செலான் வங்கி தொடர்ந்து 6வது ஆண்டாக Colombo Motor Showஇற்கு ஆதரவளிக்கிறது

Share with your friend

செலான் வங்கி தொடர்ந்து ஆறாவது ஆண்டாக Colombo Motor Showஇன் உத்தியோகபூர்வ வங்கி பங்குதாரராக இணைகின்றது. Colombo Motor Show 2023, நவம்பர் 17 முதல் 19 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சிறிமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதோடு வாகனப் பிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இது ஒரு உற்சாகமான அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராக இணையும் செலான் வங்கி, பங்கேற்பாளர்களுக்கு பரந்த வங்கிச் சேவைகளை வழங்கவுள்ளது. இதில் சிறப்பு வட்டி விகிதங்களுடனான லீசிங் வசதிகள், கடனட்டைகள், மேலதிக நன்மைகளுடன் கூடிய நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் என்பன அடங்கும்.

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த ஆறு வருடங்களாக Colombo Motor Showவுடனான செலான் வங்கியின் இணைவு காட்சிப்படுத்துபவர்கள் மற்றும் பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. வாகனப் பிரியர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் ஆகிய இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வங்கியியல் தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, இலங்கையில் இந்த முக்கியமான துறையின் வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருந்துள்ளது. மற்றொரு வெற்றிகரமான ஆண்டை எதிர்பார்த்துள்ள இந்நிலையில் எங்கள் நாட்டில் வாகனத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி தொடர்பாக நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

200ற்கும் மேற்பட்ட stalls காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், Colombo Motor Show 2023இல் மோட்டார் வாகனங்கள், மோட்டார் பாகங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள், lubricants, டயர்கள் மற்றும் பட்டரிகள் எனப் பலதரப்பட்ட தயாரிப்புக்களை காணலாம். வாகன ஆர்வலர்கள், சிறப்பு வட்டி விகிதங்களுடனான நெகிழ்வான கட்டணத் திட்டத்தின் மூலம் வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்பை ஆராயலாம். இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப தங்கள் leaseஐ திருப்பிச் செலுத்தும் திட்டத்தை வடிவமைக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. செலான் வங்கியின் லீசிங் 7 வருடங்கள் வரை திருப்பிச் செலுத்தும் காலத்தை வழங்கும் அதே சமயம் தனித்துவமான Speed Drive சேவையானது வாடிக்கையாளர்களுக்கு வட்டியை முன்னரும், மூலதனத் தொகையை பின்னரும் செலுத்த அனுமதிக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களுக்கு எதிராக செயற்பாட்டு மூலதனம் அல்லது வேறு ஏதேனும் நிதித் தேவைகளுக்காக லீசிங்  வசதிகளைப் பெறலாம்.

செலான் வங்கி தொடர்பாக

அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சிறந்த தரமான சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அதிசிறந்த வங்கி அனுபவத்தை வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் செயற்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தனிநபர் வங்கிச் சேவை மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்கள் உள்ளடங்கலாக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இவ்வங்கி, நாடு முழுவதும் 540ற்கும் மேற்பட்ட அணுகல் புள்ளிகளைக் கொண்டுள்ளது. செலான் வங்கியானது நிதிரீதியாக நிலையான மற்றும் சிறந்த செயற்திறன் மிக்க நிறுவனமாக Fitch Ratings நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A-’(lka)வாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இவை செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் நிலையான சேவை வழங்கலை உறுதி செய்வதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply