ்வில் உரையாற்றிய கணினி பீடத்தின் உதவிப் பேராசிரியர் கலாநிதி.ஜீவனி பமுனுசிங்க குறிப்பிடுகையில், “செயற்கை நுண்ணறிவுப் பட்டப்பாடத்திட்டமானது தொழில்நுட்ப திறன்களைத் தாண்டி, முழுமையான அணுகுமுறையை வளர்க்கும் திறன் கொண்ட புத்தாக்கம் மின்ன தலைவர்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய, அவற்றின் சமூக தாக்கங்களைப் புரிந்துகொள்ளக் கூடிய நிபுணர்களை SLIIT தயார்படுத்துவதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தை நடைமுறைரீதியாகப் பயன்படுத்துவது மற்றும் நெறிமுறையான கருத்தாய்வுகளையும் இணைக்கின்றது. இந்தத் திட்டம் மாணவர்கள் நிஜ உலக சவால்களை எதிர்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவின் புரட்சியை பொறுப்புடன் வழிநடத்தவும் உதவும், அதே நேரத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் சிக்கலான நெறிமுறைக் கடந்துசெல்லவும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

உலகளாவிய தொழில்துறையை மறுவரையறை செய்வதில் செயற்கை நுண்ணறிவு தொடர்ந்தும் பங்களிப்புச் செலுத்திவரும் நிலையில், SLIIT இன் செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி (MSc in Artifical Inteligence)பட்டப் பாடத்திட்டம் துறைசார் நிபுணர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவில் திறனைக் கட்டியெழுப்ப ஆர்வமாகவிருக்கும் பட்டதாரிகளுக்கு ஆய்வு மற்றும் நிஜ உலகத் தீர்வுகளின் மூலம் பக்கபலமாக இருக்கும். இந்த செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி (MSc in Artifical Inteligence)பட்டப் பாடத்திட்டம் SLIIT இன் சிறப்புப் பட்டமாகப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதுடன்,  இதில் தகவல் தொழில்நுட்பம், தகவல் மேலாண்மை, தகவல் அமைப்புகள், சைபர் பாதுகாப்பு மற்றும் நிறுவன பயன்பாடுகள் மேம்பாடு ஆகியவற்றில் MSc பட்டங்களும் அடங்கும்.செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை www.sliit.lk என்ற இணையத்தளத்தில் அல்லது +94 11 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.


Share with your friend
Exit mobile version