செலான் தங்கக் கடன் வாடிக்கையாளர்களுக்கு அதியுயர் முற்பண வசதியுடன் ஆதரவு

Home » செலான் தங்கக் கடன் வாடிக்கையாளர்களுக்கு அதியுயர் முற்பண வசதியுடன் ஆதரவு
Share with your friend

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, வாடிக்கையாளர்களின் அவசர நிதித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பெற்றுக் கொள்ளும் தங்கக் கடன் வசதிகளின் போது சந்தையில் நிலவும் அதியுயர் முற்பணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தக் கடன் வசதிகளை கையாள்வதற்காக மேலதிகக் கட்டணங்கள் எதனையும் அறவிடாாமல் இருப்பதற்கும் வங்கி தீர்மானித்துள்ளது. இதனூடாக, தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தாமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக செலான் வங்கி அறிவித்துள்ளது. 

தனிநபர்களிடமிருந்து கைமாறாக பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மாறாக, தங்க நகைகளை அடைமானம் வைத்து தமது அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வழிமுறையாக தங்கக் கடன் வசதி அமைந்துள்ளது. இல்லத்தரசிகள் முதல் வியாபார உரிமையாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் விவசாய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அனைவரும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், தமது நாளாந்த அவசர பணத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக தங்கக் கடன் வசதியை நாடுகின்றனர். தமது தங்கக் கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்காக செலான் வங்கியை நாடும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் உடைமைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படுவதுடன், வங்கியின் விருதுகள் வென்ற, புகழ்பெற்ற சிறந்த வாடிக்கையாளர் சேவையும் வழங்கப்படுகின்றது. 

நாடளாவிய ரீதியில் காணப்படும் செலான் வங்கிக் கிளைகளினூடாக, தங்கக் கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடனான சேவைகள் வழங்கப்படுகின்றன. தமது பெறுமதி வாய்ந்த தங்க நகைகளுக்கு கடன் பெற்றுக் கொள்வதற்கு, நட்பான, அக்கறையான ஊழியர்களினூடாக எளிமையான வழிகாட்டல்களைப் பின்பற்றி, சிறந்த புரிந்துணர்வுடன் சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தங்கக் கடன் பிரிவில் செலான் வங்கி அதியுயர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளமையினூடாக, வங்கியின் வினைத்திறன் வாய்ந்த செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் வாடிக்கையாளர்கள் வங்கியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், செலான் வங்கியினால் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு கைகொடுக்கும் வகையிலான சேவைகளை வழங்குவதில் அதிகளவு கவனம் செலுத்தப்படுகின்றது. இந்த சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு, வங்கிக்கு எவ்விதமான முன்னறிவித்தலுமின்றி, தமது வசதிக்கேற்ப இலகுவான முறையில் தமது அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொள்ளும் வசதியையும் வங்கி வழங்குகின்றது. செலான் வங்கியைச் சேர்ந்த ஊழியர்கள், தமது வரிசைகளில் காத்திருப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கும் சிரேஷ்ட பிரஜை வாடிக்கையாளர்களின் நலன் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன், துரிதமாக அவர்களின் கொடுக்கல் வாங்கல்களை பூர்த்தி செய்து கொள்ளும் வசதியை வழங்குகின்றது.

செலான் வங்கியின் தங்கக் கடன் வசதி பற்றிய மேலதிக தகவல்களை ஹொட்லைன் இலக்கமான 2008888 உடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். அல்லது https://www.seylan.lk/pawning/gold-loan எனும் இணையப் பக்கத்தைப் பார்வையிட்டு பெறலாம். வார நாட்களில் பணியாற்றும் வாடிக்கையாளர்களுக்கு, சனிக் கிழமைகளில் திறந்திருக்கும் கிளைகளினூடாக தங்கக் கடனைப் பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது. கிளைகள் மற்றும் அவை திறந்திருக்கும் நேரங்கள் தொடர்பான முழுமையான விவரங்களை https://www.seylan.lk/view-all-branches/ எனும் இணையப் பக்கத்தில் பார்க்கலாம்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: