Eyeview Sri Lanka

தனிப்பட்ட, தொழில்சார் முன்னேற்றம், சுய-நிலைப்புத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றுடன் மாணவர்களுக்குப் போட்டித் தன்மையை வழங்கும் SLIIT இன் பட்டப்பின்படிப்புத் திட்டங்கள்

Share with your friend

நவீன வளங்களுடன் தனித்துவமான கற்றல் மற்றும் ஆராய்ச்சி சூழலை உருவாக்குவதற்காக அங்கீகாரம் பெற்ற SLIIT நிறுவனத்தின் பட்டப் பின்படிப்பு பாடத்திட்டங்கள் தனிப்பட்ட, தொழில்சார் மேம்பாடு, சுய-நிலைப்புத் தன்மை மற்றும் வேலைவாய்பைப் பெற்றுக்கொள்ள மாணவர்களுக்கு ஒரு போட்டித்தன்மை வழங்குவதற்காகப் பாராட்டப்படுகிறது.

2004ஆம் ஆண்டு முதுகலமானி விஞ்ஞான (MSc) பட்டத்தை ஆரம்பித்ததன் மூலம் பட்டப்பின்படிப்புத் தொடர்பான SLIIT இன் குறிப்பிடத்தக்க வரலாறு ஆரம்பமாவதுடன், இந்த வரிசையில் வர்த்தக முகாமைத்துவம் தொடர்பான முதுகலைமானி 2018ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், தகவல் முகாமைத்துவம், தகவல் முறைமை,  சைபர் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெறுவதற்கான தகவல் தொழில்நுட்பம், தொழில்துறைகளுக்கான செயலிகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெறுவதற்கான தகவல் தொழில்நுட்பம் ஆகிய விடயங்களில் MSc பட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம் (MBA) என்பன பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி பீடத்தின் கீழ் இதுவரை ஆழமான மற்றும் விசேடத்துவம் மிக்க வகையில் வழங்கப்படுகின்றன. எதிர்வரும் காலத்தில் வலையமைப்பு பொறியியல் தொடர்பான முதுநிலை விஞ்ஞானப் பட்டமும் SLIIT இன் பட்டப்பின்படிப்புத் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனைவிடவும், மாணவர்கள் தங்கள் தொழில் திறனை மேம்படுத்த முதுகலை டிப்ளோமாக்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, கணினி, பொறியியல் துறையில் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட Master of Philosophy (MPhil) மற்றும் Doctor of Philosophy (PhD) ஆகிய பட்டங்கள் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் SLIIT இனால் வழங்கப்படுகிறது.

SLIIT பட்டங்கள் பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் செயன்முறையின் படி SLIIT இன் முதுகலை MSc மற்றும் MBA பட்டங்கள் தரம் மற்றும் பண்புக்கூறுகள் தொடர்பான தரம் 9 மற்றும் தரம் 10ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை தகுதிக் கட்டமைப்புடன் (SLQF) சீரமைக்கப்பட்டுள்ளன, அதே சமயம் MPhil மற்றும் Phd திட்டங்கள் SLQF இன் தரம் 11 மற்றும் தரம் 12ற்கு அமைய சீரமைக்கப்ப்டடுள்ளன.

பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் (ACU) மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் சங்கம் (IAU) ஆகியவற்றின் உறுப்பினராக SLIIT அங்கீகரிக்கப்பட்டுள்ளது. SLIIT ஆனது ஐக்கிய இராச்சியத்தின் Institution of Engineering and Technology (IET) மூலம் தகவல் தொழில்நுட்ப பட்டப்பிடிப்புகளுக்காக அங்கீகாரம் பெற்ற முதல் இலங்கை நிறுவனமாகும். 

முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கான சிறந்த ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வியை அபிவிருத்தியடையச் செய்வது SLIIT ஆசிரியப் பிரிவின் முக்கிய இலக்குகளாகும். சிறந்த கல்வி நற்பெயர், தொழில் அனுபவம் மற்றும் சர்வதேச மனநிலை, நேர்மறையான சூழலை உருவாக்கி விமர்சன சிந்தனையை நோக்கி மாணவர்களை வடிவமைக்கும் திறனை இது உறுதி செய்கிறது.

SLIIT இன் கல்விசார் இணைய இருப்பு மற்றும் ஆராய்ச்சியின் சிறப்பு என்பன ளுஉழிரள போன்ற புகழ்பெற்ற வெளியீடுகளின் தரப்படுத்தல், AD தரவரிசை 2022 இல் பாராட்டத்தக்க நிலையிலான முன்னேற்றம், உயர் H-Index இதழ்களில் மேற்கோள்களைக் காட்சிப்படுத்தியமை மற்றும் Webometrics இல் முன்னேறியமை மற்றும் டைம்ஸ் உயர் கல்வி தரப்படுத்தலில் முன்னேறியமை மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மாணவர்களால் உருவாக்கப்பட்ட உயர்தர ஆராய்ச்சி மற்றும் உலகத் தரம் வாய்ந்த பத்திரிகைகளில் அங்கீகாரத்தைப் பெறுகின்றமை நாடு முழுவதும் வழங்கப்படும் ஏனைய வர்த்தக முகாமைத்துவ முதுநிலைப் பட்டங்களில் காணப்படாத ஆனாலும், SLIIT வர்த்தக முகாமைத்துவ முதுநிலைத் திட்டங்களில் காணப்படும் தனித்துவமாகும்.

