தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் ஆடைத் தொழில்துறை

Home » தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் ஆடைத் தொழில்துறை
Share with your friend

தற்போதைய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் ஊழியர்களுக்கு நிதி சார்ந்த மற்றும் நிதிசாரா உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 40%ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆடைத் தொழில்துறையானது இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் மிகப்பெரிய ஆதாரமாகும்.

“நாங்கள் மிகவும் கடினமான மற்றும் சவால் நிறைந்த நேரத்தை எதிர்கொள்கிறோம். இது போன்ற நேரத்தில், நமது தொழில்துறையானது உழைக்கும் சமூகத்தின் பலத்தில் தொடர்ந்து செயல்படுகிறது – மேலும் அவர்களின் நல்வாழ்வுக்காக உழைக்க வேண்டியது நமது முதன்மையான பொறுப்பு. ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களின் தேவைக்கேற்ப நலத்திட்டங்களைச் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் பலர் இந்தத் திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றனர்.” என கூட்டு ஆடைகள் சங்கங்கள் மன்றத்தின் (JAAF) பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ், தெரிவித்துள்ளார்.

சுமார் 80% ஆடை உற்பத்தியாளர்கள் வருடாந்த சம்பள உயர்வுகளுக்கு மேலதிகமாக அவர்களின் வாழ்க்கைச் செலவுகளை சமாளிப்பதற்குத் தேவையான கொடுப்பனவுகளை இப்போது அதிகரித்துள்ளனர். இது 25% அதிகரிப்பு மற்றும் இந்த மேம்பாடுகள் 2021 முதல் அமலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு ஊழியர்கள் தங்கும் கூடங்கள், உணவகங்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் போன்ற அவுட்சோர்ஸ் சேவைகள் உட்பட தொழிற்சாலைகளின் உள்ளக ஊழியர்களை வலுப்படுத்த சில தொழிற்சாலைகள் உலர் உணவு விநியோக திட்டங்களையும் தொடங்கியுள்ளதாக லோரன்ஸ் மேலும் குறிப்பிட்டார். சில தொழிற்சாலை தொழிலாளர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல கூடுதல் உணவும் வழங்கப்படுகிறது, இது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவை வழங்குவதற்கும் உதவும். குறிப்பாக SME துறையில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகள், குழந்தைகளுக்கான பள்ளி பாடப்புத்தகங்கள், இலவச மருத்துவ பராமரிப்பு மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு உணவுப் பொதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

“எங்கள் ஊழியர்களுக்கு உதவுவதற்கும், இந்த கடினமான காலங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.” என லோரன்ஸ் மேலும் வலியுறுத்தினார்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: