Eyeview Sri Lanka

‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டம்: முதல் 2 மாத வெற்றியாளர்கள் கௌரவிப்பு

Share with your friend

Hemas Consumer Brands நிறுவனத்தின் 20 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட நம்பகமான சலவை பராமரிப்பு தயாரிப்பு வர்த்தகநாமமான தீவா, தனது விசுவாசமான நுகர்வோரை பாராட்டி பரிசளிக்கும் வகையில் அண்மையில் ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ‘தீவா காணி அதிர்ஷ்டம்’ பிரசாரத்திற்கு கிடைத்த பாரிய வரவேற்பு மற்றும் வெற்றியைத் தொடர்ந்து, இந்த உற்சாகமூட்டும் ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் பெறுமதிமிக்க பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பை இது நுகர்வோருக்கு வழங்குகிறது. இதில், மாபெரும் பரிசை வெல்லும் வெற்றியாளர், புத்தம் புதிய Toyota WiGO காரை வெல்லும் வாய்ப்பை பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இத்திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களுக்கான சீட்டிழுப்புகள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, தீவாவின் அதிகளவான விசுவாசமான நுகர்வோர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். முதல் மாத வெற்றியாளர்களான வெல்லவ பகுதியைச் சேர்ந்த கெலும் சந்தன மத்துகமவைச் சேர்ந்த புஷ்பா சந்தமாலி ஆகியோர் சலவை இயந்திரங்களை வென்றுள்ளனர். மாவனெல்லவைச் சேர்ந்த வோல்டர் பக்மீதெனிய மற்றும் ரிகில்லகஸ்கடவைச் சேர்ந்த காந்தி ரத்நாயக்க ஆகியோர் தொலைக்காட்சிகளை வென்றுள்ளனர். அத்துடன், வத்தளையைச் சேர்ந்த எம். மிஃப்தா மற்றும் பாணந்துறையைச் சேர்ந்த எச்.ஏ. சந்திரசேகர ஆகியோர் மடிகணனிகளை பரிசாக பெற்றனர்.

இரண்டாம் மாத வெற்றியாளர்களான ராகமவைச் சேர்ந்த மெலிசா கூரே மற்றும் குளியாப்பிட்டியைச் சேர்ந்த எச்.எம். கபில ஜயவிலால் ஆகியோர் சலவை இயந்திரங்களைப் பெற்றனர். இதேவேளை, எப்பாவலவைச் சேர்ந்த டி. கே. மஹேஷ் சத்துரங்க திஸாநாயக்க மற்றும் பாணந்துறையைச் சேர்ந்த அனுஷ்கா மனுரி ஆகியோருக்கு மடிகணனிகள் வழங்கப்பட்டன. கொட்டாவையைச் சேர்ந்த ரி.சி. கீகனகே மற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த டி. டி. நிலந்தி பெரேரா ஆகியோருக்கு தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டன.

இந்த திட்டத்தின் மூலம், தீவா பல்வேறு பரிசுகளை வழங்குவதோடு மாத்திரமன்றி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையினர் தமது வர்த்தகநாமத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்தையும் கௌரவித்து கொண்டாடுகின்றது. இந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்கு கிடைத்த மகத்தான வரவேற்பானது, தீவா தனது நுகர்வோருக்கு தனது வர்த்தகநாம வாக்குறுதியை தரமானதாகவும் தொடர்ச்சியாகவும் வழங்குவதன் அடிப்படையில் கட்டியெழுப்பியுள்ள பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும்.

உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற மற்றும் மதிப்பு மிக்க வாகன வர்த்தகநாமமான Toyota உடன் கூட்டுச்சேர்ந்து, ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ பாரிய நுகர்வோர் ஊக்குவிப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், தீவா தனது நுகர்வோருக்கு வழங்கும் மதிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் எதிர்பார்ப்பு மிக்க மாபெரும் பரிசான Toyota WiGO, இத்திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் முக்கிய இடத்தை வகிப்பதுடன், அதை இன்னும் மறக்க முடியாததாக மாற்றவுள்ளது.

இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்று, அற்புதமான பரிசுகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பைப் பெறுமாறு அனைத்து இலங்கை நுகர்வோருக்கும் தீவா அழைப்பு விடுக்கிறது. தீவா சலவைத் தூளை வழங்கும் ஒரு வர்த்தகநாமத்திற்கு அப்பால், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் உள்ள வீடுகளில் ஒரு நம்பகமான பெயராக, நுகர்வோருக்கு தனது விசேடத்துவத்தையும், புத்தாக்கம் மற்றும் அக்கறையையும் வெளிப்படுத்தி வருகிறது.


Share with your friend
Exit mobile version