முதுகலை பட்டப்படிப்பு திட்டங்களில் உள்ள விரிவுரையாளர்கள் குழு, மிக உயர்ந்த கல்வி நிலைகளைக் கொண்ட உள் மற்றும் வருகை தரும் விரிவுரையாளர்களை உள்ளடக்கியது. அவர்களில் தொழில்முறை தகுதிகள் மற்றும் குறிப்பிட்ட துறைகளில் தொழில் அனுபவம் உள்ள புகழ்பெற்ற நபர்கள் பயிற்சி பெறுகிறார்கள், இதன் விளைவாக உள் மற்றும் வெளிப்புற கற்பித்தல் வளங்களின் ஆரோக்கியமான கலவையாக இது காணப்படுகிறது.

நன்கு அனுபவம் வாய்ந்த கல்விசார் ஊழியர்கள் தங்கள் சொந்த முதுகலைப் பணியின் போது புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சர்வதேச ஆராய்ச்சி அனுபவத்தைப் பெற்றுள்ளனர் என்பதுடன், மாணவர்களை வழிநடத்தும் வலுவான திறன்களைக் கொண்டுள்ளனர். மேலும், இந்த ஆசிரிய உறுப்பினர்களில் பலர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சர்வதேச சூழலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பது மாத்திரமன்றி Mphil மற்றும் Phd படிப்புகளுக்கு வழிகாட்டுவதில் நன்கு அனுபவம் பெற்றவர்கள்.

ஆசிரிய உறுப்பினர்களும் மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக கிட்டத்தட்ட 24/7 கிடைக்கும். குறைபாடுள்ளவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு, SLIIT நிர்வாக உதவியுடன் இணைந்து பலனளிக்கும் அனுபவத்தை உருவாக்குகிறது.

SLIIT இன் முதுகலைப் பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கிடைக்கும் போட்டியான நன்மை என்னவெனில், அதன் கௌரவ பேராசிரியர் வலையமைப்பாகும். இந்தத் திட்டம் வலையமைப்பின் மூலம் இணைக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்து புகழ்பெற்ற கல்வியாளர்களுக்கான அணுகலையும் இது வழங்குகிறது. மாணவர்களின் கூட்டு ஆராய்ச்சி மேற்பார்வையைப் பெறுவதற்கும், ஆலோசனைகளைப் பெறுவதற்கும், வெளிநாட்டுக் கல்வித் தளங்களுடனான இந்த புகழ்பெற்ற கல்வி அமைப்பு இணைப்புகளால் நடத்தப்படும் விருந்தினர் விரிவுரைகளில் பங்கேற்கவும் சில சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், Curtin, Liverpool John More  போன்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனான SLIIT இன் கூட்டாண்மை மற்றும் கனேடிய பல்கலைக்கழகங்களின் நவீன கற்பித்தல் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களை அணுகுவதற்கான கூட்டுத் திட்டங்களை வழங்குகின்றன. 

நிறுவன மட்டத்தில் SLIIT ஆனது முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு மாணவர் தேர்வில் இருந்து, நிகழ்ச்சித்திட்டம், விநியோகம், மதிப்பீடு ஆகியவற்றில் வலுவான தர உத்தரவாதக் கட்டமைப்பை வழங்குகிறது. பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு மாணவரும் பட்டப்படிப்பு எதிர்பார்ப்புகள் மற்றும் காலக்கெடுவைப் புரிந்துகொள்வதையும் அறிந்திருப்பதையும் உறுதிசெய்ய தெளிவான கல்வித் திட்டம் வழங்கப்படுகிறது.

முதுகலை திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் சூழலை முன்வைத்து, நவீன ஆய்வக வசதிகள், மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இணையான கலப்பின கற்பித்தல் தளங்கள் உள்ளிட்ட அதிநவீன கற்றல் வசதிகளை SLIIT வழங்குகிறது.

சவாலான கொவிட் சூழலுடனான அனுபவத்துடன், கலப்பின கற்றல் வசதிகள் மற்றும் கற்பித்தல்களுக்கு சர்வதேச மட்டங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் மாணவர்களுக்கு அதிக நம்பிக்கையையும் உறுதியையும் உருவாக்குகின்றன. பொது முடக்கங்களின்போது SLIIT மெய்நிகர் தளமான Eduscope MBA மாணவர்களுக்கு ஆன்லைன் ஊடாடும் பாடங்களை வழங்கியதுடன், மாணவர்களுக்குத் தேவையான பாடப் பொருள்களை வழங்கியது. SLIIT சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட e-வளங்களான Scopus indexed மற்றும் பிற புகழ்பெற்ற இதழ்களுக்கான அணுகலை அனைத்து மாணவர்களும் தங்கள் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் அணுகுவதற்கு வாய்ப்பு வழங்குகிறது.

இலங்கையில் தரமான மற்றும் மலிவு விலையில் கல்வியை வழங்கும், SLIIT முதுகலை பட்டப்படிப்பு திட்டங்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. SLIIT பழைய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் பெருநிறுவனத் துறைக்கான அளவு தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.


Share with your friend
Exit mobile version