டிஜிட்டல் செயற்படுத்தப்பட்ட பெருந்தோட்டக் கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக Itechro உடன் SLT-MOBITEL Enterprise கைகோர்ப்பு

Share with your friend

விவசாய தொழில்நுட்பப் பிரிவை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ள SLT-MOBITEL Enterprise, கணனி மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான Itechro Pvt Ltd உடன் கைகோர்த்து, நிறுவனசார் டிஜிட்டல் மாற்றியமைப்பு பணிகளை முன்னெடுத்து, iHarvest டிஜிட்டல் மயமாக்கல் கட்டமைப்பை பெருந்தோட்டத்துறைக்கு அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை, SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க மற்றும் Itechro முகாமைத்துவ பணிப்பாளர் சாமர ஜயவீர ஆகியோரிடையே கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இரு நிறுவனங்களினதும் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

SLT-MOBITEL Enterprise இன் ஒப்பற்ற திறன், இணைப்புத்திறன் தீர்வுகள், மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு பின்புல சேவைகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு போன்றன, Itechro இன் iHarvest க்கு விவசாயச் சங்கிலித் தொடர்பில் பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வசதியை வழங்கும்.

iHarvest என்பது cloud அடிப்படையிலான கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன், களச் செயற்பாடுகள் மற்றும் நிறுவனசார் பெருந்தோட்டத்துறை செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் பெருந்தோட்டங்களின் வருமானங்களை அதிகரிப்பதில் பங்களிப்பு வழங்கல் போன்றவற்றைக் கொண்டிருக்கும். களத்தின் சகல செயற்பாடுகளையும் மேம்படுத்தும் வகையிலும், பெருந்தோட்ட முகாமைத்துவத்துக்கு முழுமையாக டிஜிட்டல் பயணத்தை பின்பற்றுவதற்கும், களச் செயற்பாடுகளுக்கு அசல் நேர வெளிப்படைத்தன்மையை வழங்குவது மற்றும் துரித தீர்மானமெடுத்தல்களுக்கு ஆதரவளிப்பது போன்றவற்றை வழங்க முன்வந்துள்ளது.

தீர்வில் வழங்கப்படும் பிரதான உள்ளம்சங்களில், dashboards, task மற்றும் நிதி முகாமைத்துவம், விளைச்சல் முகாமைத்துவம், வரவுப் பதிவு, தர உறுதிப்படுத்தல், கொடுப்பனவு நிர்வாகம், தொழிற்சாலை செயற்பாடுகள் மற்றும் செம்மையாக்கல்கள் போன்றன அடங்கியுள்ளன. செய்மதி அடிப்படையிலான கள, தாவர மற்றும் உர செம்மையாக்கல்கள் போன்றவற்றினூடாக கள மேற்பார்வைகளும் முதிர்ச்சியடைந்த பெருந்தோட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன.

SLT-MOBITEL Enterprise இன் cloud சேவைகளில் தங்கியிருக்கும், iHarvest கட்டமைப்பு, Azure Stack இல் நிறுவப்படுவதுடன், உள்நாட்டு நாணயத்தில் கட்டணம் செலுத்தக்கூடிய வகையில் வழங்கப்படுவதுடன், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பெறுமதி சேர்ப்பதாகவும், செலவுகளைக் குறைத்துக் கொள்ளக்கூடிய வகையிலும் அமைந்திருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளின் பிரகாரம், Capex மற்றும் Opex மாதிரிகளில் இந்தக் கட்டமைப்பு வழங்கப்படுகின்றது. SLT-MOBITEL Enterprise இனால் வலுவூட்டப்பட்ட iHarvest இனால், வியாபாரசார் பெருந்தோட்ட வாடிக்கையாளர்களின் வியாபார மாதிரிகளில் டிஜிட்டல் முறைகளை உள்வாங்க உதவுவதுடன், சிறிய, நடுத்தரளவு மற்றும் பாரிய வியாபாரங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் இதர பங்காளர்களுக்கு வலுவூட்டுவதுடன், பெருந்தோட்டக் கட்டமைப்பில் கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்கும்.

C:\Users\011376\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\Group photo.jpg

SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க மற்றும் Itechro முகாமைத்துவ பணிப்பாளர் சாமர ஜயவீர ஆகியோர் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை பரிமாறிக் கொள்வதையும், அருகாமையில் இரு நிறுவனங்களின் பிரதிநிதிகள் காணப்படுவதையும் காணலாம்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply