செலான் கார்ட்கள் உதவியால் இலகுவாகும் காப்புறுதிக் கொடுப்பனவு செலுத்தல்

Home » செலான் கார்ட்கள் உதவியால் இலகுவாகும் காப்புறுதிக் கொடுப்பனவு செலுத்தல்
Share with your friend

அன்புடன் அரவணைக்கும் வங்கி செலான் வங்கி, தனது கடனட்டைதாரர்களுக்கு மற்றுமொறு வசதியை வழங்கும் வகையில், அவர்களின் காப்புறுதிக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக இலகுமுறை தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.  இதற்காக முன்னணி காப்புறுதி சேவைகள் வழங்குநர்களுடன் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதுடன், அதனூடாக ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதிகளைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களின் மேம்படுத்தப்பட்ட பணப்பாய்ச்சல் நிர்வகிப்பை பேணவும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

“அத்தியாவசிய தேவைகளுக்கான அத்தியாவசிய அட்டை” எனும் தனது உறுதிமொழிக்கமைய, 2022 ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை வாடிக்கையாளர்கள் செலான் வங்கி கடனட்டையைப் பயன்படுத்தி காப்புறுதிக் கொடுப்பனவுகளை இலகுமுறை தவணைக் கொடுப்பனவினூடாக மேற்கொள்ளலாம். இந்தச் சலுகை ஆகக்குறைந்தது ரூ. 10,000 முதல் ரூ. 1 மில்லியன் வரை கொடுப்பனவுகளுக்கு செல்லுபடியாகும். 0% தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் 3 மாதங்கள் மற்றும் 6 மாதங்கள் வரை நீடித்துக் கொள்ள முடியும் என்பதுடன், வாடிக்கையாளர்கள் தமது இலகு தவணைக் கொடுப்பனவு திட்டங்களை 7 வேலை நாட்களுக்குள் இலகுமுறை தவணைத் திட்டத்துக்கு மாற்றியமைத்துக் கொள்ளலாம். செலிங்கோ இன்சூரன்ஸ், AIA இன்சூரன்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ், ஸ்ரீ லங்கா இன்ஷுவரன்ஸ், LOLC மற்றும் ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் போன்ற முன்னணி காப்புறுதி சேவை வழங்குநர்களுக்கு மேற்கொள்ளும் கொடுப்பனவுகளுக்கு இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய பொருளாதாரச் சூழலில், இல்லப் பணப்பாய்ச்சலை நிர்வகிப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. இதன் பெறுபேறாக, கடனட்டை பாவனை தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்படுவதுடன், இலகுமுறை தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. இயலுமானவரை வாடிக்கையாளர்களுக்கு அவசியமான நிதி நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான பங்காளராக செலான் வங்கி திகழ்கின்றது. காப்புறுதிக் கொடுப்பனவுகளுக்கான இலகு முறை தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களை செயற்படுத்தியுள்ளதனூடாக, வாடிக்கையாளர்களின் அவசர பணத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய தீர்வை வங்கி வழங்கியுள்ளது. நிதித் திட்டமிடல் தொடர்பில் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மதிநுட்பமான வகையில் தமது செலவுகளை மேற்கொள்வது தொடர்பிலும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த செலான் வங்கி எதிர்பார்க்கின்றது. இது போன்ற நெருக்கடியான காலப்பகுதியில் நாளாந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான நிதிசார் அறிவைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமாக அமைந்திருப்பதுடன், பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகவும் அமைந்துள்ளது. வெவ்வேறான கொடுப்பனவுத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக, இந்த நெருக்கடியான காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு தமது பணப் பாய்ச்சலை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான ஊக்குவிப்பை வழங்குகின்றது. 

செலான் வங்கியின் நுகர்வோர் கடன் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் இயுஜின் செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், செலான் வங்கியைச் சேர்ந்த நாம், எம் வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை நன்கு புரிந்து கொண்டுள்ளதுடன், அவர்களின் நிதித் தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான சகல வாய்ப்புகளையும் நாடிய வண்ணமுள்ளோாம். மொத்தமாக பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளால் ஏற்படக்கூடிய சுமையை தணிப்பதாக இந்த இலகுமுறைத் தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் அமைந்திருப்பதுடன், தற்போதைய சூழலில் அவ்வாறாான அர்ப்பணிப்பை மேற்கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படக்கூடும். கடந்த சில மாத காலப்பகுதியில் மாற்றமடைந்த வண்ணமுள்ள வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை தொடர்பில் நாம் அதிகளவு அக்கறை கொண்டுள்ளதுடன், நிதிசார் நிவாரணத்தை வழங்குனராக செலான் அட்டைகளைத் திகழச் செய்ய எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

வருடம் முழுவதிலும் செலான் வங்கி அட்டைதாரர்கள் பல்வேறு சலுகைகளினூடாக அனுகூலம் பெறுகின்றனர். தினசரி கொள்வனவுகளின் போது நிதிசார் நிவாரணம் என்பது பொது மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. அதன் பிரகாரம், செலான் அட்டைதாரர்களுக்கு குறைந்த கையாளல் கட்டணமொன்றைச் செலுத்தி, தமது கொடுப்பனவை இலகுமுறை தவணைக் கொடுப்பனவுத் திட்டமாக மாற்றிக் கொள்ள முடியும். எனவே, இந்த நெருக்கடியான காலப்பகுதியில் செலான் கடனட்டை போன்ற அத்தியாவசியமான அட்டையொன்றைக் கொண்டிருப்பது மிகவும் கைகொடுப்பதாக அமைந்திருக்கும்.

செலான் கடன் அட்டையை பெற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள் அல்லது இலகுமுறை தவைணக் கொடுப்பனவுத் திட்டங்கள் பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள விரும்புவோர், 011-2008888 எனும் ஹொட்லைன் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அல்லது www.seylan.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிட்டு அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். 

###

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான கணக்குகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, நாடு முழுவதிலும் 540 க்கும் அதிகமான வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும் அலகுகளைக் கொண்டுள்ளது. பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A(LKA)’ ஆக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனூடாக செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: