செலான் வங்கி WNPS Wild Kids உடன் கைகோர்த்து சிறுவர்கள் மத்தியில் இயற்கை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Home » செலான் வங்கி WNPS Wild Kids உடன் கைகோர்த்து சிறுவர்கள் மத்தியில் இயற்கை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுப்பு
Share with your friend

செலான் வங்கி, வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) உடன் பங்காண்மையை ஏற்படுத்தி, ‘Wild Kids’ திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இதனூடாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மத்தியில் இயற்கை பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கொழும்பில், “ஈரநில பூங்கா நடை” நிகழ்வில் 50 க்கும் அதிகமான சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மரங்கள், விலங்குகள் மற்றும் ஈரநிலைத்தில் அவற்றின் நடத்தைகள் தொடர்பில் இந்த நடையின் போது அவர்கள் அவதானித்திருந்தனர். விசேடத்துவமான வழிகாட்டல்களினூடாக ஈரநிலங்களின் சூழல் கட்டமைப்பு பற்றி இந்த சிறுவர்கள் அறிந்து கொண்டனர். அவர்களுக்கு விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இயற்கையை பாதுகாப்பது தொடர்பில் அவர்களை தொடர்ந்தும் ஈடுபடுத்துவதற்காக செலான் டிக்கிரியினால் வெகுமதிகளும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்.

செலான் டிக்கிரி மற்றும் Fox Resort ஆகியவற்றின் பங்காண்மையின் கீழ் யாழ்ப்பாணத்தில் ஓவிய பயிற்சிப்பட்டறை மற்றும் போட்டியான “ஓவியத்தினூடாக இயற்கை” என்பது முன்னெடுக்கப்பட்டிருந்தது. மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு டிக்கிரி கணக்குகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டிருந்ததுடன், பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டிருந்தன. Fox Resort ஹோட்டலில் காணப்படும் art gallery மற்றும் அருங்காட்சியகம் போன்றன உள்ளடங்கலாக, இலவச சுற்றுப் பயண வசதியும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. செலான் வங்கியின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் நிர்மலன் நந்தகுமார் சிறுவர்களுடன் உரையாடியிருந்ததுடன், தமது எதிர்காலத்துக்காக சேமிப்பதுடன், சூழலை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியிருந்தார்.

நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை செலான் டிக்கிரி முன்னெடுப்பதுடன், எதிர்காலத்துக்கு தம்மை தயார்ப்படுத்திக் கொள்வது பற்றியும் அறிவூட்டுகின்றது. சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், அன்புடன் அரவணைக்கும் வங்கியினால் இயற்கை பாதுகாப்பு தொடர்பில் இந்த ஊக்கமளிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், புவியை பாதுகாப்பது தொடர்பிலும் சிறுவர்கள் பயில்கின்றனர். WNPS உடனான பங்காண்மையில் செலான் வங்கியினால் முன்னெடுக்கப்படும் தொடர் செயற்திட்டங்களின் அங்கங்களாக இந்த இரு திட்டங்களும் அமைந்துள்ளன.

இந்தத் திட்டங்கள் பற்றி செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது உலகின் எதிர்காலம் எம் சிறுவர்கள் மற்றும் இயற்கை ஆகிய இரு பிரதான காரணிகளில் தங்கியுள்ளன. அந்த இருசாராரையும் பாதுகாத்திடும் வகையில், இரு தரப்புக்குமிடையே உறுதியான பந்தத்தை ஏற்படுத்துவது முக்கியமானதாக அமைந்துள்ளது. எதிர்காலத் தலைமுறையினர் மத்தியில் இயற்கையை போற்றுவது மாத்திரமன்றி, அதனைப் பாதுகாப்பது தொடர்பான செயற்பாடுகளில் பெருமளவு ஈடுபடும் தலைமுறையை கட்டியெழுப்புவதில் செலான் டிக்கிரி எப்போதும் கவனம் செலுத்துகின்றது. WNPS உடனான எமது பங்காண்மையினூடாக, கடந்த காலங்களில் பல திட்டங்களை நாம் முன்னெடுத்திருந்ததுடன், எமது டிக்கிரி சிறுவர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் தொடர்ந்தும் பணியாற்றுவோம்.” என்றார்.

உலகின் மூன்றாவது பழமையான இயற்கைப் பாதுகாப்பு சங்கமாக WNPS அமைந்துள்ளது. ‘Wild Kids’ திட்டத்தினூடாக, சிறுவர்கள் மத்தியில் சூழல் தொடர்பான ஈடுபாட்டை கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்படுவதுடன், கல்வி மற்றும் களிப்பூட்டும் செயற்பாடுகளினூடாக பாதுகாப்பு தொடர்பான முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது. 

வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஸ்பென்சர் மனுவல்பிள்ளை கருத்துத் தெரிவிக்கையில், “மாற்றத்தின் சிறந்த முகவர்களாக சிறுவர்கள் அமைந்துள்ளனர் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அதன் பிரகாரம் நாம் ‘Wild Kids’ திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். நாம் பல இயற்கை பாதுகாப்பு தொடர்பான அறிவூட்டும் திட்டங்களையும், ஈடுபாட்டு மற்றும் களிப்பு அம்சங்கள் நிறைந்த பயிற்சிப் பட்டறைகள், இயற்கை நடை பயணங்கள், புகைப்பட மற்றும் ஓவியப் போட்டிகள், கள விஜயங்கள் மற்றும் சூழலுக்கு நட்பான செயற்திட்டங்கள் போன்றவற்றை சிறுவர்களுக்காக முன்னெடுக்கின்றோம். உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளர் எனும் வகையில் செலான் வங்கியினால் எமக்கு பெரும் வலுச் சேர்க்கப்பட்டுள்ளதுடன், எமது சகல திட்டங்களிலும் டிக்கிரி சிறார்களை பங்கேற்கச் செய்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

சிறுவர்களின் ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்க அம்சங்களை தூண்டி, அவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை செலான் டிக்கிரி தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது. அதன் பிரகாரம், டிக்கிரி கணக்குதாரர்களுக்கு பல கல்வி மற்றும் களிப்பூட்டும் செயற்பாடுகளில் பங்கேற்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அதனூடாக டிக்கிரி அன்பளிப்புகள் மற்றும் அன்பளிப்பு வவுச்சர்களையும் வெற்றியீட்டக்கூடியதாக இருக்கும். ‘Wild Kids’ போன்ற பிரத்தியேகமான அனுகூலங்களினூடாக, சிறுவர்களுக்கு சிறு வயது முதல் சமூகத்தில் பொறுப்பு வாய்ந்தவர்களாக திகழ்வதற்கு வலுவூட்டப்படுவதுடன், சிறந்த பழக்கங்களை தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.
சிறுவர்களுக்கு போனஸ் வட்டி, அன்பளிப்புகள் மற்றும் அன்பளிப்பு வவுச்சர்கள் என பெருமளவு அனுகூலங்களை வழங்கும் செலான் டிக்கிரி, சந்தையில் காணப்படும் முதல் தர சிறுவர் சேமிப்புக் கணக்காக அமைந்துள்ளது. செலான் வங்கியின் Facebook பக்கம், இணையத்தளமான  www.seylan.lk ஆகியவற்றை பார்வையிட்டு அல்லது 011 200 88 88 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: