பரீட்சார்த்திகளுக்குச் சிறப்பான அனுபவத்தை உருவாக்குவதற்கான ETS இன் தொடர்ச்சியான நாட்டத்தின் ஒரு பகுதியாக, ETS ஆனது இன்று கிளர்வளிக்கின்ற TOEFL iBT® மேம்படுத்தல்களின் ஒரு தொடரை அறிவித்தது. அடுத்த சில மாதங்களில், பரீட்சார்த்திகள் ஜூலை 26, 2023 முதல் நிர்வாகங்களுக்கான ஒரு குறுகிய TOEFL iBT பரீட்சையை எதிர்பார்க்க முடியும். பரீட்சையை முடிப்பதற்கு இரண்டு மணித்தியாலத்திற்கும் குறைவாகவே செலவாகும் – முன்பு அது மூன்று மணித்தியாலமாக இருந்தது – பரீட்சை முழுதும் நெறிப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள் ஆகியவற்றின் பயனாக, புதிய, மிகவும் நவீனத்துவம் மிக்க “கல்விசார் கலந்துரையாடலுக்கான எழுதுதல்” பணியானது முந்தைய சுயாதீனமாக எழுதும் பணி, ஒரு குறுகிய வாசிப்புப் பிரிவு, மதிப்பெண் பெறாத அனைத்துப் பரீட்சைக் கேள்விகளின் நீக்கம் ஆகியவற்றை மாற்றுகின்றது, அத்துடன் எளிமைப்படுத்தப்பட்ட பதிவுச் செயன்முறை ஜூலை 2023 முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. பரீட்சார்த்திகள் தமக்கான ஒரு கணக்கை உருவாக்கி, கிடைக்கின்ற TOEFL iBT பரீட்சைத் திகதிக்கு, முன்பை விட விரைவாகவும் எளிதாகவும் பதிவு செய்ய முடியும். அவர்கள் தங்கள் மதிப்பெண் நிலைக்குரிய மாற்றங்களின் நிகழ்நேர அறிவிப்பைப் பெறுவதற்கு மேலதிகமாக, பரீட்சை முடிந்ததும் அவர்களின் அதிகாரப்பூர்வமான மதிப்பெண் வெளியீட்டுத் திகதியையும் பார்க்க முடியும்.
“ETS ஆனது கல்வி மற்றும் கற்றல் முழுவதும் தயாரிப்புப் புதுமைகள் மூலம் மதிப்பீட்டின் எதிர்காலத்தை இயக்குகிறது, மேலும் TOEFL அந்த முயற்சிக்கு முக்கியமானதாகும்” என்று ETS இன் CEO அமித் சேவக் கூறினார். “TOEFL கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக ஒரு தொழில்துறைத் தரநிலையாக இருந்து வருகிறது, அத்துடன் இந்த மேம்படுத்தல்கள் அதன் நிலையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. மிக முக்கியமாக, இந்த மேம்படுத்தல்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோரின் நோக்கின் மூலம் உருவாக்கப்பட்டன – ஏனெனில் சேவை செய்வதற்கு அவர்கள் தான் எமது மிக உயர்ந்த முன்னுரிமையாளர்கள் ஆவர்,” என்றும் அவர் கூறினார்.
TOEFL iBT பரீட்சைக்கு ஏற்கனவே பதிவு செய்துள்ள பரீட்சார்த்திகள், இந்தப் புதிய மேம்படுத்தல்களை அனுபவிக்க விரும்பினால் அல்லது இவை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தங்களின் பரீட்சைத் திகதியை நகர்த்த விரும்பினால், அவர்களின் பரீட்சைத் திகதியை இலவசமாக மாற்றிக்கொள்வதற்கான விருப்பத்தேர்வும் உள்ளது. அவர்களின் TOEFL கணக்கு மூலம் ஏப்ரல் 30, 2023 வரை இலவச நேரமாற்றங்களை மேற்கொள்ளலாம். அதற்கு மேலதிகமாக, TOEFL iBT இலவச பயிற்சிப் பரீட்சை மற்றும் TOEFL iBT பயிற்சித் தொகுப்புக்கள் என்பவற்றின் இற்றைப்படுத்தப்பட்ட பதிப்புகள் இப்போது TOEFL இணையத்தளத்தில் கிடைக்கின்றன. அடுத்த சில வாரங்களில் இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் கூடுதலான இலவசமான மற்றும் கட்டணஞ்செலுத்த வேண்டிய பரீட்சைத் தயார்படுத்தல் விருப்பத்தேர்வுகளும் இற்றைப்படுத்தப்படும்.
ஸ்கோர் பயனர்களுக்கு, TOEFL iBT ஸ்கோர் அளவுகோல் அப்படியே இருக்கும், எனவே அவர்களின் தேவைகளும் அப்படியே இருக்கும். TOEFL பரீட்சை உலகெங்கிலும் உள்ள ஸ்கோர் பயனர்களுக்கு மிகவும் நம்பிக்கையான, செல்லுபடியாகின்ற, நம்பத்தகுந்த மற்றும் பாதுகாப்பான விருப்பத்தேர்வாகக் காணப்படுகின்றது. தற்போது, இந்தக் கூடுதலான மேம்படுத்தல்களுடன், பரீட்சார்த்திகளின் அனுபவம் இப்போது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக உள்ளது என்பதை ஸ்கோர் பயனர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் – இது பரீட்சை நாளுக்கான பதற்றத்தைக் குறைக்கும் அதே வேளையில், அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
TOEFL iBT மேம்படுத்தல்கள் பற்றி மேலும் அறிவதற்கு, www.ets.org/toefl/ibt-enhancements ஐப் பார்வையிடவும். ஒரு கணக்கை உருவாக்குவதற்கு, ஒரு பரீட்சைக்காகப் பதிவு செய்வதற்கு, பரீட்சைக்கான தயார்படுத்தல் வளங்களையும் இன்னும் பிறவற்றையும் அணுகுவதற்கு, www.ets.org/toefl ஐப் பார்வையிடவும்